SK
நான் அதிகமா பதிவு எழுதறது இல்லை. அதுக்கு ஒரு முக்கிய காரணம் சோம்பேறி தனம். அதோட இதை செய்யணும் அப்படிங்கற தொடர்ந்து செய்யணும் அப்படிங்கற ஒரு உணர்ச்சி இல்லை. பதிவு எழுத ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கற இருக்கற மன நிலை முடிக்கும் போது இருக்கறது இல்லை. இப்படியே நிறைய பதிவு எழுதாம இருக்கு.

இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச்சா போல இருந்தது எனக்கு.

சத்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தலை வணங்குகிறேன் ஐயா. நன்றி ரஞ்சித் உங்க பதிவுக்கும்.

பதிவர்கள் பலர் நிறைய நல்ல காரியங்கள் செய்யறாங்க. வெளில சொல்றதுக்கு ஒரு வித தயக்கம். எதிர் வினை, சுய புராணம், தற்புகழ்ச்சி இது போல ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். இதுனால பல நல்ல காரியங்கள் வெளில தெரியாமலையே போய் விடுகிறது. வேலைய விட்டுட்டு முழு நேரம் இது போல செய்யறவங்க பத்தி எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். நீங்க எல்லாம் தான் எங்களை ஊக்குவிப்பவர்கள். உங்களுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிணறு வெட்ட பூதம் அப்படின்னு திரு. ரமேஷ் சதாசிவம் பதிவு எழுதி இருந்தாரு. அதை போன பதிவுல கொடுத்து இருந்தேன்.

அந்த பதிவுல திரு. நடராஜ் ஐ. பி. எஸ். அவர்கள் வந்து பதில் எழுதி தன்னை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தாரு. படிச்சா ஒடனே கொஞ்சம் சந்தோஷமும் அதிக நம்பிக்கையும் வந்திச்சு. எதாவது நியாயம் கிடைக்கும் சொல்லி. நம்ம நாடும் உருப்பட நல்லாவே வாய்ப்பு இருக்கு.

இன்னொரு பக்கம் நம் எழுத்தினுடைய தாக்கம் புரிஞ்சது. எழுதும் போது ரொம்ப நிறுத்தி நிதானமா எழுதனும்னு பொறுப்பும் வந்தது. இந்த களத்தை பல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தனும்னு எண்ணனும் வந்தது. அனாவசிய சண்டைகளையும், சச்சரவுகளையும் தவிர்த்து ஏதாவது நம்மாலான உருப்படியான காரியம் செய்யனும்னு தோணிச்சு. பாக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேற்று தினமலர்ல ஒரு செய்தி பாத்தேன். (இப்போ என்னிடம் லிங்க் இல்லை) ஒரு விளையாட்டு வீராங்கனை அரசிடம் இருந்து போதிய சலுகைகளும், மற்ற உதவியும் இல்லாமையும், வந்து சேர வேண்டிய சலுகைகள் இல்லத்துனாளையும் தட்டு கழுவுவதும், உணவு பரிமாறுவது போன்ற வேலைகள் செய்யறாங்கன்னு போட்டு இருந்தது. இவுங்க தேசிய அளவிலோ, ஆசியா அளவிலோ விளையாடி பதக்கங்கள் எல்லாம் வாங்கி இருக்காங்கன்னு போட்டு இருந்தது. இது தான் நம்ம நாட்டோட விளையாட்டு வீரர்களின் நிலைமை. இனிமே நாம விளையாட்ட பத்தி அடுத்த ஒலிம்பிக்ஸ் அப்போ இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்காது பாருங்கன்னு பந்தயம் கட்டலாம். :( அதை பத்தி அப்போ மட்டும் யோசிச்சா போதும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புடன்
எஸ். கே.
7 Responses
  1. RAMYA Says:

    எப்போதாவது பதிவு போட்டாலும் அருமையான சுட்டிகளுடன் போடறீங்க குமார் கையேடு படிச்சேன். திரு.சத்யாவின் உழைப்பு எனக்கு நெகிழ்வை கொடுத்தது.

    மீதி ரெண்டு வலைகளை அப்புறம் படிக்கறேன்.

    நிறைய எழுதுங்க. உங்கள் எழுத்துக்கள் எல்லாம் மிகச் சிறப்பு மிக்கதா இருக்கின்றது.

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் குமார்.


  2. அருமையான சுட்டி லிங்க்கிற்கு நன்றி குமார்.

    கிணறு வெட்ட பூதம் !! ஆச்சரியம்.
    இப்படி ஒரு ரெஸ்பான்ஸா.

    இந்த களத்தை பல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தனும்னு எண்ணனும் வந்தது. //

    :)- நன்றி

    வீராங்கனையின் கதை - :(


  3. SK Says:

    நன்றி ரம்யா மற்றும் அமித்து அம்மா.


  4. Anonymous Says:

    குமார், உங்கள் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யுட், தொடருங்கள்...வாழ்த்துக்கள்


  5. SK Says:

    நன்றி மயில் அக்கா. :)


  6. Sowmya Gopal Says:

    இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச்சா போல இருந்தது எனக்கு - nejama !! nammalum idhu madhri edhavadhu urupidiya panna koodadhanu oru ennam/eakam vera...ennatha akkam akara thembu, muyarchi, manasu enakku irukanumnu asai padaren...parpom !


  7. SK Says:

    எண்ணம்/ஏக்கம் இதை செயல் படுத்த நாம சின்ன சின்ன அடியா எடுத்து வைக்கணும் SG. நாம இங்கே இருந்து என்ன செய்ய முடியும்னு யோசிச்சு அதை செய்ய ஆரம்பிக்கணும். தள்ளிப்போட்ட போட்டுகிட்டே இருப்போம்.