SK
நண்பர்களே,

தாமதமாக பதிவு எழுத மன்னிக்கவும். '' பற்றி முன்பே எனது பதிவில் சொல்லி இருந்தேன். அவர்களுக்கு மீண்டும் உதவி தேவை அப்படின்னு சொன்னாங்க. இந்த விடயத்தை திரு. மாத்யு அவர்களிடம் கேட்டு எனக்கு மெயில் மூலம் திருபடித்திய அமிர்தவர்ஷிணி அம்மா அவர்களுக்கு நன்றி.

அதோட இல்லாம அவுங்க இந்த தடவை இதுக்கு உதவ முயற்சி செய்யறாங்க. தேர்வு எழுதும் அவர்களுக்கு உதவும் அமிர்தவர்ஷிணி அம்மா மற்றும் அப்துல்லா போன்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நீங்க எல்லாம் செய்யும் போது எங்களுக்கும் எதாவது உதவி செய்யனும்னு தோனுது. அந்த நம்பிக்கை விதைத்தமைக்கு நன்றிகள்.

விவரங்கள் கீழே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

விரிவான அட்டவணை இந்த சுட்டியில் இருந்து எடுத்துகொள்ளவும்.

http://www.mediafire.com/?znwgenm0hiz
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி.

அன்புடன்
எஸ். கே.
Labels: 7 comments | edit post
SK
உதவி செய்யரதுலையே ரொம்ப பொன்னானது எது. காசு பணம் கொடுக்கறதா?? அது கொடுத்ததை தான் ஒரு மாசம் அதிகமா வேலை பாத சம்பாதிசுடலாமே.

சரி அப்பறம் சோறு போடறதா ?? ஒரு வேலை சோரோ ஒரு மாச சோரோ போட்டு என்ன பெரிய மாற்றம் வர போகுது..

சரி அப்பறம் கடவுளுக்கு கொடுப்பாங்களே முடி, அதுவா ?? ஏங்க, வெட்டுன முடி வளராது சொன்னா எவனாவது அவளோ எளிதா மொட்டை அடிச்சுபாங்களா ??

சரி அப்பறம் என்ன தாண்டா சொல்ல வரேன்னு கேக்குறீங்களா. நேரம். நாம ஒருதங்களுகாக செலவிடுகிற நேரம். என்ன இப்போ விட்ட அப்பறம் புடிக்க முடியாது. போனது போனது தான். உதாரணத்துக்கு கல்யாணம் செஞ்ச அப்பறம் பொண்ணுங்க தான் கணவன் கிட்டே இருந்து எதிர் பாக்கறது, அவ கூட கொஞ்சம் நேரம் செலவிடரானா அப்படின்னு தான்.

சரி கதை எங்கயோ போகுது ?? அது எல்லாம் இருக்கட்டும், இப்போ இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தானே கேக்குறீங்க. மேல படிங்க. அட மேலன்னு உடனே ஆரம்பத்துக்கு போய்டாதீங்க, கீழ எழுதி இருக்கற விவரத்தை படிங்கன்னு சொன்னேன்.

நேத்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதுலே இருந்த விஷயத்தை நான் கீழ கொடுத்துடறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Dear friends,
Some of the visually challenged students at Loyala College, Chennai require SCRIBES, who can write the Exams for them & hence helping them pass thru the academic successfully. Basically the role of a SCRIBE is to just read the question paper for the student and write the answers dictated by the students in the Answer sheet. Please check the attached excel for exam schedule.If you and your friends could spare around 3 hours on any of the days mentioned in the excel, these students would be really thankful.Please do consider this as a direct request from the students

Please contact Mr.Mathew 9444223141 for further communication.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரி ஏதோ நம்பிக்கையா இருக்கேன்னு சொல்லி நம்ம அப்துல்லா அண்ணனுக்கு அதை மாதி அனுப்பினேன்.

ஒரு மணி நேரத்துலே பதில்

'மேத்யூவிடம் பேசி விட்டேன். நாளை நானே பரிச்சை எழுதப் போகிறேன்' அப்படின்னு??


வாய் அடைச்சு போய் நின்னுட்டேன். கலக்கிடீங்க அப்துல்லா அண்ணே.

சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு. பதிவு எழுத வேணாம்னு இருந்தே என்னை எழுத வெச்சுடீங்க.

என்னோட மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.