SK

அது என்ன கெட்ட வார்த்தை ?? நானும் ரொம்ப யோசிச்சு பாத்தேன்.

ஒருத்தங்கள திட்டனும்னா சின்ன வயசுலே நாயே, பேயே, பன்னி அப்படின்னு ஆரம்பிக்கறது, கொஞ்ச வயசு ஆனா அப்பறம் மயிறு, மட்டை ஆகி அப்படியே ஒ.. , பு.. , .. இப்படின்னு பறந்து விரிஞ்ச ஒரு தனி விளக்க புத்தகமே எழுதலாம்.

எனக்கு நினைவு தெரிஞ்சு பன்னிரண்டாவது படிச்ச வரைக்கும், என் காலேஜ்ல மொத வருஷம் வரைக்கும் அதிகமா இது எதுவுமே பேசினது இல்லை. முடிஞ்சா வரைக்கும் சிரிச்சு மழுப்பியோ எதாவது செஞ்சு இருக்கேன். ஆனா ரெண்டாவது வருசத்துக்கு அப்பறம் என்னை நான் காப்பதிக்கனும்னா குரலை உசத்தி கத்துனாதான் உண்டுன்னு ஆச்சு அப்படின்னு முடிவு செஞ்சேன்.  அதோட நிறைய பேரு வாய அடைக்கனும்னா எனக்கு இதை விட்ட வேற வழியும் தெரியலை.

அப்பறம் ஒரு காலத்துல குட் மார்னிங் கூட எதாவது ஒரு கெட்ட வார்த்தை கூட தான் வரும் .. அதுவும் நண்பர்கள் வட்டத்துல பேசும் போது. 

இதே தான் அப்பறம் மூணு வருஷம் தொடர்ந்து நடந்தது. வெளி நாடு வந்த அப்பறமும் இதுவே அப்படியே போச்சு. அதோட சந்தோஷமோ, துக்கமோ, விரக்தியோ. வெறுப்போ, வெற்றியோ, தோல்வியோ, இது நம்மோட கலந்த ஒன்னா போச்சு. அதுவும் சில நேரத்துலே அதோட அர்த்தம் எல்லாம் யோசிச்சோம்னா மனசு ரொம்ப கஷ்ட படும். அதுவும் நாம யாரை திட்டனுமோ அவங்களை திட்டாம, அவிங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, மாமா, மச்சான், எல்லாரையும் இழுத்து தான் திட்டுவோம். எப்போ பேசினாலும் நமக்கு அதை பத்தி யோசிச்சதே கெடையாது .

இப்படி இருந்த நம்ம வாழ்க்கைல ஒரு மாற்றம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சூழ்நிலை காரணமா ஒரு ஹோட்டல்ல வேலை செய்யறதுக்கு சேந்தேன். அது வந்து ஒரு ஹிந்தி காரங்க ஹோட்டல். நாம தான் தமிழ் தூக்கி வளத்த தமிழ் மகன் ஆச்சே. அதுனால ஹிந்தி பேச தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் புரியும். அதுவும் இது மாதிரி ஹோட்டல்ல சமையகட்டுலே வேலை செய்யறது எனக்கு ரொம்ப புதுசு. பழக்கமும் கெடையாது.  ஆக மொத்தம் தப்பு செஞ்சு தான் எல்லாமே கத்துக்கணும். இந்த ஹோடல்ளோட சொந்தகாரரு எப்படின்னா கெட்ட வார்த்தையின் ஒட்டுமொத்த களஞ்சியம். அதுவும் கூட்ட நேரம் வேலை அதிகமா இருக்கும் போதோ, ஏதாவது தப்பு செஞ்சாலோ வர்ற வார்த்தைய காது கொடுத்து கேக்க முடியாது. அதுவும் குட் மார்னிங், குட் இவினிங் சொல்றா மாதிரி ஆகி போச்சு. அதுவும் நமக்கு பாஷையும் புரியாம, இவரு என்ன திட்டராரா, இல்லை நட்போட கூப்பிடறாரா  ஒண்ணுமே புரியலை. ஆனா சில நேரத்துலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

இப்போ உரைச்சது இந்த மர மண்டைக்கு  அதுவும் செருப்பால அடிச்ச போல இருந்திச்சு. இப்போ தான் நம்ம மனச்சாட்சி அண்ணே உள்ளே இருந்து வெளில வந்து கேட்டாரு ஒரு கேள்வி, ' ஏண்டி மாப்ள, நீ பேசினா அது பிரன்ட்லி, இதுவே இன்னொருத்தங்க உன்னை பாத்து சொன்னா பீளிங்க்சான்னு'. கேட்ட கேள்வி சரி தானுங்களே.

சரி என்ன பண்ணலாம் அதான் புத்தாண்டு வருது அப்போலேந்து எந்த விதாமான கெட்ட வார்த்தையும் பேசமா நிறுத்திடலாம். அடேய் நிறுத்தறதுன்னு ஆகி போச்சு அது என்ன புது வருஷம், பழைய வருஷம் .. 'நிறுத்து .. உடனே நிறுத்து '

ரைட் ஆபிசெர்..

மக்களே, எல்லாரும் ஆண்டவன் கிட்டே எனக்கு அந்த பொறுமைய கொடுக்க சொல்லி வேண்டிக்கோங்க சொல்லிபுட்டேன் .

இதே கெட்ட வார்த்தை பத்தி இன்னொரு அனுபவம் இருக்கு.. அதை முடிஞ்சா நாளைக்கு இதே பதிவுல அப்டேட் பண்றேன் இல்லை தனி பதிவ போடுறேன் ..

அன்புடன்
எஸ். கே

SK
வணக்கம் மக்களே,

இதை எழுதலாமா வேற எதாவது எழுதலாமா. இப்படி எழுதின அவுங்க வருத்த படுவாங்கலோ அப்படி இப்படின்னு பயங்கர குழப்பத்துக்கு அப்பறம் சரி இதை எழுதலாம்னு முடிவு.

இனி என்னோட புலம்பல்

போன வாரம் ஒரு நண்பன் கிட்டே பேசிட்டு இருந்தேன். பேச்சு அப்படி இப்படி எப்படி எல்லாமோ போய் ஒரு இடத்துலே 'எனக்கு தனிமைனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான்'. அப்படியா செல்லம், அப்படி தனிமைனா என்ன அப்பு செய்வேன்னு கேட்டேன்.

காரையோ, வண்டியோ (அட வண்டின்னா மாட்டு வண்டி இல்லீங்க, டூ வீலர்), கைபேசியும் எடுத்திகிட்டு யாரும் இல்லாத இடமா போய் ஒக்காந்து, கைபேசியும் அணைச்சிட்டு இயற்கைய ரசிப்பாராம். இது பேரு தான் தனிமை.

இதே மாதிரி நிறைய ஆசாமிங்க இருக்காங்க, வெளில அம்மா சீரியல் பாத்துகிட்டு இருக்கும் போது தனியா தன்னோட அறைக்குள்ள போய் ஒக்காந்து பல்லு குத்தினா தனிமையாம்.

ஏன்பா இதுவா தனிமை.. அறுபது மணி நேரம் தனிய ஒரு அறைக்குள்ள மட்டும் சாப்பாடு தண்ணி இல்லாம கூபிட்டா ஏன்னு கேக்க ஆள் இல்லாம கைபெசில சார்ஜ் போய் யாரு கிட்டயும் பேசவே முடியாம இருக்கறது பேரு என்னங்க அப்படின்னா.

இது ஒரு விதம். இன்னொரு விதம் இருக்கு. மொழி தெரியாத ஊரு. உன்னை புரிஞ்சுகாத மனுஷங்க. உன்னால புரிஞ்சுக்க முடியாத கலாச்சாரம். பழக்கமே இல்லாத சாப்பாடு. இதுக்கு மேல என்னன்னு கேக்க ஆள் கிடையாது. அப்போ தான் சினிமா வசனம் எல்லாம் நெனப்பு வரும், 'அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய' அப்படின்னு எல்லாம். இது மாதிரி ஒரு சூழல்ல ஒரு கடினமான நேரம், எது செஞ்சாலும் தப்பா போகும். என்ன பேசினாலும் தப்பா புரியப்படும்.

கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.

அழுகை மட்டுமே ஆறுதலாய் இருக்கும்...


இனிமே யாராவது ரூமுக்கு உள்ளே போய் எனக்கு தனிமை புடிக்கும்னு சொல்லுங்க அப்பறம் பேசிக்கறேன்.

போன நவம்பெர்ல தனிமைல இருதப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்த இரு நண்பர்கள் நினைவாக ...

அன்புடன்
எஸ். கே.