SK
நவம்பரும் டிசம்பரும் அடியேனும் அப்படின்னு ஒரு பதிவு எழுதி எனக்கும் நவம்பருக்கும் டிசம்பருக்கும் உள்ள பயத்தை சொல்லி இருந்தேன். நிறைய நண்பர்களின் அன்பும், வேண்டுதலும், ஆண்டவனின் கருணையும் இந்த நவம்பர் டிசம்பர் நல்ல படியாகவே சென்றது ஒரு இரண்டு நாட்கள் வம்பைத்தவிர. அதோடு இந்த டிசம்பர் மாதம் பல வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்தது அப்படின்னு சொன்னா அது மிகையே இல்லை.

கடந்த ஒரு நாலு நாட்களுக்கு முன் இவரை பார்க்கும் வரை மண் போல இருந்த என் பிரச்சனைகளை மலை போல நினைத்து இருந்தேன். இவரை சந்தித்த பிறகு, இவருடன் சற்று பேசிய பிறகு, இரண்டு நாட்கள் இவருடன் செலவிட்ட பிறகு நான் என்னுடைய முன்னாள் பதிவான நவம்பர் டிசம்பர் பதிவை நினைச்சு வெட்க படுகிறேன். யார் இவர் ? அப்படி என்ன சொல்லிட்டார் ? அப்படி என்ன செய்யறாரு ?

கடந்த பத்து ஆண்டுகளாக ஜெர்மனியில் மாஸ்டர்ஸ் முடித்து விட்டு இப்போது Ph.D. படித்து கொண்டு இருக்கிறார். இவருக்கு வயது 43. 2010இல் படிப்பை முடித்து விடுவேன் என்று கூறுகிறார். ஜெர்மனியில் எங்கும் தனியே பயணம் செய்கிறார், யாரும் எதற்கும் உதவி இல்லை. உலக விடயங்கள் அனைத்தும் விரல் நுனியில். ஜெர்மன் மொழிப்புலமையும் அருமை. தனது Ph.D. தீசிசையும் ஜெர்மன் மொழியில் தான் எழுதி வருகிறார். இவருக்கு கடந்த பத்து ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை என்று எதுவும் இல்லை. இங்கு மாணவர்கள் வேலை பார்க்கலாம் என்று இருக்கும் சட்ட விதிக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அப்படி வேலை செய்து தனக்கு தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்கிறார். இது எல்லாம் என்ன பெரிய விடயமா என்று நினைப்பவர்களுக்கு, ஆம், இவை அனைத்தும் பெரிய விடயமே. இரண்டு கண்ணும் தெரியாதவருக்கு.

பிறவியில் இருந்து கண் பார்வை இல்லை என்றால் அது ஒரு வித கடினம். இவருக்கு 21 வயது வரை கண் பார்வை இருந்து உள்ளது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை முழுதும் இல்லாமல் போய உள்ளது. இவரது தன்னம்பிக்கையும், மொழிப்புலமையும், அனைத்தையும் தானே செய்து கொள்ளும் மனப்பக்குவமும் கண்டு வெட்கப்பட்டு நின்றேன்.

இவரை பற்றிய சில குறிப்புகள்.

அ. தன்னுடைய கணினியில் தானே அனைத்து வேலையும் செய்கிறார். அதற்கு தனியாக ஒரு வாய்ஸ்/ஆடியோ உதவி செய்யும் ஒரு மென்பொருள் வைத்து உள்ளார். எங்கு எதை சேமித்தோம் என்று தெளிவாக நினைவில் கொள்கிறார். (நானு ஒரு கோப்பை எங்கே சேமித்தேன்னு ஒன்பது மணி நேரம் தேடி இருக்கேன் )

ஆ. உணவு : தினமும் காலையில் பிரட்/பட்டர், மதியம் - இங்கு உள்ள கல்லூரி உணவு விடுதிகளில், இரவு இரண்டு பழங்கள். கடந்த பத்து ஆண்டுகளாக இதே வழி முறையை பின் பற்றுகிறார் (நானு சாம்பார்ல உப்பு கம்மி, ரசத்துல புளிப்பு அதிகம்னு குறை சொல்லிக்கிட்டு இருக்கேன்)

இ. எந்த பேருந்து எங்கு நிற்கும், எத்தனை மணிக்கு வரும், எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார். ரயில் நிலையங்களில் யாரிடமேனும் உதவி கேட்டு அதற்கு தேவையான வண்டிகளை பிடித்து செல்கிறார். தன்னுடைய கடிகாரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் அது மணியை சொல்கிறது. அனைத்தையும் சரியாக முறையாக செய்கிறார்.

ஈ. வார இறுதி நாட்களில், பக்கத்து ஊர்களுக்கு சென்று மொழிபெயர்ப்பு வேலை செய்து தனது செலவுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொள்கிறார். (அஞ்சு வருஷமா இன்னும் சரியா நான் மொழி கற்றுக்கொள்ளவில்லை)

உ. உலக விடயங்கள் அனைத்தும் விரல் நுனியில். எப்படி சார் அப்படின்னு கேட்டா '21 வயசு வரைக்கும் IFS யில் சேர வேண்டும் அப்படின்னு என்னை நானே தயார் படுத்திகிட்டேன், கண் பார்வை போனதினால் முடியவில்லை' அப்படின்னு சிரிச்சுகிட்டே சொன்னார். (எனக்கு தெரிஞ்ச போது அறிவு எங்க அப்பாவும் அண்ணனும் சாப்பிடும் போது இலைல ஒக்காந்து கிட்டு பேசறதை நான் கேட்பது தான் )

இவரை கண்ட பிறகு என் பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு மண் போலத்தான் தெரிந்தது. என்னுடைய நவம்பர் டிசம்பர் பதிவை படிச்சு ஊரே சிரிப்பது போல இருந்தது. இந்த டிசம்பர் எனக்குள் பல உத்வேகத்தையும்/ நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.

இதோ ஒரு புதிய ஆண்டு பிறக்கிறது. இவர் கொடுத்த நம்பிக்கையும், இனி என் வாழ்வில் எதற்காகவும் சோர்ந்து இருக்க கூடாது என்ற பாடத்தை கொடுத்தது. இவர் மன தைரியமும், வெற்றியும் பெற என் வாழ்த்துக்கள்/பிரார்த்தனைகள். உங்கள் அனைவரின் பிராத்தனையும் அவருக்கு நிச்சயம் தேவை.

இன்றில் இருந்து இனி பொலம்ப மாட்டேன். என் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்வேன். அதற்கான நம்பிக்கையுடன் இருக்க அனைத்து முயற்சியும் செய்வேன். இதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். நண்பர்களின் அன்பும் வேண்டும்.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

அன்புடன்
எஸ். கே.
SK
இன்று தனது சிறுகதை தொகுப்பை வெளியிடும் நர்சிம் அவர்களுக்கும், தனது கவிதை தொகுப்புகளை வெளியிடும் பா. ராஜாராம், என். விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், TKB காந்தி அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அகநாழிகை பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.

வெளியீட்டு விழா குறித்த மேலும் விவரங்கள் இங்கே.

தேதிய பாத்தா உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த தேதிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஆம். மகாகவி பாரதியின் பிறந்த நாள். நீ கனவு கண்ட சமுதாயம் அமைக்க முயற்சி செய்வோம்.

அன்புடன்
எஸ். கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிஸ்கி :

மனசாட்சி : ஏன்டா மாமா, இத்தன நாளா இல்லாம எங்கே இருந்து உனக்கு பாரதி பொறந்த நாள் நெனப்பு வந்திச்சு.

நான் : டேய் நான் எல்லாம் ....

மனசாட்சி : போதும் நிறுத்துடா. எனக்கு தெரியாதா. நாளைக்கு தலைவர் பொறந்த நாள். எதாவது பதிவு போட்டா, நேத்து பாரதி பொறந்த நாள் பதிவு போடணும்னு உனக்கு நினைவு இல்லைன்னு நான் கேப்பேன்னு முந்திகிட்டியா :-)

நான் : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
SK
அரசியல் தலைவர்

பிடித்தவர்: ஜெயலலிதா (ஆளுமை - குறிப்பா மழை நீர் சேமிப்பு அமுல் படுத்திய விதம், ஜெயந்தரர் அவர்களின் கைது ... )

பிடிக்காத‌வ‌ர்: அதே ஜெயலலிதா (அதே ஆளுமை அடாவடியாய் ஆகும் பொழுது + சேர்வார் தோஷம்)

நடிகர்

பிடித்தவர்: தலைவர் ஒருவரே

பிடிக்காத‌வ‌ர்: சிம்பு. நல்ல திறமை சாலி ஆன எதோ கொஞ்சம் அதிகம் பாத்தாலே பத்திகிட்டு வருது..

ந‌டிகை

பிடித்தவர்: ஷாலினி அஜித், ஜோ

பிடிக்காத‌வ‌ர்: நயன்தாரா

இசையமைப்பாளர்

பிடித்தவர்: இளையராஜா, ARR

பிடிக்காதவர்: தேவா. மெட்டுக்களை அப்படியே சுடுவதனால். ஒரு பாட்டு கூட வெளில போட முடியலை. எவனாவது வந்து இது எங்க ஊரு பாட்டு அப்படின்னு சொலலிடுவானோ அப்படின்னு பயமா இருக்கு.

நகைச்சுவை நடிகர்கள் :

பிடித்தவர் : நாகேஷ் (குறிப்பா காதலிக்க நேரம் இல்லை கதை சொல்லும் இடம் )

பிடிக்காதவர் : சிலேடை அர்த்தங்கள் மற்றும் ஆபாசமாக சிரிக்க வைக்க முயற்சிக்கும் எவர் ஆயினும்.. விவேக், வடிவேலு, சந்தானம் மேலும் தலைவர் உட்பட (முருகா முருகா முருகா ... !!!)

இயக்குனர் :

பிடித்தவர் : ராதா மோகன் (அழகிய தீயே + மொழி - இரண்டும் எனக்கு ரொம்ப புடிச்ச படம்)

பிடிக்காதவர் : அப்படியே உள்ளதை உள்ளபடி எடுக்கறேன்னு சொல்லி ரொம்ப பீல் பண்ண வைக்கறவங்க எல்லாருமே :(


விளையாட்டு வீரர் :

பிடித்தவர் : விஸ்வநாதன் ஆனந்த்.

பிடிக்காதவர் : இதுல யாரையும் புடிக்காதுன்னு சொல்ல முடியலை. ஏன்னா அவன் அவன் கஷ்டப்பட்டு ஒரு டீம்ல செலக்ட் ஆகி அவ்வளவு அரசியலையும் கடந்து விளையாடறான். ஆனா சமீபத்துல ஸ்ரீசாந்த் செய்வது புடிக்கலை. தன்னை ஒரு கட்டுக்குள் வெச்சுக்க தெரியலை. அது ஒரு விளையாட்டு வீரருக்கு நல்ல பழக்கம் இல்லை.

பேச்சாளர் :

பிடித்தவர் : சுகி சிவம் (போற போக்குல சின்ன சின்ன விடயங்களை சொல்லிப்போவார்)

பிடிக்காதவர் : ஒரு தலைப்பு கொடுத்து பேச சொன்னா அதை பத்தி பேசாம தனக்கு புடிச்ச ஒன்னை பத்தி பேசற யாரையுமே புடிக்காது.

என்னை மாட்டி விட்ட அமித்து அம்மாவுக்கு ரொம்ப நன்றி.
அன்புடன்
எஸ். கே.
SK
சமீபமா மல்லாக்க படுத்து யோசிக்கும் எனக்கும் இந்த நவம்பர் மாசத்துக்கும், டிசம்பர் மாசத்துக்கும் பயங்கர தொடர்பு இருக்கறதா பட்சி சொல்லிச்சு. 2002'ல இருந்து யோசிச்சு பாத்தேன், ஒவ்வொரு நவம்பரும் டிசம்பரும் எனக்கு நித்திய கண்டம் பூரனாயிசா தான் போகுது. நீங்களே சொல்லுங்க நண்பர்களே இதுக்கு நான் என்ன பண்ணலாம்னு.

2002 :

நான் கல்லூரில கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தேன். கம்பெனி எல்லாம் வந்து ஆள் எடுக்கற நேரம். நாங்க எல்லாம் கொள்கைல ரொம்ப பிடிவாதமா இருக்கோம்னு சொல்லி சாப்ட்வேர் வேலை எதுக்கும் உட்காரலை. என்னோட படிப்பு சம்பந்தமா கம்பெனி அதிகமா வரலை. அதுக்காக கம்பெனி எல்லாம் கூப்பிடறதுக்கு நாங்களா ஒரு ஆறு பேரு கிளம்பி மெட்ராஸ் போய் கம்பெனி எல்லாம் கூப்பிட்டு வந்தோம்.

மதராஸ்ல வேகாத வெயில்ல பத்து நாள் சுத்து சுத்துன்னு சுத்திட்டு கோயம்புத்தூர் திரும்ப வரும் பொது தேதி டிசம்பர் 25. வந்து படுத்தவன் தான் எந்திரிக்க முடியலை. சரியான காய்ச்சல். பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போய்டேன். அங்கே போனா சொல்றாங்க, அம்மை போட்டு இருக்கு உனக்கு. இன்னும் மூணு வாரம் நகர முடியாது அப்படின்னு.

ஜனவரி முதல் வாரத்துல நாங்க மெட்ராஸ் போய் கூப்பிட்டு வந்த கம்பெனி எல்லாம் எங்க காலேஜ் வந்து ஆள் எடுத்திட்டு போய்டாங்க. பொங்கல் கழிச்சு காலேஜ் போகும் போது எனக்கு பாக்கி இருந்தது எல்லாம் பன்னு தான். :(

2003 :

படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிகிட்டு இருந்த வருஷம். இந்த வருஷ நவம்பர், டிசம்பர் எல்லாம் எப்படி போச்சுன்னே தெரியாது. திங்க கிழமை ஆபிஸ் போனா, தம்பி இன்னைக்கு நைட் கெளம்பி கோயம்புத்தூர் போயிட்டு நாளைக்கு திரும்ப வரணும்னு சொல்லுவாங்க. சில வாரம் அப்படியே கோயம்புத்தூர் போயிட்டு, ஈரோடு , சேலம் அப்படியே மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி எல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் போவேன்.

ஆனா எனக்கு தெரிஞ்சு கடைசி ஆறு வருஷ நவம்பர், டிசம்பர்ல நான் நிம்மதியா இருந்தது இந்த வருஷமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். மதராஸ்ல இருந்த இந்த நாட்களை பத்தி தனி பதிவே எழுதலாம்.

2004:

ரொம்ப கொடுமையான வருஷம். நான் ஒரு அதல பாதாளத்துல விழறேன்னு தெரியாம விழுந்த தருணம்னு சொல்லலாம். ஜெர்மனி வந்து ரெண்டு மாசம் ஆன நேரம். என்னோட அறை நண்பர்கள் இரண்டு பேரு. நான் இவ்வளவு வெள்ளந்தியா இருந்து இருக்கேன்னு இப்போ நினைச்சா கூட கண்ணை கட்டுது.

நான் இந்தியாவுல இருந்து எடுத்து வந்த பணத்துல பணத்துல ஒரு கணிசமான தொகைய நண்பர்கள் கிட்டே ஏமாந்தேன். சோ கைல காசு பூஜ்ஜியம்.

இந்த ஒரு தப்பு செஞ்சதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். எத்தனையோ தூக்கம் இல்லாத நாட்கள், பசியோடு தூங்கின இரவுகள், கம்மியா வாங்கின மதிப்பெண்கள், வாழ்க்கை மீது எனக்கு வந்த ஒரு வெறுப்பு. என்ன இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல முடியாது. சொல்லி வீட்டுக்கு தெரிஞ்ச பொட்டிய கட்ட சொல்லி உத்தரவு வந்திடும்.

2005 :

2004 செஞ்ச தப்பே என்னை தொரத்தி தொரத்தி அடிச்சது. இதுல தப்பிக்கலாம் அப்படின்னு ஊரு மாறி இன்னொரு ஊருக்கு போய் அங்கே கொஞ்சம் பணத்தோட படிப்பு சம்பந்தமா வேலை கிடைச்சுது. சரி இனியாவது ஒழுங்கா இருக்கணும் அப்படின்னு இருந்தேன். அங்கேயும் நமக்கு வந்தது சனி. நான் போன ஊருல வீட்டு வாடகை கொஞ்சம் அதிகம். சரி நாம நம்ம ஊரு மக்கள் கூட தங்கின கொஞ்சம் செலவும் கம்மி ஆகும், பேச்சு துணை மேலும் ஆள் துணையும் இருக்கும்னு நினைச்சேன். அது தான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.

நண்பர்கள் அலைவரிசை, நேரம், பொழுது போக்கு எதுவுமே என்னோட ஒத்து போகலை. நவம்பர் கொஞ்சம் டேர்ரரா தான் போச்சு. டிசம்பர்ல தனி குடுத்தனம் போறதுன்னு முடிவு செஞ்சேன். நவம்பர், டிசம்பர் 2005 ஒரு மாதிரி போச்சு. அப்போ முடிவு செஞ்ச தனி குடுத்தனம் தான் இப்போ வரை தொடருது.

2006 :

2005 வருசத்தோட எல்லா சனியும் முடிஞ்சது அப்படின்னு இருந்தா, வந்தது ஆப்பு இன்னொரு பக்கத்துல இருந்து. என்னோட மாஸ்டர்ஸ் முடிக்க தீசீஸ் செய்யணும். அது நான் வேலை செஞ்ச எடத்துலியே முடிவு பண்ணி வெச்சிட்டு, என்னோட அருமை வாத்தியார் கிட்டயும் பேசி சரி பண்ணிட்டேன். வாத்தியாரும் ஈமெயில் செஞ்சுட்டாரு. சரி எல்லாம் முடிஞ்சுடிச்சு அப்படின்னு வீட்டுக்கு சொல்ல தொலை பேசினேன். அம்மா பாசமா கூப்பிடாங்க, அதான் எல்லாம் சரியா போகுது அப்படின்னு நானும் இந்தியா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.இது எல்லாம் ரெண்டு மணி நேரத்துல நடந்தது.

இந்தியா வந்து இறங்கி மெயில் செக் செஞ்சா, வந்தது குண்டு. என்னோட வாத்தியார் எதோ குழப்பம் செஞ்சுட்டாரு. இனி நான் அந்த கம்பெனில தீசீஸ் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சது. இருபது நாள் இந்தியாவுல, நிம்மதியா இருக்கவும் முடியலை. கவலை பட்டுகிட்டே இருக்கவும் முடியலை.

2007 :

நல்ல படியா தீசீஸ் எல்லாம் செஞ்சு முடிக்க வேண்டிய நேரம். எப்போதும் போல தீசீஸ் செய்யற நேரத்துல இருக்கற வேலை. முடிஞ்சா போதும் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிகிட்டு இருந்த நேரம், நான் கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.

2008 :

கொஞ்சம் உஷாரா இருக்கணும்னு இருந்தேன். இருந்தாலும் ஆப்பு அடிச்சுடிச்சு. நல்லா வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட வேலை, மக்கர் பண்ணிச்சு. திரும்ப ஜெர்மனி விட்டு ஓடிடலாம் அப்படிங்கற அளவுக்கு தொரத்தி தொரத்தி அடிச்சது. அப்பறம் அதுல இருந்து தப்பிச்சு வந்த்துட்டேன்.

இதோ இன்னும் ஒரு வாரம், 2009 வருஷத்துக்கான நவம்பர், டிசம்பர் எனக்கு என்ன சொல்லித்தர போகுதுன்னு தெரியலை. ஆனா ஏதோ தனியா இருக்கரா போலத்தான் தெரியுது. ஆப்புகள் எல்லா பக்கமும் நிக்கறா போல ஒரு பீலிங்க்ஸ் அல்ரெடி இருக்கு. சோ மக்கா எல்லாரும் எனக்காக உம்மாச்சிகிட்டே வேண்டிக்கோங்க. ஆப்பே வேணாம்னு சொல்லலை. ஆனா கொஞ்சம் பாத்து அடிக்க சொல்லுங்க.

அன்புடன்
எஸ். கே.
SK
என்னதான் பெரிய புத்திசாலி அப்படி இப்படி எல்லாம் சொன்னாலும், நம்ம எதிர் காலத்தை பத்தி ஒருத்தர் நமக்கு முன்னாடியே சொல்றாரு அப்படின்னா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். நான் முடிஞ்சா வரைக்கும் நேரடியா போய் ஜோசியம் பார்க்கிறது இல்லை. ஆனா போய் பாத்திட்டு வந்து சொன்னா கெடுக்கறது.

இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.

அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.

இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.

சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு குறிக்கோளுடன் அமைகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளையாட்டுப்பயிற்சிக்கு உதவி, இது போல பட்டியல் நீளும்.

நாம் பலவற்றை படித்து இருப்போம், கேள்விப்பட்டு இருப்போம், நேரிடையா பார்த்து இருப்போம். சிலவற்றை அனுபவப்பட்டும் இருப்போம். இதில் எந்த வகை ஆனாலும் சரி, இதில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த தொடர்பதிவின் நோக்கம்:

இது போல் இந்தியாவில், தமிழகத்தில் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள சேவை அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ள.

எதை போன்ற அமைப்புகளை பகிரலாம் :

எந்த அமைப்புகள் ஆனாலும், சேவை அமைப்புகளாக இருந்தால் பகிரலாம். அவர்களின் குறிக்கோள் கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல், இது போன்று எதுவாக இருந்தாலும் சரி. சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

நிறுவங்களின் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுக படுத்துங்கள். சில சாதி அமைப்புகள் அந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உதவுகிறார்களா ம்ம்ம்ம் அறிமுகப்படுத்துகள். சில கட்சிகள் இது போன்று உதவி செய்கிறார்களா ம்ம்ம் தெரியப்படுத்துகள்.

பண உதவி இன்றி ஆதரவு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இது போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுகப்படுத்துங்கள்.

இணையதளம் இன்றி நண்பர்கள் மட்டும் இணைந்து இயங்குகிறார்களா அறிமுகப்படுத்துங்கள்.

நம்பகத்தன்மை :

அறிமுகப்படுத்தும் முன் ஒரே ஒரு முறை அவர்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

முடிந்த வரை குறைந்த பட்சம் ஒரே ஒரு அமைப்பையாவது அறிமுகப்படுத்துங்கள்.

முடிந்தால் குறைந்த பட்சம் ஒரே ஒரு நபரோ, அதிக பட்சம் எத்துனை நபர் வேண்டும் ஆனாலும் இதை எழுதுவதற்கு அழையுங்கள்.


என்னுடைய அறிமுகங்கள்:

1. நான்கு நண்பர்களால் தொடங்கப்பட்டு இப்போது தருமபுரி பகுதியில் நிறைய உதவிகள் செய்து வரும் அமைப்பு. இவர்களை பற்றி என் கல்லூரி நண்பர்கள் இடத்தில் கேள்வி பட்டு உள்ளேன். மேலும் விவரங்களுக்கு இங்கே

அவர்கள் பற்றிய தகவல்கள்

VYSWO
Somanahalli Village, P.N. Patti Post,
Palacode Talk, Dharmapuri Dist.,
Tamilnadu, INDIA.636 808.
Telephone Number : 04348235537
Email: vyswo_org@yahoo.com
http://vyswo.com/index.html

2. இந்தியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இயங்கும் அமைப்பு. ஐந்தாவது தூண். இதுவும் என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு உள்ளேன். என் நண்பர்களின் நண்பர்கள் இதில் இயங்கியும் வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே.

5th Pillar.
India Headquarters
41, Circular Road, United India Colony,
Kodambakkam,
Chennai - 600 024
Phone : 044 65273056
Fax : 044 42133677

3. VidyapOshak

பண உதவிகள் தவிர பல கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். இதை இன்னும் பெருமையுடன் அறிமுகப்படுத்துவேன். காரணம். நம்மால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பதிவர் இதை அயாரது உழைத்து வருவதால். இதில் ஒரு சுயநலமும் உண்டு. கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் செய்யும் சேவை தமிழகத்திலும் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே

நான் அழைக்கும் மூன்று பதிவர்கள்

1. ஏதாவது செய்யணும் பாஸ் புகழ் நர்சிம்.

2. அமிர்தவர்ஷிணி அம்மா.

3. தமிழ்மணம் இன்றி கொஞ்சம் வெளியில், SG. நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.

ஒரு வேண்டுகோள் :

பதிவு எழுதியவுடன் அந்த பதிவின் சுட்டியை இந்த முகவரிக்கு அனுப்பினால் weshoulddosomething@googlemail.com மிகவும் உதவியாக இருக்கும். இது கட்டயாம் இல்லை. இதன் ஒரே நோக்கம். ஒரு இரண்டு மாதம் சென்று, இந்த அனைத்து விவரங்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் சேர்க்கும் யோசனை உள்ளது.

அன்புடன்
எஸ். கே.
SK
ஆம். திரு. நர்சிம் அவர்கள் சொல்லி உள்ளது போல் 70% தாண்டிவிட்டோம். இன்னும் இருப்பது 30% மட்டுமே. இது மீண்டும் ஒரு நினைவுகூரல்.

மேலும் விவரமான திரு. நர்சிம் அவர்களின் பதிவு இங்கே.

உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு.

********
ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

**********

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

ஜெர்மனி(&Europe)

E-mail : friends.sk@gmail.com

அன்புடன்
எஸ். கே.
SK
திருமதி. அனுராதா, பல பழைய பதிவர்களுக்கு அறிமுகம் ஆனவர். இன்று ஆகஸ்ட் 28 அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

கேன்சர் எனும் அரக்கனுடன் போராடியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய அனுபவங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் பதிவாக எழுதி தன்னால் முடிந்த வரை விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியில் கடைசி வரை அயராது ஈடு பட்டவர்.

நான் முதலில் படித்து கண் கலங்க செய்த வலைப்பூ அவருடையது தான். நம்மாலும் இது போல் முடிந்த வரை ஏதேனும் உபயோகமாக எழுத முயற்சி செய்யலாம்.

அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

-எஸ். கே.
SK
நீ ஏன் எப்போ பாத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ நீ மட்டும் ஊரை காப்பத்த இருக்கறா போல எப்போ பாத்தாலும் ஒரு மாதிரி எழுதறே. சினிமா பத்தி, அரசியல் பத்தி எல்லாம் மொக்கை போடலாம்ல அப்படின்னு ஒரு புண்ணியவான் என்னைய பாத்து கேட்டு புட்டான் மக்கா. சும்மா இருப்பனா நான். இதோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.

ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.

கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது

எவனுக்கு நல்லா தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(

சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம் இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(

எவன் எவ்வளவு லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இங்கே.

நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.

அன்புடன்
எஸ். கே.
SK
ஒருத்தன் வெளிநாடு போறான் அப்படினாலே வீட்டுல எல்லாம் ஒரு வித சந்தோசம் கலந்த பயமா தான் இருக்காங்க. குறிப்பா அப்பா அம்மாக்களுக்கு. எங்கையாவது புள்ளை/பொண்ணு வெள்ளைகாறன கூட்டிகிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுமோ அப்படின்னு. அதுவும் அம்மாக்கள் எல்லாம் புள்ளைங்க கிட்டே காந்திஜி கிட்டே அவுங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி வாங்கிட்டு தான் விமானம் ஏறவே அனுமதி தர்றாங்க.

வெளிநாட்டுகாரங்க அப்படினா அவ்வளவு தானா. சும்மா தண்ணி அடிச்சிட்டு, வேணும் பொழுது வேண்டிய பொண்ணுங்க கூட சுத்திகிட்டு. அதையும் தாண்டி பல நல்ல விடயங்கள் இருக்கு. குறிப்பா நான் ஜெர்மனில இந்த மக்கள் கிட்டே பாத்தா பல நல்ல விடயங்கள் அப்படின்னு எனக்கு தோணினது தான் இன்றைய மொக்கை.

இதையே இங்கே SG அவுங்க ஆங்கிலத்துல பிரிச்சு மேஞ்சுடாங்க. இருந்தாலும் சும்மா என்னுடைய சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கேன்

1. நேரம் தவறாமை :

இந்த விடயத்துல ஜெர்மன்காரங்க எல்லாரும் ஒத்தாபோல இருப்பாங்க. பத்து மணி ஒரு மீட்டிங் சொன்னா அது பத்து. 10:01 கூட கிடையாது. அதுக்கான நேரம் சரியா ஒதுக்கி இருப்பாங்க. ஒரு நிமிஷம் கூட போனாலும் ஏதோ போதைக்கு அடிமை ஆனவங்க நடுங்கற போல நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஒரு முறை நான் பாஸ் கூட பேசறதுக்கு நேரம் கேட்டு போய் இருந்தேன். பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாரு. நான் போனது 09:58. உள்ள வாங்க சொல்லிட்டு, என்னைய உட்கார சொல்லிட்டு நேரத்தை பாத்திட்டு நீங்க ரெண்டு நிமிஷம் சீக்கரம் வந்து இருக்கீங்க. உட்காருங்க வந்துடறேன், அப்படின்னு சொல்லிட்டு சரியா பத்து மணிக்கு பேச வந்தாரு. அடிங்க அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

ரெயிலா இருக்கட்டும், பேருந்து வர்ற நேரமா இருக்கட்டும் சரியா வரும். இது இவங்க ரத்ததுலையே ஊறி போய் இருக்குன்னு தான் நினைக்குறேன்.இந்த பழக்கம் மட்டும் வந்துடிச்சுன்னாலே நாம எல்லாம் எங்கயோ போய்டலாம்.

2. ரூல்ஸ் ராமனுஜம்ஸ் :

எல்லாருமே ரூல்ஸ் அப்படின்னு ஒண்ணு சொல்லிட்டா அதை அப்படி மதிப்பாங்க. இரவு பதினோரு மணிக்கு ஒரு வேலை ரோட்ல சிக்னல் இருந்து, செகப்பா இருந்து, அங்கே கண்ணுக்கு தென்படற வரைக்கும் ஆள் இல்லாட்டியும் நின்னு தான் போவாங்க. அடப்பாவிகளா அதான் எவனும் வரலையே போனா என்னடா.. ம்ம்ம் ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.

3. வேலை செய்யும் முறை :

இவங்க வேலை செய்யற முறைய மட்டும் நாம பின்பற்ற ஆரம்பிச்சா நாம எங்கயோ போய்விடலாம். சரியா எட்டு மணி நேரம் வேலை. நேரத்துக்கு சாப்பாடு, சரி அளவான காபி, வித விதமான டி.

அதுவும் ஒரு வேலை தெரியும் அப்படின்னு சொன்னா சரியா அவுங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கம்ப்யூட்டர் அப்படிங்கறத கண்ணால மட்டும் பாத்திட்டு நான் கம்ப்யூட்டர் இஞ்சினீர் அப்படின்னு சொல்லமாடாங்க.

வேலை செய்யற முறைக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, ஒரு முறை என்னோட ரெயில் டிக்கெட் கான்செல் செஞ்சிட்டு திரும்ப வேற நாளைக்கு புக் பண்ண போய் இருந்தேன். அவுங்க கிட்டே போய் 'அம்மணி, இதை கான்செல் பண்ணி இந்த தேதிக்கு புக் பண்ணி கொடுங்க சொன்னேன்'.

'தம்புடு, இப்படி அவசர பட்டா நடக்காது. ஒண்ணு ஒண்ணா சொல்லு. இப்போ சொல்லு எதை கான்செல் பண்ணனும்.' அப்படின்னு கேட்டு கான்செல் பண்ண வேண்டியதை கான்செல் பண்ணிட்டு அதுல பாக்கி தர்ற வேண்டிய பைசாவ திரும்ப என் கைல கொடுத்திட்டு , அடுத்த வேலையா நான் திரும்ப புக் பண்ண வேண்டியதை புக் பண்ணி கொடுத்தாங்க. ஏன்னா அவுங்க வேலை படி, கான்செல் பண்றது ஒரு வேலை, புக் பண்றது அடுத்த வேலை. ரெண்டையும் தனி தனியா தான் செய்யணும். அப்படி தான் செய்வாங்க. இதே நம்ம ஊரா இருந்தா இது அது ரெண்டு போக இவ்வளவு அப்படின்னு கணக்கை முடிச்சுடுவாங்க. ரெண்டுல எதையுமே தப்பு சரின்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வழிகளையும், ஒரு நல்லது கேட்டது இருக்கு.

4. உசுருக்கான மதிப்பு

இங்கே எல்லா உசுருக்கும் ஒரே மதிப்பு தான். போன வாரம் கூட, ஒரு பிச்சைகாரரு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு. அடுத்த பத்தாவது நிமிஷம் அங்கே ஆம்புலன்ஸ் வந்திச்சு. இது யார இருந்தாலும் இப்படி தான். ஏழை, பணக்காரன், இந்த ஊர் காரன், அந்த ஊர் காரன், வெளிநாட்டு காரன் , உள்நாட்டு காரன் இப்படி எந்த பாகு பாடும் கிடையாது.

அதுவும் இங்கே குறிப்பா உலகப்போர்ல உயிர் இழப்பு அதிகம் இருந்ததால ஒவ்வொரு உசுருக்கும் அம்புட்டு மதிப்பு கொடுப்பாங்க.

5. நாய்ப்பாசம்

இங்கே மக்களுக்கு தாய்ப்பாசம் எப்படி இருக்கோ நாய்ப்பாசம் அதிகம். அந்த நாய நாம மொறச்சு கூட பாக்க முடியாது. ஒரு முறை இப்படி தான் ரயில்ல போகும் பொழுது ஒரு அம்மணி ஏறினாங்க. நல்ல இருந்ததுனால நானும் பாத்திட்டே வந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தான் கவனிச்சேன், கைல ஒரு நாய புடிச்சு இருக்காங்க. அது என்னைய விட ரெண்டு கிலோ அதிகமா இருக்கும்னு நினைக்குறேன். சரி இட்ஸ் ஆல் தி இன் தி கேம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போதே, படார்னு அந்த அம்மணி அந்த நாயோட லிப் டு லிப் அடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுடாங்க. ஸ்மால் ஹார்ட், சின்ன இதயம் தாங்காம நான் அடுத்த நிறுத்தத்துல இறங்கி வேற பொட்டிக்கு போய்டேன்.

இதை ஏன் சொல்றேன் அப்படின்னா, இவங்களுக்கு அம்புட்டு நாய் பாசம். இங்கே ஒரு தடவை கூட ஒருத்தன் நாய கல்லால அடிச்சு பாத்தது இல்லை. அடிச்சாலும் நம்மள புடிச்சு உள்ள தூக்கி போட்டுடுவாங்கன்னு தான் நினைக்குறேன்.

6. கண்ணோடு கண் :

ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஆளை மாத்திகிட்டே இருப்பாங்க, அப்படி இப்படி எல்லாம் ஒரு பக்கம். ஆனா ஒரு பொண்ணும் பையனும் சேந்து பேசிட்டு போகும் போதும், அவுங்க கொஞ்சிகிட்டு போகும் போதும் அதை பார்த்தாலே நமக்கு ஒரு வித காதல் உணர்ச்சி உள்ள பொங்கும். அப்படியே பின்னணி இசை பாய்ஸ்ல ரஹ்மான் போட்டது தான் வரும்,'எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேணுமடா' அப்படின்னு.

அப்படி என்ன வித்தியாசம். ரெண்டு பெரும் கண்ணோடு கண் பாத்து பேசுவாங்க. இந்த விஷயம் மட்டும் இருந்தா பாதி பேரு பொய் சொல்லவே முடியாது. நாம கண்ணை தவிர வேற எல்லா எடத்துலயும் பாத்து பேசுவோம்.

7. தனி மனித வாழ்க்கை, வேலை :

தன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, வேலை இது ரெண்டையும் கலக்க மாட்டாங்க. ஒரு தனி பட்ட முறைல எப்படி இருக்காங்க, அவன் தண்ணி அடிக்கரானா, தினம் ஒருவன்/ஒருத்தி கூட சுத்தரானா, இதை எல்லாம் வேலையோட சேத்து பாக்க மாட்டாங்க. வேலை தனி, தனி மனித வாழ்க்கை தனி.

இதுவும் ஒரு முக்கியமான விடயம் நாம பழக வேண்டியது. அதுவும் குறிப்பா நம்ம கல்லூரிகள்ல, ஒரு பையன்/பொண்ணோட மார்க் அவன் அங்கே நின்னு யாரு கூட பேசறான், அந்த பொண்ணு கூட இவன் ஏன் பேசணும், ஏன் தம் அடிக்கணும் இதை எல்லாம் வெச்சு பல இடங்கள்ல மார்க் விழுது.

8. விடுமுறை

உலகத்துல எந்த இடம் வேணும்னாலும் சொல்லுங்க, அந்த எடத்துக்கு இவங்க போயிட்டு வந்து இருப்பாங்க. அவங்களுக்கு வேலைல தர்ற விடுமுறை நாட்களை சரியா உபயோகிச்சுபாங்க.

2004 சுனாமி வந்தப்போ இந்தியா/இலங்கை இங்க இறந்தவங்க எண்ணிக்கைல ஏழு-எட்டு பேரு ஜேர்மன்காரங்க. அது போல ஊரு சுத்தரதுன்னா சும்மா போய் பாத்திட்டு வர்றது மட்டும் கிடையாது. அங்கே என்ன மொழி பேசறாங்க, அங்கே என்ன சாப்பாடு நல்லா இருக்கும், அதை எப்படி செய்யறது பத்திய புத்தகம், அங்கே என்ன உடை அணிவாங்க, இது போல எல்லாத்தை பத்தியும் முன்னாடியே தெரிஞ்சு வெச்சுகிட்டு, அங்கே போன மக்கள் கூட நல்லா சேந்து பழகி, நிறைவா போயிட்டு வருவாங்க.

இவங்க மற்ற நண்பர்களுக்கு அங்கே போயிட்டு வாங்கிட்டு வர்ற பரிசு, அந்த ஊரை சேர்ந்த எதாவது படங்கள் கொண்ட அட்டையா தான் இருக்கும்.

9. பரிசு :

இவங்க பரிசு கொடுக்கறது அப்படின ஒடனே ஒண்ணும் பெருசா நிறைய செலவு பண்ணி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க. பெரியவங்களுக்கு அப்படினா ஒரு வயின் பாட்டில், கூட வேலை பாக்கறவங்க விட்டு போறாங்க அப்படின்னா ஒரு காபி மக் இவ்வளவு தான். என்னைய கேட்டா மனசு நிறைச்சு இதையே வாங்கி கொடுத்தா போதும்னு தான் சொல்லுவேன்.

இப்படி நிறைய நல்லா பழக்கங்கள் இவங்க கிட்டே இருக்கு. இதுல சிலதை நாம பழக ஆரம்பிச்சாலே ரொம்ப நல்லா இருக்கும்.

இது போதும் பார் தி மொக்கைஸ் ஒப் டுடே.

அன்புடன்,
எஸ். கே.
SK
அன்பின் தோழர்களே,

சக பதிவர் சிங்கை நாதன் அவர்கள் நிலை குறித்து திரு கே.வி. ஆர் அவர்களின் இந்த பதிவில் அறியலாம்.

ஐரோப்பாவில்/ஜெர்மனியில் இருந்து ஒரு குழுவாக பணம் சேகரித்து மொத்தமாக அனுப்பலாம்.

என்னை தொடர்பு கொள்ள விருப்பம் உடையவர்கள்

ஈமெயில் : friends.sk@gmail.com

அன்புடன்,
எஸ். கே.
SK
சனி கிழமை எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததாகவும், அவருக்கு மாற்று கால் பொறுத்த உதவும் படியும் கேட்டுக்கொள்ள பட்டு இருந்தது. நண்பர்கள் நால்வருடன் இதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.

ஜெய்ப்பூர் பூட், 1975'இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும்.

Jaipur Foot

இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை நானும் நமக்கு தெரிந்தவர்களுடன் பரப்பி முடிந்த வரை நாம் அறிந்தவர்களுக்கு உதவ முன்வருவோமா.

அதிகம் வாசிக்க படுகின்ற பதிவர்கள் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவோ, அல்லது ஒரு காட்ஜெட் போன்றவையோ போட்டு இருக்கும் பட்சத்தில் நிறைய நண்பர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதே போல் நமக்கு தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து அவர்கள் ஜெய்ப்பூர் செல்வதற்கு மட்டும் தயார் செய்து கொடுத்தால் அங்கு அனைத்தையும் அவர்களே இலவசமாக செய்கிறார்கள்.

இவர்களுக்கு சென்னையிலும் ஒரு தொடர்பு அலுவலகம் உள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

MR. D. MOHAN JAIN
ADINATH JAIN TRUST (REGD.)
24, SUBBA NAIDU STREET,
CHOOLAI, CHENNAI-600112.
044-26693982.
26692813, 26692539.
Mobile- 09840022536

இந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்ட என்னுடைய சித்தப்பாவிற்கு மற்றும் அவருடைய நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

அன்புடன்,
எஸ். கே.
SK
நான் அதிகமா பதிவு எழுதறது இல்லை. அதுக்கு ஒரு முக்கிய காரணம் சோம்பேறி தனம். அதோட இதை செய்யணும் அப்படிங்கற தொடர்ந்து செய்யணும் அப்படிங்கற ஒரு உணர்ச்சி இல்லை. பதிவு எழுத ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கற இருக்கற மன நிலை முடிக்கும் போது இருக்கறது இல்லை. இப்படியே நிறைய பதிவு எழுதாம இருக்கு.

இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச்சா போல இருந்தது எனக்கு.

சத்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தலை வணங்குகிறேன் ஐயா. நன்றி ரஞ்சித் உங்க பதிவுக்கும்.

பதிவர்கள் பலர் நிறைய நல்ல காரியங்கள் செய்யறாங்க. வெளில சொல்றதுக்கு ஒரு வித தயக்கம். எதிர் வினை, சுய புராணம், தற்புகழ்ச்சி இது போல ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். இதுனால பல நல்ல காரியங்கள் வெளில தெரியாமலையே போய் விடுகிறது. வேலைய விட்டுட்டு முழு நேரம் இது போல செய்யறவங்க பத்தி எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். நீங்க எல்லாம் தான் எங்களை ஊக்குவிப்பவர்கள். உங்களுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிணறு வெட்ட பூதம் அப்படின்னு திரு. ரமேஷ் சதாசிவம் பதிவு எழுதி இருந்தாரு. அதை போன பதிவுல கொடுத்து இருந்தேன்.

அந்த பதிவுல திரு. நடராஜ் ஐ. பி. எஸ். அவர்கள் வந்து பதில் எழுதி தன்னை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தாரு. படிச்சா ஒடனே கொஞ்சம் சந்தோஷமும் அதிக நம்பிக்கையும் வந்திச்சு. எதாவது நியாயம் கிடைக்கும் சொல்லி. நம்ம நாடும் உருப்பட நல்லாவே வாய்ப்பு இருக்கு.

இன்னொரு பக்கம் நம் எழுத்தினுடைய தாக்கம் புரிஞ்சது. எழுதும் போது ரொம்ப நிறுத்தி நிதானமா எழுதனும்னு பொறுப்பும் வந்தது. இந்த களத்தை பல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தனும்னு எண்ணனும் வந்தது. அனாவசிய சண்டைகளையும், சச்சரவுகளையும் தவிர்த்து ஏதாவது நம்மாலான உருப்படியான காரியம் செய்யனும்னு தோணிச்சு. பாக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேற்று தினமலர்ல ஒரு செய்தி பாத்தேன். (இப்போ என்னிடம் லிங்க் இல்லை) ஒரு விளையாட்டு வீராங்கனை அரசிடம் இருந்து போதிய சலுகைகளும், மற்ற உதவியும் இல்லாமையும், வந்து சேர வேண்டிய சலுகைகள் இல்லத்துனாளையும் தட்டு கழுவுவதும், உணவு பரிமாறுவது போன்ற வேலைகள் செய்யறாங்கன்னு போட்டு இருந்தது. இவுங்க தேசிய அளவிலோ, ஆசியா அளவிலோ விளையாடி பதக்கங்கள் எல்லாம் வாங்கி இருக்காங்கன்னு போட்டு இருந்தது. இது தான் நம்ம நாட்டோட விளையாட்டு வீரர்களின் நிலைமை. இனிமே நாம விளையாட்ட பத்தி அடுத்த ஒலிம்பிக்ஸ் அப்போ இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்காது பாருங்கன்னு பந்தயம் கட்டலாம். :( அதை பத்தி அப்போ மட்டும் யோசிச்சா போதும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புடன்
எஸ். கே.
SK
தண்ணீருக்காக..

இவை இல்லையெனில் வாழ்த்தென்ன புண்ணியம்.

வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரமேஷ்.

முடிந்தால் உங்கள் பதிவில் ஒரு இடுகை இதை பற்றி எழுதவும் மேலும் இதற்கான லிங்க் கொடுக்கவும்.

எஸ். கே.
SK
உயர் கல்வி அப்படின்னா.. வெளிநாடு சென்று படிக்கறது மட்டும் இல்லை. பத்தாவது முடிச்சிட்டு மேல படிக்கறதுக்கே நமக்கு தெரிஞ்சது மூணே மூணு பிரிவு. ஒண்ணு முதல் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா எஞ்சினியர் ஆகலாம், இரண்டாவது பையலோஜி படிச்சா டாக்டர் ஆகலாம், அடுத்து காமர்ஸ் அக்கௌண்டன்சி படிச்சா சி. ஏ. படிக்கலாம். இவ்வளவு தான் இருக்கா ? இல்லை இதை தவிர நிறைய பிரிவுகள் இருக்கு. அதை பற்றி நமக்கு தெரிவது இல்லை.

சரி அதை தாண்டி வந்தா, கேக்கற பய புள்ளைங்க எல்லாம் இ. சி. இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், EEE , IT இது தான் படிக்கனும்னு அடம் புடிப்பாங்க. ஏதோ போன போகுதுன்னு மெக்கானிகல் படிப்பாங்க. அப்போ மத்தது, ஏதோ விதி, இது தான் கிடைச்சுது படிக்கறேன் .. இந்த அளவு தான். இன்ஜினியரிங் இதுக்கு இப்படினா அறிவியல், கலை இதை படிக்கறவங்களும் கடைசியா வந்து நிக்கறது வேற வேலைக்கு தான். ஆனா அந்த அந்த படிப்பான மதிப்பு இருந்து கிட்டு தான் இருக்கு. பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க கொஞ்ச நாள் ஆகும்.

இன்னொரு பிரிவு இருக்கு, பேச்சலர்ஸ் அதோட படிப்ப நிறுத்துரவங்க. மேல படிக்க விருப்பம் இருக்கறது இல்லை, வசதி இருக்கறது இல்லை, தெரியறது இல்லை. இது போல பல காரணங்கள் உண்டு.

அதே போல வெளி நாட்டுக்கு சென்று படிப்பதிலும் நிறைய விடயங்கள் தெரியாமலையே இருக்கு. இந்த கதை எல்லாம் இப்போ எதுக்கு. இதை எல்லாம் ஒரு இடத்தில் தொகுக்கலாம் அப்படின்னு ஒரு யோசனை இருக்கு. அதை ஒரு பதிவாக அல்லது என் பதிவுகளில் இடுகைகளாக செய்யலாம் அப்படின்னு எண்ணம்.

இதே போல செய்து கொண்டு இருக்கிற பதிவுகளோ, இணைய தளங்களோ, இல்லை என்னோட படிப்ப பத்தியும், நான் இருக்கற வெளிநாட்டுல அமைகிற படிப்பு பத்தியும் எழுதனும்னு விருப்ப படரவங்க இங்கே தெரிய படுத்தவும். கொஞ்சம் கொஞ்சமா விடயங்கள் சேகரிக்கலாம். கல்வி பற்றிய எந்த விடயமாக இருந்தாலும் இங்கே தெரியப்படுத்தவும்.
செஞ்சு என்ன பண்ண போறோம் ?? அதை பின்னாடி யோசிப்போம். ஆனா ஏதாவது நல்ல விடயமாக செய்வோம்.

உங்கள் எண்ணங்கள், ஆதரவுகள், யோசனைகள் இதை எதிர் நோக்கி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று ஜூலை 16. கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்து ஐந்து வருடம் ஆகிறது. அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு என்னுடைய அஞ்சலிகள். அவர்களை பிரிந்து வாடும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்.

நாமும் இதை வருடா வருடம் பதிவு போடறோம். போன வருடமும் போட்டு இருந்தாங்க. இந்த வருடமும் போட்டு இருக்காங்க. நிலைமை 0.1% மாறிச்சா. விதிகள் மேலும் கடுமை படுத்த பட்டதா ?? :( இல்லை இதை தான் நாம பெருமையா சொல்லிகறோம். இதற்க்கு நம்மால் ஏதும் செய்ய முடியுமா. இல்லை அதே பழைய பல்லவி 'அரசு இயந்திரம் சரி இல்லை' இது தானா ?? :(

வெளிநாட்டில் ஒக்காந்து

வெட்டி கதை மட்டுமே பேசத்தெரிந்த
பல கோடி இந்தியர்களில் ஒருவனான.
எஸ். கே.
SK
நான் இருப்பது பெர்லின். பெர்லின் இந்த ஆண்டு 2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளை கொண்டாடுகிறது . முடிந்தால் இந்த வரலாறை பற்றி பின்னொரு நாளில் எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்.

இந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்தம் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.

மேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.

எந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்?' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர் குமார், இவர் சவுத் இந்தியன்'.

இது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.

'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.

தென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ?? ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.

இப்படி சொல்வதனால் என்ன ? உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.

புனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??


முன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா ??

கற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.

என் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.

அன்புடன்,
எஸ். கே.
SK
வணக்கம் மக்கா..  

மே பத்து அன்று நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும். இங்கே இருந்து ஒரு மெயில் அனுப்பறதும், தொலை பேசறதும் எளிது. அங்கே இருந்து ஒரு காரியத்தை செய்யறது எவ்வளவு கடினம்னு எனக்கு தெரியும். அதை சாதித்து காட்டிய தோழர்கள் நரசிம், லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன், கார்க்கி, அமித்து அம்மா, ரம்யா.. மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புவோம். தொடரனும். தொடருவோம். தொடரும்.  

மேலும் உடனடியாக விரிவாக பதிவிட்ட நர்சிம், திரு. ராகவன், லக்கிலுக், திருமதி முல்லை, ஆதி, அக்னிபார்வை, படங்களும் இட்ட ஜாக்கி சேகர்... அனைவருக்கும் நன்றி. டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி. நேரம் ஒதுக்கி, பொறுமையாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு. மேலும் இடம் மற்றும் ஏற்பாடுகளுக்கு உதவிய திரு. பத்ரி அவர்களுக்கும் நன்றி.  

சரி நன்றி சொன்னது எல்லாம் போதும். இதை எழுதும் பொது நடிகர் திரு. கமல் அவர்கள், 'சென்னை - 28' படத்தோட நூறாவது நாள் நிகழ்ச்சில பேசினது தான் நினைவுக்கு வந்தது. 'இந்த வெற்றிவிழா கொண்டாட்டும் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க அடுத்த படத்துக்கு வேலை ஆரம்பிங்க. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது. ...' :) அதே தான். நாமும் அடுத்து என்ன அப்படிங்கறதை தான் யோசிக்கணும்.  

சில உதவிகள் :  

1. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் கூறியவற்றையும், கேள்வி பதிலையும் எளிமையாக, அனைவரும் அதாவது உங்க பக்கத்து வீட்டு அம்மா, அப்பா இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி முடிந்தால் எளிமையான உதாரணங்களுடன் இரண்டு அல்லது மூன்று பக்க கோப்பாக தயார் செய்தால் உதவியாக இருக்கும். இதையே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் செய்தால் மிக நல்லது. இதற்கு நேரம், பொறுமை, மற்றும் எண்ணம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். திரு. ராகவன், மற்றும் திரு. அக்னிபார்வை பதிவுகளை படித்து சின்ன சின்ன விடையங்களை நினைவு கூர்ந்து எழுதலாம்.  

2. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்கள். பின்னொரு நேரம் குறிப்பிட்ட அளவு நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யலாம். மேலே நாம் தயார் செய்யும் கோப்பை அவர்கள் படித்து, மேலும் அவர்கள் தங்களுடைய கேள்விகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு. மேலும் டாக்டர் ருத்ரன் அவர்களும், இது போல ஒரு நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியும் மேலும் நடத்தவும் ஊக்கமும் தந்துள்ளார். அதே போல் டாக்டர் ஷாலினி அவர்களும் நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாகவும் மெயில் செய்துள்ளார்.  

3. ஒரு நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் நிறைகளை கூறி பாராட்டுவதை போல நீங்கள் இதை மாற்றி இவ்வாறு செய்து இருக்கலாம் அப்படின்னு உங்களுக்கு எதாவது தோணிச்சுன்னா நண்பர் திரு. லக்கிலுக் கூறியது போல எங்களுக்கு மெயில் அனுப்புங்கள். அது எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்ய உதவியாக இருக்கும். மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com  

4. அடுத்து என்ன ?? : இது தான் ஒரு பெரிய கேள்வி. நண்பர் திரு லக்கிலுக் சொன்னது போல இப்படி செய்யலாம். அப்படின்னு தோன்றதை எங்களுக்கு எழுதுங்க. நாமும் அதை எப்படி செய்யலாம்னு யோசிச்சு இந்த நிகழ்ச்சி போல செய்யறதுக்கு முயற்சி பண்ணலாம். இதை பற்றி எழுத மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com

பரிசல் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  

என்ன எழுதன்னு கேட்டு இருந்தீங்க ? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சி நடக்கறதுக்கு மெயில் அனுப்பும் பொது கேட்டு இருந்தோம். இது பற்றிய செய்தியை எங்க படிச்சீங்கன்னு. 'பரிசல் பதிவுல பாத்தோம் அப்படின்னு' மூணு நாலு பேருக்கு மேல எழுதி இருந்தாங்க. அது தான் உங்க எழுத்தின் வீச்சு. இதுக்கு தான் நீங்க எழுதணும். நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை. கோபம், விரக்தி , வருத்தம், எதுனாலும் .. எழுதுங்க.. எழுதுங்க.. அதுனால செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.  

பதிவு நீண்டு கிட்டே போகுது. அதுனால இத்தோட நிறுத்துக்கறேன். இதே நிகழ்ச்சியை பத்திய இன்னொரு பதிவு வரும் விரைவில். உங்களுடைய பதில் பின்னோட்டம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தெரியபடுத்தவும்.  

அன்புடன்,
எஸ். கே.

பி. கு. : தேர்தல் நாளும் அதுவுமா தைரியமா பதிவு போடறேன். மக்கா ஈ ஆட விட்டுடாதீங்க. சரியாக பதிவர்களிடம் சென்று சேரவில்லை எனில், உங்கள் பதிவில் எழுதியோ, மேலே சொல்லப்பட்ட சில உதவிகள் செய்தால் மிகவும் எளிதாக இருக்கும். 

பி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்கறேன். :) 

பி. கு. 3: மறந்துடாம ஓட்டு போடுங்க மக்கா. இன்னைக்கு தேர்தலாமே.
SK
இந்த இரண்டு விடயங்களும் ரொம்ப நாளாவே இப்படி தான் இருக்கா இல்லை இப்போ சமீபமா அதிகம் ஆகி இருக்கான்னு தெரியலை. நான் சமீபமா ரொம்ப கவனிக்கறேன்.

அ. கேள்விக்கு பதில் கேள்வியாக ??

எனக்கு தெரிஞ்சு இப்போ எல்லாம் ஒரு கேள்விக்கு பதில் பதிலா வருதுன்னா, அது ஒன்னு தான் 'நீ எப்படி இருக்கே??', 'ம்ம் ஏதோ இருக்கேன்', 'நல்ல இருக்கேன்' இவ்வளவு தான்.

இதைத்தவிர வேற எந்த கேள்வி கேட்டாலும், அதுக்கு பதில் திரும்ப ஒரு கேள்வியாத்தான் வருது.

எங்க அக்கா கிட்டே, 'ஏங்கா, போன் நம்பர் மாத்தினியே எனக்கு தரணும்னு தோணிச்சா?? அப்படின்னு கேட்டேன் ??'

இதுக்கு என்ன பதில் தரணும் எசமான். 'மறந்துட்டேன்', 'இல்லை தரலை', 'இந்த நம்பர் இப்போ தர்றேன் வெச்சுக்கோ', இதுமாதிரி எது சொன்னாலும் சரி.

ஆனா, வர்ற பதில் என்ன தெரியுமா, 'நீ தந்தியா நம்பர் மாத்தின அப்போ??'.

சரி நம்ம வீட்டுல தான் இந்த பிரச்சனைன்னு பாத்தா, சின்ன விடயத்துல இருந்து, பெரிய பெரிய விடயம் வரைக்கும் இப்படித்தான் இருக்கு. 'ஏன்டா உங்க ஆளு மூணு பேரை கொன்னுட்டாங்களே, அதுக்கு தண்டனையும் இல்லை ஒன்னும் இல்லை, இது நியாயமாடா' அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் என்ன தெரியுமா 'உங்காளுகளும் தான் எட்டு பேரை சாகிடிச்சாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்' அப்படின்னு பதில் வருது. ஆகா மொத்தம் இதுக்கு பதிலே கிடையாது, செத்தவும் உசுருக்கும் மதிப்பு கிடையாது.

நாம முடிஞ்சா வரைக்கும் நம்ம கிட்டே கேக்கபடற கேள்விக்கு பதில் நேரடியா சொல்லி பழகுனா, அது பல விடயங்களுக்கு ரொம்ப நல்லது. பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. இந்த விடயத்தை நான் கொஞ்ச நாளா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இப்போ தேர்தல் நேரம் இது ரொம்ப நல்லா பயன்படும். அவன் என்ன செஞ்சான், இவன் என்ன செஞ்சான் அப்படின்னு கேள்வி மட்டும் தான் கேப்பாங்க. நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை.

ஆ. இரு கோடுகள் :

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டா ஒரு கேள்வி கேப்பாங்க. ஒரே அளவுல ரெண்டு கோடு வரைஞ்சு, ஒன்னை இன்னொன்றை விட பெருசாக்கி காட்ட சொல்லுவாங்க. எல்லாருமே அதுக்கு ஒரு கோடை பெருசாக்குவாங்க. மாத்தி யோசி மக்கான்னு சொல்லி, ஒரு கோடை அழிச்சு சின்னாதாக்கி இப்பவும் இது பெருசாகிடிச்சுன்னு சொன்ன ஆட்களும் உண்டு.

இந்த தத்துவத்தை நம்ம மக்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சு இருகாங்க. இது அடித்தள மக்கள் கிட்டே இருந்து அரசன் ஆளுறவன் வரைக்கும் இருக்கு.

திரைப்படம் ஒலி நாடா வெளியீட்டு விழா நடக்குது, ஒரு இயக்குனரை கூப்பிட்டு இசை அமைப்பாளரை பாராட்டி பேச சொல்லி கூப்பிடறாங்க. நம்ம ஆள் என்ன பண்றாரு, இவருக்கு போட்டியாகவோ இல்லை இன்னொரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரை சூசகமா சொல்லி, இவரு அதை போல எல்லாம் இல்லை அப்படின்னு பேசுறாரு. நம்ம மக்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தனை புகழ்ந்து பேசறதுன்னா இன்னொருத்தனை திட்டி பேசறது அப்படிங்கற முடிவுல இருக்காங்க.

இந்த பாட்டு எப்படி இருக்கு, அந்த பாட்டை விட நல்லா இருக்கு. ஏன் உங்களுக்கு அந்த பாட்டுல இருக்கற நல்ல விடயம் தெரியலையா, இல்லை இப்படி சொன்னாத்தான் கை தட்டுராங்களா.

இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா நாம தான். ஆமாங்க ஒரு படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கறாங்க அதை அப்படியே கிண்டல் பண்ணி அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ 'லொள்ளு சபா' அப்படிங்கறதுக்கு தானே அமோக ஆதரவு தர்றோம். கேட்டா காமடியாம்.

ஏன் நம்ம பதிவுலகத்துலையே எதிர் பதிவுக்கு தானே மவுசு கூட. :)

இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? செஞ்சா நல்லது தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
நேத்து மயில் அவுங்க எழுதி இருந்த புலாவ் ரெசிபி பாத்து ஓவர் சூடு ஆகி போய் நேத்து இரவு டின்னெர் அது அது தான். நன்றி மயில் அக்கோவ் :)
இந்த பதிவு மயில் அவுங்களுக்கு சமர்ப்பணம். அதுக்காக பார்சல் எல்லாம் கேக்க கூடாது ஆமா சொல்லிபுட்டேன் :)

பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், இந்த வெஜ். புலாவுக்கும், வெஜ். பிரியாணிக்கும் என்ன வித்தியாசம் ??

ருசியுடன்,

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போட்டோ புடிச்சு டரியல் ஆக்குவோரை தானே சமைச்சு போட்டோ புடிச்சு போட்டு'கொல்லுவோர்' சங்கம். :)
எஸ். கே.
SK
நான் வெளிநாட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆக போகுது. வந்த புதுசுல யாரோடையோ சேர்ந்து இருக்கணும், சேர்ந்து சமைச்சு சாப்பிடனும் அப்படிங்கற எண்ணம் எல்லாம் போய்டிச்சு. ஏன்னா என்னோட அனுபவம் அப்படி. தனிமை பழகிக்கிட்டேன். இப்போ வேற இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

நான் தங்கி இருக்கற விடுதில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. எல்லாரோடையும் பேசுவேன். ஆனா இந்த சேர்ந்து தங்கறது, சமைக்கறது இதுக்கு எல்லாம் ரொம்பவே அலர்ஜி. என்னோட அலைவரிசல் ஒத்து வராதுன்னு ஒரு எண்ணம். அது தான் உண்மையும் கூட. இதுனால எனக்கு ரொம்ப 'நல்ல' பேரு எல்லார்கிட்டயும் இங்கே. :).எனக்கு ஒருத்தருக்கு சமைக்கறதே பெரும் பாடு. என்னோட டைமிங்கும் ரொம்ப கஷ்டம். அப்படியே பழகியும் போச்சு.

நான் எப்போதும் ஆண்டவன் கிட்டே வேண்டுறது ஒண்ணே ஒண்ணு தான். என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது. நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.
இவரு இந்தியாவுல இருந்து நேரடியா வரலை, ச்விடன்ள ஒன்றரை வருடமா இருந்து இருக்காரு. அதவாது அவருக்கு வெளிநாடு புதுசு கிடையாது. வந்த மொதோ நாளே சேர்ந்து தங்கலாமா அப்படின்னு கேட்டாரு. இல்லை சாரு எனக்கு ஆவாது அப்படினேன். சரி சேர்ந்து சமைக்கலாம் அப்படினாறு. இல்லை அண்ணேன் எனக்கு அது ஒத்து வராது அப்படினேன். இதுலையே பாதி மூஞ்சி தொங்கி போச்சு. ஆனா கூட்டிகிட்டு போய் கடை எல்லாம் சொல்லி கொடுத்தேன், எல்லாம் எங்கே என்ன வாங்கனும்னு எல்லாம் சொல்லிட்டேன்.


இப்போ ஒரு வாரமா என்ன நடக்குதுன்னா அண்ணே, உண்ணாவிரதம் இருக்கற மாதிரி ஒரு பீலிங். ஒண்ணு சாப்டாம தூங்குறாரு, இல்லை வெறும் ஊறுகா சாதம், தயிர் சாதம்னு சாப்பாடு போகுது. இப்படி தான் எப்போதும் சாப்பிடுவாரா இல்லை இங்கே வந்து தான் இப்படியான்னு தெரியலை. எது எப்படியோ எனக்கு இது அனாவசியமான விஷயம்.

என்னால இதை பாத்திட்டு வாய்யான்னு தினம் சமைச்சு போடவும் முடியலை (முடியாது), சரி என்னவோ பண்றாருன்னு விட்டுட்டு என் வேலைய பாக்க மனசு கேக்க மாட்டேங்குது. முடியலை. தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு போகுது. எனக்கு இது எல்லாம் தேவையா. சும்மா சிவனேன்னு இருந்தேன்.. :(

நான் என்ன பண்றது மக்கா ??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னோட போன பதிவை பாத்திட்டு ஒரு நண்பன் கேட்டான். என்னடா பதிவு போட்ட உடனே பத்து பேரு வந்து பாத்து பதில் போட்டு இருக்காங்க அப்படின்னு.

நான் சொன்னேன், (தலைவர் ஸ்டைல்ல படிக்கவும்) 'தம்பி, எல்லாம் தான வந்த பின்னூட்டம் இல்லை, ஈமெயில் பண்ணி வரவெச்ச பின்னோட்டம்' அப்படின்னு :) :) (இதுவும் ஒரு விதத்துல தலைபோட ஒத்து போகுது :) :) :) )
SK
என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.

இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.

2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.

கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.

1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)

அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

2. Sexual abuse.

அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

3. Emotional abuse and Girl child neglect

அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.

இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.

நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.

பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.
SK
'டேய் வாடா, கிளாஸ்'கு லேட் ஆச்சு'

'இருடா, இட்லி வர்ற இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமாம்., நீ வேணும்னா போ, நான் அப்பறம் வர்றேன்'.

'இந்த இட்லிக்காக கிளாஸ் கட் அடிக்கிறியா'.

இது எனக்கும் இட்லி'கும் ஆன பந்தத்தை பற்றி சொல்லும். இட்லியும் தோசையும் காலை சாப்பாட்டுக்கு இருக்கற அப்போ எல்லாம் முதல் வகுப்புக்கு ஒண்ணு லேட்டா போவேன் இல்லை போகவே மாட்டேன். கல்லு போல இருக்கற ஹாஸ்டல் இட்லியே இப்படின்னா, பூ போல இருக்கற அம்மா செய்யற இட்லி எப்படின்னு நான் சொல்லவே வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளி நாடு வந்த அப்பறம் நாம மொதல்ல மிஸ் பண்றது நம்ம சாப்பாடு தான். என்ன தான் சாதம் சாப்பிட்டாலும் இட்லி தோசைக்கு ஈடு வரவே வராது.

தலைவனை பிரிஞ்சு தலைவி ஏங்குவது போல (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ) நமக்கும் இட்லிக்கும் ஆன அந்த ஒரு பிரிவு ரொம்ப வாட்டிகிட்டே தான் இருக்கும்.

சரி, போய் ஹோட்டல்ல சாப்பிடலாமேன்னு தானே கேக்குறீங்க. அமெரிக்காவுல இருக்கற போல அதிக இந்திய உணவு விடுதிகள் குறிப்பாக நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு வகைகள் இங்கே கிடைக்கறது இல்லை. அதையும் மீறி கிடைச்சாலும், அஞ்சு ஈரோ, பத்து ஈரோ கொடுத்து ரெண்டு இட்லி சாப்பிட மனசு வர்றது இல்லை.

இதுக்கு ஒரே வழி தன் கையே தனக்கு உதவி தான். ரெண்டு வருஷம் முன்னாடி இந்திய வரும் போது மிக்ஸ்சி வாங்கிட்டு வந்து வெச்சிட்டேன். இந்த தடவை இந்திய வரும் போது மறக்காம, மைக்ரோவேவ் இட்லி ப்ளட் வாங்கிட்டு வந்துட்டேன்.
அதோட கடை திறப்புவிழா போன வாரம் தான் நடந்திச்சு. படங்கள் உங்களுக்காக இங்கே. உங்கொப்புரானே மாவுல இருந்து எல்லாம் நானே அரைச்சு இட்லி வரைக்கும் எல்லாம் நானே செஞ்சது. மொதோ மொரையே வெற்றி வெற்றி வெற்றி. 52 இட்லி மூணு பேரு ஒரு வேலை சாப்பாடுக்கு முடிச்சோம். (இட்லி அளவு கொஞ்சம் சின்னது தான், இருந்தாலும்.........).
இன்னைக்கு வேற வித்யா, ஹோட்டல் பத்தி பதிவு எழுதி என்னை கிளப்பி விட்டுடாங்க. என்ன தான் இருந்தாலும் அவன் அவனுக்கு அவன் அவன் சமையல் தான் அமிர்தம் (இப்படி சொல்லி மனசை தேத்திக்க வேண்டியது தான்).

இந்த இட்லி ப்ளேட் பற்றிய மேலதிக விவரம் அறிய இங்கே பார்க்கவும். இது எல்லாம் பெரிய அளவு இட்லிக்கு. சின்ன அளவு தான் நான் செஞ்சது. பெரிய அளவு விலை முப்பது டாலர் போட்டு இருக்கு. நான் திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடைல நூத்தி நாப்பது ரூபாய்க்கு வாங்கினேன். வேற எங்கயும் விசாரிச்சா பெரிய இட்லி ப்ளேட் பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இருக்கு.

யாருப்பா அங்கே இருந்து 'தம்மா தூண்டு இட்லிக்கா இம்புட்டு பெரிய பதிவுன்னு கேக்குறது'. அஞ்சு ரூபா பத்து ரூபா கொடுத்து இட்லி சாப்டா அதோட மதிப்பு மரியாதை தெரியாது மக்கா உங்களுக்கு எல்லாம். :) :)

கடைசியா எல்லாருக்கும் சொல்ல விரும்புவது

நாங்களும் இட்லி சாப்பிடுவோம்ல (அவ்வ்வ்வ்வ்)

அளவில்லா இட்லியுடன்,
எஸ். கே.
SK
சர்க்கரை, ரத்த அழுத்தம், ஹைபர் டென்ஷன் இது எல்லாம் எப்படி ஒரு வியாதியோ என்னை பொறுத்த வரைக்கும் அதே போல ஒரு வியாதி தான் இந்த ஆர்வக்கோளாறு. அதோட விளைவா ஒண்ணு உதவி பண்றேன்னு வம்புல மாட்டுறது இல்லைன்னா கெட்ட பேரு வாங்குறது இல்லைனா ஆறுதல் சொல்றேன்னு அறிவுரை சொல்றது. இந்த வியாதி எனக்கு ரொம்பவே அதிகம். (குடும்ப வியாதின்னு கூட சொல்லலாம் :) )

நானா போய் வம்புல மாட்டுறது ஒரு விதம். தானா வந்து என்னை மாட்ட வைக்கறது ஒரு விதம். சில உதாரணங்கள் இப்போ

1. பன்னிரெண்டாவது படிச்சி ஒரு அளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கிட்டு பொறியியல் கல்லூரில சேர்ந்திட்டு நான் பண்ண அட்டகாசம். என்னோட நண்பர்களோட சகோதரிகள் சகோதரர்கள் எல்லாரும் அப்போ தான் பன்னிரண்டாவது படிச்சாங்க. நான் பேசமா இருக்கவே மாட்டேன். மாசத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கு போவேன். அப்பவும் இந்த தோழர்கள் வீட்டுக்கு போனா அவுங்க தங்கச்சி, தம்பிங்க கிட்டே போய் எப்படி படிக்கறே, என்ன மார்க் வருது, என்ன டியூஷன். ... இது போல ஆயிரத்து எட்டு கேள்வி. பாவம் புள்ளைங்க எவ்ளோ தான் தாங்குவாங்க. ஒரு அளவுக்கு மேல நான் வந்து இருக்கறதா வாசல்ல வண்டி நிக்கறதை வெச்சு கண்டு புடிச்சிட்டு அப்படியே வாசலோட ஓடி போய் நான் போன அப்பறம் வந்தவங்க எல்லாம் இருக்காங்க.

இதுல இருந்து இப்போ கொஞ்சம் மீண்டு வர்றேன். முடிஞ்சா வரைக்கும் யாரவது படிக்கறேன்னு சொன்னா, 'அப்படியா, ஆல் த பெஸ்ட். நல்லா படிங்க'. இதோட நிறுத்திக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இந்த தடவை இந்தியா வந்து இருக்கும் போதும், 'தம்பி, என் பையன் பன்னிரெண்டாவது படிக்கறான். உன்னை பாக்க அனுப்பறேன். கொஞ்சம் புத்திமதி சொல்லி அனுப்புப்பா'.
நான் மனசுக்குள்ள, 'ஏன் உங்க புள்ளை நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ?? ', ஆனா வெளில சிரிச்சுகிட்டே 'ஹி ஹி ஹி, வர சொல்லுங்க'.

2. இந்த கெரகம் அதோட விட்டிச்சா, காலேஜ் போனாலும் விடறது இல்லை. ஏதோ நான் பெருசா சாதித்தது போலையும், ஜூனியர்ஸ் எல்லாருக்கும் ஒரே அட்வைஸ் தான். இந்த காரணத்துல என்னை புடிச்சவங்களும் உண்டு. என்னை பாத்து தலை தெறிக்க ஓடினவங்களும் உண்டு. உண்மைய சொல்லனும்னா, ஓடினவங்க தான் அதிகம்.

கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு ஜூனியர் கிட்டே பேசிட்டு இருந்தேன், 'அண்ணா, இது மாதிரி இருக்குன்னா. எதாவது அட்வைஸ் சொல்லுங்க அண்ணா' அப்படின்னு கேட்டான். 'அட்வைஸ் நானா. என்னடா காமெடி பண்றே'னு கேட்டேன். 'யோவ், ரொம்ப பந்தா பண்ணதையான்னு சொல்லிட்டு போறான்'. நானும் நல்லா புள்ளையா இருக்கணும்னு பாத்தா விட மாட்டேங்குறாங்கையா.

3. இந்த பழக்கம் சரி இந்தியாவோட போச்சு, வெளி நாடு வந்தமே அப்படின்னு ஒழுங்கா இருந்தமா. இங்கே வந்தும் இதே கெரகம் தான். தானா போய் உதவி பண்றேன்னு கெட்ட பேரு வாங்கினது அதிகம். அதுல ஒரு ரெண்டு கதை இங்கே சொல்லுறேன்.

தீசிஸ் எழுதிகிட்டு இருந்த நேரம். என்னை போலவே இன்னொரு இந்திய பையனும் தீசிஸ் எழுதி கிட்டு இருந்தான். நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 'எம். எஸ். வோர்ட்'ல எப்படி எளிமையா தீசிஸ் அடிக்கறதுன்னு கத்துகிட்டு செஞ்சு இருந்தேன். நம்ம புள்ளை அதே எடத்துல தடவி கிட்டு இருந்தாரு. இதை நான் போய் பாத்திட்டு, தம்பி, இப்படி இப்படி எல்லாம் பண்ணலாம்னு சொல்லி கொடுத்திட்டு (வெளில போற ஓணானை .... ') அவரோட தீசிஸ் தொண்ணூறு பக்கம், அதுல ஒரு முப்பது பக்கம் கிட்டே எப்படி செய்யறதுன்னு செஞ்சு வேற காமிச்சேன்.

ஒரு வாரம் கழிச்சு இன்னொரு நண்பன் கிட்டே சொல்லி இருக்காரு, 'இவன் தீசிஸ்'கு உதவி பண்றேன்னு என்னோட நேரம் எல்லாம் வீணடிச்சிட்டு போய்ட்டான்' அப்படின்னு. நான் சொல்லி கொடுத்த படி தான் தீசிஸ் செஞ்சு இருக்கார் அப்படின்னு அப்பறம் அவரோட தீசிஸ் பார்க்கும் போது தெரிஞ்சுகிட்டேன்.

4. சரி இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் நம்ம நாட்டு மக்கள் கிட்டே தான் நடக்கும் போல இருக்குன்னு நினைச்சேன். நமக்கு தான் அலைவரிசை ஒத்து வரலை. பேச தெரியாம பேசுறோம்னு நினைச்சுகிட்டேன். என் நேரம் சும்மா விடுமா என்னை.

இப்போ நான் இருக்கற ஊருல மெட்ரோ ரயில் நிறைய உபயோகிப்பாங்க. அங்கே ஒரு ரயில் போகிற பிளாட் போரம் கண்டு புடிக்கறது கொஞ்சம் கஷ்டம். மூக்கை சுத்தி போறா போல தான் போக வேண்டி இருக்கும். அது புதுசா வரவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். எனக்கும் ஆரம்ப நாள்ல அப்படி தான் இருந்தது.

என்னோட கெட்ட நேரம் அந்த பிளாட் போரம் போற வழி தான் நான் எப்போதும் உபயோகிக்கற வழி. அங்கே நின்னுகிட்டு தொலாவிகிட்டு இருக்கறவங்களை பாத்தாலே தெரியும் இந்த பிளாட் போரம் தான் தேடிகிட்டு இருக்காங்க சொல்லி. என் சனி, வாய வெச்சுகிட்டு சும்மா இருப்பேனா. 'இதைத்தான் தேடுறீங்களா' அப்படின்னு அவுங்க பாஷைல போய் கேட்டு வழி சொல்லுறது. என் கலருக்கும், அவுங்க மொழிய தட்டி தடவி பேசறதுக்கும் பாத்து பயந்து ஓடினவங்க தான் அதிகம். ஒரு வேலை பிச்சை எடுக்க காசு கேட்டு வந்தேன்னு நினைபாங்கலோ இல்லை எதையாவது திருடிட்டு போய்ட போறான்னு நினைபாங்கலோ யாரு கண்டா.

இதுக்கு இப்போ சமீபமா ஒரு முடிவு கட்டிட்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வெச்சு படிக்க ஆரம்பிச்சுடறது. சோ, தலை நிமிந்து பாத்தா தானே பிரச்சனையே. :) :)

5. அடுத்து நம்ம விஷயத்துக்கு வருவோம். பதிவுலகம். பதிவை படிச்சோம், பின்னூட்டம் போட்டோம் அட்லீஸ்ட் ஒரு ஸ்மைலி போட்டோம் இல்லைனா மூடிகிட்டு இருந்தோம்னு இருக்கணும். அப்படியும் இல்லையா நீயே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு உனக்கு என்ன பொலம்பனும் அப்படின்னு தோணுதோ பொலம்பிக்கோ.

ஏதோ நான் தான் சமூகத்தை சீர் திருத்த வந்தவன் போல நல்லா எழுதறவங்க கிட்டே போய் நீங்க இந்த தலைப்பை பத்தி எழுதலாமே அப்படிங்கறதும். இன்னும் ஆர்வ கோளாறு அதிகமா போய் பர்சனல் ஈமெயில் முகவரில தொடர்பு கொண்டு பதிவை பத்தி எதாவது நல்லது இருந்தா சொல்றது, கேள்வி இருந்தா கேக்குறது. இந்த மாதிரி தேவையே இல்லாத வேலை எல்லாம் செய்யறது. இந்த விடயத்தை கம்மி பண்ண ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்கேன். பண்ணிடுவேன் வெகு விரைவில். :). அரை கழுதை வயசாகுது, இதை கூட செய்யலைனா எப்படி மக்கா.

இது எல்லாம் என்னோட ஜகதல பிரதாபங்கள்ள ஒரு பகுதி. இப்படியே தினம் பன்னு வாங்கி வாங்கி ஒரு பேக்கரியே நடத்தலாம் போல இருக்கு. இதை போல் தொந்தரவு என்னால் உங்கள் யாருக்கேனும் ஏற்பட்டு இருந்தால் மன்னிச்சுகோங்க மக்கா. திரித்திகொள்ள முயற்சி பண்றேன். இந்த வியாதிய கம்மி பண்ண உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணிச்சுனா சொல்லிட்டு போங்க. அதையும் முயற்சி பண்ணி பாத்துடறேன்.

அளவில்லா புலம்பலுடன் :) :)
எஸ். கே.

SK
என்னுடன் கல்லூரியில் சேர்ந்து படித்த சில நண்பர்களும் சரி, பள்ளில சேர்ந்து படித்த சில நண்பர்களும் என்னை விட அதிகம் மதிப்பெண் வாங்கியவர்கள் உண்டு. மேலும் நல்ல திறமைசாலிகள், படிப்பு மட்டும் நில்லாமல் கலை, எழுத்து, நாடகம் அனைத்திலும் கலக்கியவர்கள் உண்டு.

இது போல நல்ல மூளை இருந்தும் மேல் படிப்பு படிக்காதவர்கள் அதிகம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்றவர்கள் தான் அதிகம். அதிலும் சிலர் துறை சார்ந்த வேலை கிடைக்காமல், ஐ டி அல்லது மார்க்கெட்டிங் துறை வேலைக்கு சென்றவர்களும் உண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், மேல் படிப்பு பற்றிய சரியான விவரம் தெரியாமல் இருத்தல் போன்றது சொல்லலாம்.

இங்கு நான் வெளி நாடு என்று சொல்வது ஒரு வாய்ப்பு என்கிற அர்த்தத்தில் எடுத்து கொள்ளவும். வெளி நாடு செல்வது தான் சிறந்தது என்கிற வாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒரு வேலை நான் படிப்பு முடிந்து இந்திய திரும்புகையில், நான் அவர்களை ஒத்து பார்க்கும் போது சம்பளத்தில் அதிகமோ, குறைவோ, அதே அளவோ வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. மீண்டும் நான் இங்கே சம்பளம் என்று சொல்வது ஒரு அளவுகோல் அவ்வளவே.

என்னை ஒத்த தலைமுறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனக்குமே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்றால், என்னையும் என் மூத்த தலைமுறையையும் நான் எப்படி பார்க்க வேண்டும்.

அதாவது என் தந்தை தனது முப்பதாவது வயதில், தமிழ்நாட்டு எல்லையை விட்டே தாண்டியது இல்லை அல்லது இருபது ஆயிரம் சம்பளம் வாங்க வில்லை அல்லது அறுபது வயதானாலும் இப்போதும் இருபது ஆயிரம் தான் சம்பளம் வாங்குகிறார்னு நான் அவரை கேலி செய்தல் முறை ஆகுமா ??

அப்படியும் இல்லை என்னோட பள்ளி ஆசிரியரைவிடவும், கல்லூரி பேராசியரைவிடவும் ஒரு நாள் நான் சம்பளம் அதிகம் வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்காக என்னை அவருடன் கம்பேர் செய்து பேசுதலும் எந்த விதத்தில் சரி ஆகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த முறை, சூழல், சரியான வழிநடத்துதல் இல்லாமை, அவர்கள் வளர்ந்த காலம் இது போல எத்தனையோ காரணங்கள் உண்டு.

இதை எல்லாம் இப்போ எதுக்கு சொல்றே அப்படின்னு யாருப்பா அது கேக்குறது. இளையராஜாவையும் ரஹ்மானையும் கம்பேர் செய்து பேசுறவங்களுக்கு அப்படின்னு நீங்களே நினைச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை மக்கா :)

ஆஸ்கார் புகழ் ரஹ்மானுக்கு என்னுடைய மனாமர்ந்த வாழ்த்துக்கள். ரசூல் குட்டி அவர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும், வலைமாமணி விருது (அதாங்க தமிழ்மண விருது ) பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
எஸ். கே.
SK
சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த பல விடயங்கள், இப்போது நடக்கும் பல விடயங்கள் கண்டு என்னோட மனச்சாட்சி என்னை பார்த்து கேட்ட கேள்விகள்ல டாப் டென் கொஸ்டின்ஸ் :) :) ( நாங்களும் எழுதுவோம்ல :) :) :) )

1. 2008la இந்தியாவுல எட்டு தடவைக்கு மேல குண்டு வெடிச்சது?? சி என் என் ல செய்தி பாத்தியே, ப்ளாக்ல பக்கம் பக்கமா எழுதினியே ?? அதுக்கு என்ன செய்யலாம், அடுத்த தலைமுறையாவது இது இல்லாம எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு ஏதாவது செஞ்சியா ?? 

2. சட்டக்கல்லூரி மாணவர்கள் அடிச்சுகிட்டாங்கன்னு அழுது பொலம்புற நீ, இதோட ஆரம்பம் எங்கே, அதுக்காக நீ என்ன செய்யலாம்னு ஏன் யோசிக்கலை ?? 

3. இப்போ வக்கீல்களும், போலீசும் அடிச்சுகறாங்க, இப்போ பொலம்பற நீ.. இத்தன வருஷமா இது உள்ளேயே இருந்து இருக்கே. அப்போ கவனிக்கலையே. ஏன் ?? 

4.  நான் கடவுள் படம் பாத்து பிச்சைக்காரங்க மேல 'உச்சு' கொட்டுற நீ, உங்க வீட்டுக்கு பக்கமே ஆயிரம் பிச்சை காரங்க இருக்கும் போது, அவுங்களுக்கு ஒண்ணுமே செய்ய தோணலையே ஏன் ?? 

5. அபியும் நானும், வாரணம் ஆயிரம் படம் பாத்து பொண்ணு மேலையும், அப்பா மேலையும் பாசம் பொங்குற உனக்கு, அவுங்க வாழ்க்கை முழுக்க பக்கத்துல இருக்கும் போது அவுங்க அருமை தெரியலையே ஏன் ?? அவ்ளோ சினிமாவும், தொலைக்காட்சியும் உன் மூளைய மழுங்க அடிச்சுடிச்சா ?? 

6. மானாட மயிலாட பாத்து நேரம் கழிக்கற நீ, உன் வீட்டு குப்பைய குப்பைதொட்டில கொட்ட நேரம் இருக்க மாடேங்குதே ஏன் ?? 

7. அடுத்த ஆட்சி கலைஞரா, அம்மாவான்னு ரொம்ப ஆராய்ச்சி பண்ற நீ, அடுத்த வருஷம் உன் வாழ்க்கைல இதை சாதிச்சு இருக்கணும்னு ஒரு குறிக்கோள் இல்லாம இருக்கோமே அது ஏன் ?? 

8. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி, கனிமொழிக்கு எம். பி. பதிவு, கயல்விழிக்கு எம். பி. பதிவி அப்படின்னு, அவரோட குடும்பத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கற நீ, உன்  வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன தேவை ( அப்பா அம்மாவுக்கு என்ன தேவை, பொண்டாட்டிக்கு என்ன வேணும், உன் பொண்ணோ/புள்ளையோ என்ன படிக்குது, எப்பட படிக்குதுன்னு   தெரிஞ்சுக்க மாட்டேங்குறியே ஏன் ??  

9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ? 

10. குசேலனும் நான் கடவுளும் மொதோ நாள் அதிக பணம் கொடுத்து படம் பாத்திட்டு விமர்சனம் எழுதனும்னு துடிக்கற நாம,  ஒண்ணாவது படிக்க கூட கஷ்டபடுற பணம் இல்லாம இருக்கற குழந்தைகளை பத்தி யோசிக்காதது ஏன் ??

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-

அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது மொக்கை மக்களுக்கு தெரியுமா?

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ்சியே, அதை இன்னைக்கு நல்ல படியா சமைக்கவாவது செலவு செஞ்சு இருக்கலாமே :) :) 

அன்புடன், 
எஸ். கே.  

பி. கு. : ரொம்ப ரொம்ப நன்றி பரிசல் :) 
SK
ஊருக்கு போயிட்டு வந்தா கட்டுரை எழுதணுமாமே. நாங்களும் எழுதுவோம்ல.

இரண்டு வருடம் கழித்து இந்தியா போயிட்டு வந்தாச்சு. அதே இந்தியா ஆனால் பல நல்ல மாற்றங்கள். ஒட்டுமொத்தமாக நல்ல படியா அமைந்தாலும், ரெண்டு விஷயம் என்னை ரொம்பவே சங்கட படுத்திச்சு.

ஒண்ணு, என்னோட உடல்நிலை. அப்போ அப்போ சரி இல்லாம போய்
ரொம்ப படித்திடிச்சு.

ரெண்டாவது, நேரம் தவறுதல். ஒரு நண்பரை பார்க்க ஏழு மணிக்கு வர்றேன்னு
சொன்னா சொன்ன நேரத்துக்கு போக முடியலை. இத்தனை மணிக்கு தொ(ல்)லை பேசுறேன்னு
சொன்னா அப்படி சரியா சொன்ன நேரத்துக்கு செய்ய முடியலை. இது மாதிரியே தொடர்ந்து நடந்தது. இந்தியாவில் என்னை பிளான் பண்ணிக்கொள்கிற விதம் சரி இல்லைன்னு மட்டும் புரிஞ்சது.

சரி விடயத்துக்கு வருவோம். இங்கே பயணத்துல நடந்த சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை எழுதலாம்னு இருக்கேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திருச்சி டு நாகர்கோயில்

போய் சேந்த அன்னைக்கே நாகர்கோயில்'ல ஒரு நண்பன் கல்யாணத்துக்கு போறதா பிளான். இரவு ஒன்பது மணிக்கு திருச்சில இருந்து பேருந்து. பேருந்து கெளம்பி சரியா போய்கிட்டு இருந்தது. பத்தரை பதினோரு மணி சுமாருக்கு பின்னால இருந்து ஒரு சலசலப்பு.

கொஞ்ச நேரத்துல சத்தம் அதிகம் ஆச்சு.

பஸ்'ல வந்தவரு யாரோடையோ தொலைபேசுராறு,

'மாப்ளை, முன்னாடி இருக்கறவன் ஜன்னலை மூடுன்னா மூட மாட்டேன்குறான். ஒரே பிரச்சனையா இருக்கு. பன்னிரண்டு மணி போல பஸ் மதுரை வரும். நீ நம்ம ஆளை எல்லாம் கூடியாந்திடு. அங்கே பாத்துக்கலாம்'.

தம்மாதுண்டு சன்ன கதவு மூடாத விஷயத்துக்கு எதுக்கு .. அப்பறம் நடத்துனர் வந்து பஞ்சாயத்து பண்ணி வெச்சிட்டு போனாரு. நானும் அரண்டு போய் இருந்தேன்.

அப்படியே, மறுநாள் அதே போல ஒரு பேருந்துல நாகர்கோயில் டு திருச்சி பயணம். கொஞ்சம் காய்ச்சல் வர போல இருந்தது. எனக்கு பின்னாடி இருக்கைல இருக்கறவரு எங்க இருக்கைல இருக்கற கதவை திறந்து தான் வைப்பேன்னு அடம் புடிக்கராறு. அப்போ தான் அவருக்கு காத்து சரியா வருதாமாம்.

'அண்ணே, ரொம்ப பனியா இருக்கு. ஒடம்பும் சரி இல்லாதது போல இருக்கு. கொஞ்சம் சன்ன கதவை மூடிகிட்டா நல்ல இருக்கும்னு சொன்னேன்'

'ஒரே புழுக்கமா இருக்கு தம்பி, அது எல்லாம் முடியாது அப்படின்னு சொன்னாரு'.

போகும் போது நடந்த நிகழ்ச்சி அப்படியே கண்ணுக்கு முன்னாடி வந்திச்சி. எனக்கு அதுக்கு மேல பேச 'தில்' இல்லை. சரிண்ணே அப்படின்னு சொல்லிட்டு பின்னாடி கடைசில ஒரு இருக்கை காலியா இருந்திச்சு, அங்கே போய் ஒக்காந்துட்டேன். வேற என்ன பண்ண :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னைக்கு ரெண்டு நாள் தான் போக முடிஞ்சது, அதுவும் நண்பனுக்கு ஒரு அவசர வேலையா.

நானும் அந்த பிரபல பதிவரும் ஒரு உணவகுத்துல ஒக்காந்து இருந்தோம். எல்லாம் பேசி முடிச்சிட்டு சரி பில் கொடுக்கலாம்னு பேரரை அவரு கூப்பிடறாரு.

'தம்பி'

நோ ரெஸ்பான்ஸ்.

'தம்பி'

நோ வே. நோ ரெஸ்பான்ஸ்.

'அண்ணே'

பேரர் திரும்பி, 'என்ன சார்'

நான் அண்ணனிடம், 'இப்போ தெரியுதுண்ணே, நீங்க ஏன் எல்லாரையும் அண்ணன்னு கூப்பிடரீங்கன்னு. அதையே தொடருங்க. நீங்க தம்பின்னு கூப்பிட்டாலும் யாரும் திரும்பி பாக்க போறது இல்லை', அப்படின்னு சொன்னேன்.

வேற யாருங்க அந்த பதிவரு, 'அண்ணே' புகழ் அண்ணன் அப்துல்லா தான். :) :) :) :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


அடுத்து ஒரு பிரபல பதிவரை பாக்கலாம்னு போனேன். போகும் போதே ஒரு மணி நேரம் லேட். அதுலையே அவுங்க சரி கடுப்புல இருந்து இருப்பாங்கன்னு நினைக்குறேன்.

போயிட்டு அவுங்க கிட்டே பேசிட்டு (??) ( நோட் பண்ணுங்க இந்த கேள்விக்குறியை) இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு நான் அவுங்க கிட்டே கேட்டேன்,

'விஜய் டிவி பாப்பீங்களா'

'பாப்பேன், ஏன்'

'விஜய் டிவில பேசி, கார்னியர் பிருக்டிஸ் கிட்டே சொல்லி ஒரு ஸ்பான்செர் வாங்கலாம்னு இருக்கேன்'

(அவுங்க இவனுக்கு என்ன லூசா, திடீர்னு என்ன என்னவோ சொல்றான்னு யோசிச்சுகிட்டே) ஏன்??

'இல்லை, இந்த பேட்டிய ஒளிபரப்பத்தான்' அப்படின்னு சொன்னேன். :) :) :)

அப்படி தாங்க இருந்திச்சு. அம்புட்டு அமைதி அவுங்க. நான் பாட்டுக்கு ஏதோ பேசிகிட்டே இருக்க. அவுங்க, அளந்து அழகா பதில் சொல்லிகிட்டே இருந்தாங்க.

ஹலோ, யாருங்க அது அங்கே இருந்து யாரு அந்த பதிவர்னு கேக்குறது, அது எல்லாம் பெரிய ரகசியம்கோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சில பல பதிவர்கள் கிட்டே, தொலை பேசில தொல்லை பண்ணினது சந்தோஷமா இருந்தது எனக்கு. அவுங்களுக்கு அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது. நான் என்னத்தை சொல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேபள் ஷங்கர் இங்கே சொல்லி இருந்த தஞ்சாவூர் மெஸ் போய் ஒரு மதிய சாப்பாடு சாப்பிட்டு வந்தது ஒரு சந்தோசம். ரொம்ப நாள் கழிச்சு போனாலும், எல்லாரும் நெனப்பு வெச்சு இருந்தாங்க. அண்ணே, உங்க கிட்டே தான் பேச முடியலை, அடுத்த தடவை முயற்சி பண்றேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திரும்பி கெளம்ப பொட்டி கட்டிக்கிட்டு இருந்தேன். பாட்டி பக்கத்துல இருந்து பேசிகிட்டு இருந்தாங்க.

'ஏன்டா, அந்த ஆல்பம் எல்லாம் எடுத்துகிட்டு போறியா'

'இல்லை பாட்டி, அது வெயிட் அதிகம் இருக்கும். அதுனால எடுத்துகிட்டு போகலை'

'அப்பறம் அந்த லேப்டாப் வெச்சுகிட்டு என்னடா நோண்டிகிட்டு இருக்கே'

'அந்த போட்டோஸ் எல்லாம் இதுல காப்பி பண்ணி எடுத்துகிட்டு போறேன் பாட்டி'

'அப்போ மட்டும் வெயிட் ஏறாதா ??'

'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ் ' லாஜிக்கல் பாயிண்ட்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திரும்பி வரும் போது கொழும்பு வழியா வந்தேன். கொழும்பு விமான நிலையத்துல எழுபது வயது ஜெர்மன் ஒருத்தரோட சில நிகழ்வுகளை பத்தி பேசிட்டு இருந்தேன். முடிஞ்சா தனி பதிவா போடுறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விமானத்துல பக்கத்து இருக்கைல ஒரு பாட்டி. (எனக்கு கொடுப்பனை அவ்வளவே.. ம்ம்... ). எப்போதும் இல்லாதது போல இருக்கைல முதுகு பக்கம் தடிமனா இருந்தா போல இருந்தது. நான் கூட இருக்கைகள் எல்லாம் மாத்தி இருக்காங்கன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அதே மாதிரி தான் பக்கத்துல இருந்த பாட்டிக்கும் இருந்தது போல. திட்டிகிட்டே ஒக்காந்து இருந்தாங்க. மூணு மணி நேரம் கழிச்சு அவுங்க எந்திரிச்சு போன அப்போ பாத்தேன் அங்கே ரெண்டு பொத்தான் இருந்தது. அதுல ஒண்ணை அழுத்தி இதை மாத்திக்கலாம்னு இருந்தது. அதை அந்த பாட்டி வந்த உடனே சொன்னேன்.

எல்லாரும் அதுக்கு பதில் என்ன சொல்லுவாங்க மகாஜனங்களே. நல்ல யோசிங்க.

அந்த பாட்டி, உரிமையா ' அடுத்த தடவை முன்னாடியே சொல்லு' அப்படின்னு சொல்லிச்சு. இது எனக்கு தேவையா மகாஜனங்களே. :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திரும்ப வந்து சேந்தாச்சு. பொலம்பலையும் ஆரம்பிச்சாச்சு.


அன்புடன்
எஸ். கே.