SK

அது என்ன கெட்ட வார்த்தை ?? நானும் ரொம்ப யோசிச்சு பாத்தேன்.

ஒருத்தங்கள திட்டனும்னா சின்ன வயசுலே நாயே, பேயே, பன்னி அப்படின்னு ஆரம்பிக்கறது, கொஞ்ச வயசு ஆனா அப்பறம் மயிறு, மட்டை ஆகி அப்படியே ஒ.. , பு.. , .. இப்படின்னு பறந்து விரிஞ்ச ஒரு தனி விளக்க புத்தகமே எழுதலாம்.

எனக்கு நினைவு தெரிஞ்சு பன்னிரண்டாவது படிச்ச வரைக்கும், என் காலேஜ்ல மொத வருஷம் வரைக்கும் அதிகமா இது எதுவுமே பேசினது இல்லை. முடிஞ்சா வரைக்கும் சிரிச்சு மழுப்பியோ எதாவது செஞ்சு இருக்கேன். ஆனா ரெண்டாவது வருசத்துக்கு அப்பறம் என்னை நான் காப்பதிக்கனும்னா குரலை உசத்தி கத்துனாதான் உண்டுன்னு ஆச்சு அப்படின்னு முடிவு செஞ்சேன்.  அதோட நிறைய பேரு வாய அடைக்கனும்னா எனக்கு இதை விட்ட வேற வழியும் தெரியலை.

அப்பறம் ஒரு காலத்துல குட் மார்னிங் கூட எதாவது ஒரு கெட்ட வார்த்தை கூட தான் வரும் .. அதுவும் நண்பர்கள் வட்டத்துல பேசும் போது. 

இதே தான் அப்பறம் மூணு வருஷம் தொடர்ந்து நடந்தது. வெளி நாடு வந்த அப்பறமும் இதுவே அப்படியே போச்சு. அதோட சந்தோஷமோ, துக்கமோ, விரக்தியோ. வெறுப்போ, வெற்றியோ, தோல்வியோ, இது நம்மோட கலந்த ஒன்னா போச்சு. அதுவும் சில நேரத்துலே அதோட அர்த்தம் எல்லாம் யோசிச்சோம்னா மனசு ரொம்ப கஷ்ட படும். அதுவும் நாம யாரை திட்டனுமோ அவங்களை திட்டாம, அவிங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, மாமா, மச்சான், எல்லாரையும் இழுத்து தான் திட்டுவோம். எப்போ பேசினாலும் நமக்கு அதை பத்தி யோசிச்சதே கெடையாது .

இப்படி இருந்த நம்ம வாழ்க்கைல ஒரு மாற்றம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சூழ்நிலை காரணமா ஒரு ஹோட்டல்ல வேலை செய்யறதுக்கு சேந்தேன். அது வந்து ஒரு ஹிந்தி காரங்க ஹோட்டல். நாம தான் தமிழ் தூக்கி வளத்த தமிழ் மகன் ஆச்சே. அதுனால ஹிந்தி பேச தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் புரியும். அதுவும் இது மாதிரி ஹோட்டல்ல சமையகட்டுலே வேலை செய்யறது எனக்கு ரொம்ப புதுசு. பழக்கமும் கெடையாது.  ஆக மொத்தம் தப்பு செஞ்சு தான் எல்லாமே கத்துக்கணும். இந்த ஹோடல்ளோட சொந்தகாரரு எப்படின்னா கெட்ட வார்த்தையின் ஒட்டுமொத்த களஞ்சியம். அதுவும் கூட்ட நேரம் வேலை அதிகமா இருக்கும் போதோ, ஏதாவது தப்பு செஞ்சாலோ வர்ற வார்த்தைய காது கொடுத்து கேக்க முடியாது. அதுவும் குட் மார்னிங், குட் இவினிங் சொல்றா மாதிரி ஆகி போச்சு. அதுவும் நமக்கு பாஷையும் புரியாம, இவரு என்ன திட்டராரா, இல்லை நட்போட கூப்பிடறாரா  ஒண்ணுமே புரியலை. ஆனா சில நேரத்துலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

இப்போ உரைச்சது இந்த மர மண்டைக்கு  அதுவும் செருப்பால அடிச்ச போல இருந்திச்சு. இப்போ தான் நம்ம மனச்சாட்சி அண்ணே உள்ளே இருந்து வெளில வந்து கேட்டாரு ஒரு கேள்வி, ' ஏண்டி மாப்ள, நீ பேசினா அது பிரன்ட்லி, இதுவே இன்னொருத்தங்க உன்னை பாத்து சொன்னா பீளிங்க்சான்னு'. கேட்ட கேள்வி சரி தானுங்களே.

சரி என்ன பண்ணலாம் அதான் புத்தாண்டு வருது அப்போலேந்து எந்த விதாமான கெட்ட வார்த்தையும் பேசமா நிறுத்திடலாம். அடேய் நிறுத்தறதுன்னு ஆகி போச்சு அது என்ன புது வருஷம், பழைய வருஷம் .. 'நிறுத்து .. உடனே நிறுத்து '

ரைட் ஆபிசெர்..

மக்களே, எல்லாரும் ஆண்டவன் கிட்டே எனக்கு அந்த பொறுமைய கொடுக்க சொல்லி வேண்டிக்கோங்க சொல்லிபுட்டேன் .

இதே கெட்ட வார்த்தை பத்தி இன்னொரு அனுபவம் இருக்கு.. அதை முடிஞ்சா நாளைக்கு இதே பதிவுல அப்டேட் பண்றேன் இல்லை தனி பதிவ போடுறேன் ..

அன்புடன்
எஸ். கே

20 Responses

  1. அடடே ஒரே பீலிங்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்கே. anyways உங்கள் கொள்கையில் உறுதியாக இருக்க வாழ்த்துக்கள்.


  2. நான் கூட கெட்ட வார்த்தைல திட்டுவேங்க. நான் யூஸ் பண்ண பெரிய கெட்டவார்த்தை முடியின் தூய தமிழ் சொல் தான்:)



  3. ஹி ஹி என்னப்பா ரொம்ப ஃபீலிங்க்ஸ் போல

    சில விஷயங்கள் பட்டுத் தெரியனும், அப்பதான்....

    அது மாதிரிதான் இதுவும்

    ஓ - தேசிய வார்த்தை இது...
    தே - தேசியத்தின் உடன்பிறந்தது இது..


  4. சில நேரத்துலே அதோட அர்த்தம் எல்லாம் யோசிச்சோம்னா மனசு ரொம்ப கஷ்ட படும். அதுவும் நாம யாரை திட்டனுமோ அவங்களை திட்டாம, அவிங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, மாமா, மச்சான், எல்லாரையும் இழுத்து தான் திட்டுவோம். எப்போ பேசினாலும் நமக்கு அதை பத்தி யோசிச்சதே கெடையாது .

    எஸ். குமாரானந்தாவா ரிட்டர்ன் ஆகப்போறீங்களா ஜெர்மன்லேர்ந்து,


  5. ண்ணா.. புத்தாண்டு வாழ்த்துகள்..


  6. SK Says:

    வித்யா,

    ரொம்ப நன்றி. முடிஞ்சா வரைக்கும் இருக்க முயற்சி பண்றேன்.

    Amithu,

    Thank you ma.

    அமித்து அம்மா,

    அட நீங்க வேற. ரொம்ப பீல் பண்ணது கிடையாது. சில பல சூழ்நிலையில் இப்படி ஆகுது.

    கார்க்கி,

    நன்றி. Happy New year.


  7. RAMYA Says:

    அட இது என்னதுப்பா படிக்கும் காலத்துலே இதெல்லாம் சகஜம் தானே
    பீலிங்கி வேண்டாம்ப்பா!!!


  8. RAMYA Says:

    யாரு காரணமோ அவங்களை மட்டும் திட்டாமே வீட்டிலே இருக்கிற மொத்தம் போரையும் இழுத்து
    திட்டுவாங்களா?

    இது என்னா?

    சரி பரவா இல்லை விடுங்க

    இப்போதான் நீங்க Feelings of World ஆகிட்டீங்களே

    எல்லாம் ஓகே, கொள்கையில் உறுதியாக இருந்த்திட்டா அப்புறம் என்னா ?

    பேரை சந்தொஷமானந்தா என்று மாற்றி விடலாம்


  9. RAMYA Says:

    Dear SK,


    HAPPY NEW YEAR!!!!!


  10. நல்ல முடிவு எஸ்.கே

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)


  11. SK Says:

    நன்றி ரம்யா மற்றும் தா. பி. :-)


  12. \\பேரை சந்தொஷமானந்தா என்று மாற்றி விடலாம்\\

    நல்ல பெயர் ...


  13. எங்க இருக்கிங்க சகா???????????


  14. 'கனி இருக்க காய் கவர்ந்தற்று' நமது திருக்குறள் சொல்லும். படபடத்தானே அனுபவம். அதுசரி, இந்தி கத்துகிட்டாச்சா இல்லையா?


  15. இப்படி எல்லாம் கூட பதிவு போட முடியுங்களா..

    ரொம்ப பீலிங்ஸ் ஆயிடுச்சுங்க..

    என்ன செய்யற்து...

    இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...


  16. SK Says:

    அன்புமணி,

    வருகைக்கு நன்றி. இந்தி இன்னும் பேசி பழகலை. பாப்போம் :)

    இராகவன் நைஜீரியா,

    வாங்க அண்ணே. நோ பீலிங்க்ஸ் யா. இட்ஸ் ஆல் இன் தா கேம் :)


  17. பதி Says:

    சிந்திக்க தூண்டும் பதிவு SK...

    இதைப் பற்றிய விரிவான பதிவொன்று உங்களது பார்வைக்கு.
    http://urpudathathu.blogspot.com/2005/03/blog-post_16.html


  18. 2008 ல எழுதினதா!!! ஆனால் இன்னும் விட வில்லை, சரியா!!!