SK
உதவி செய்யரதுலையே ரொம்ப பொன்னானது எது. காசு பணம் கொடுக்கறதா?? அது கொடுத்ததை தான் ஒரு மாசம் அதிகமா வேலை பாத சம்பாதிசுடலாமே.

சரி அப்பறம் சோறு போடறதா ?? ஒரு வேலை சோரோ ஒரு மாச சோரோ போட்டு என்ன பெரிய மாற்றம் வர போகுது..

சரி அப்பறம் கடவுளுக்கு கொடுப்பாங்களே முடி, அதுவா ?? ஏங்க, வெட்டுன முடி வளராது சொன்னா எவனாவது அவளோ எளிதா மொட்டை அடிச்சுபாங்களா ??

சரி அப்பறம் என்ன தாண்டா சொல்ல வரேன்னு கேக்குறீங்களா. நேரம். நாம ஒருதங்களுகாக செலவிடுகிற நேரம். என்ன இப்போ விட்ட அப்பறம் புடிக்க முடியாது. போனது போனது தான். உதாரணத்துக்கு கல்யாணம் செஞ்ச அப்பறம் பொண்ணுங்க தான் கணவன் கிட்டே இருந்து எதிர் பாக்கறது, அவ கூட கொஞ்சம் நேரம் செலவிடரானா அப்படின்னு தான்.

சரி கதை எங்கயோ போகுது ?? அது எல்லாம் இருக்கட்டும், இப்போ இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தானே கேக்குறீங்க. மேல படிங்க. அட மேலன்னு உடனே ஆரம்பத்துக்கு போய்டாதீங்க, கீழ எழுதி இருக்கற விவரத்தை படிங்கன்னு சொன்னேன்.

நேத்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதுலே இருந்த விஷயத்தை நான் கீழ கொடுத்துடறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Dear friends,
Some of the visually challenged students at Loyala College, Chennai require SCRIBES, who can write the Exams for them & hence helping them pass thru the academic successfully. Basically the role of a SCRIBE is to just read the question paper for the student and write the answers dictated by the students in the Answer sheet. Please check the attached excel for exam schedule.If you and your friends could spare around 3 hours on any of the days mentioned in the excel, these students would be really thankful.Please do consider this as a direct request from the students

Please contact Mr.Mathew 9444223141 for further communication.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரி ஏதோ நம்பிக்கையா இருக்கேன்னு சொல்லி நம்ம அப்துல்லா அண்ணனுக்கு அதை மாதி அனுப்பினேன்.

ஒரு மணி நேரத்துலே பதில்

'மேத்யூவிடம் பேசி விட்டேன். நாளை நானே பரிச்சை எழுதப் போகிறேன்' அப்படின்னு??


வாய் அடைச்சு போய் நின்னுட்டேன். கலக்கிடீங்க அப்துல்லா அண்ணே.

சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு. பதிவு எழுத வேணாம்னு இருந்தே என்னை எழுத வெச்சுடீங்க.

என்னோட மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
26 Responses
  1. அனபினன் எஸ்கே

    அதுதான் அப்துல்லா - பிறருக்கு உதவுவதில் இன்பம் காண்பவர்
    அவருக்கு எல்லா நலன்களையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

    நல்வாழ்த்துகள்


  2. rapp Says:

    நானும் எத்தனையோ பேரை பாத்திருக்கேன். ஆனா இவர மாதிரி ஒருத்தரை பாத்ததில்லை. நெறைய பேருக்கு உதவப் பிடிச்சாலும், மெனக்கெட விரும்ப மாட்டாங்க. ஆனா இந்த விஷயத்தில் இவர் நிஜமாவே ரொம்ப ரொம்ப நல்லவர். எனக்கு வலையுலகில் கெடச்ச மிக நல்ல நட்புகளில் இவர் மிக முக்கியமானவர். இவ்ளோ செய்றவர் பேசும்போது அவ்ளோ ஜாலியா பேசறதுதான் இவரோட ப்ளஸ். அடுத்த முறை சென்னை வரும்போது அண்ணனயெல்லாம் பாத்து பேசணும் என ஆவலாக உள்ளது.


  3. rapp Says:

    குமார் உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள், தக்க சமயத்தில் அவரோட கவனத்திற்கு கொண்டுபோனதற்கு. போனதரமும் நீங்க செஞ்சது ரொம்ப பாராட்டுக்குரிய விஷயம். நீங்க என்னோட நண்பரானது ரொம்ப சந்தோஷம்:):):)


  4. Mahesh Says:

    //நெறைய பேருக்கு உதவப் பிடிச்சாலும், மெனக்கெட விரும்ப மாட்டாங்க. ஆனா இந்த விஷயத்தில் இவர் நிஜமாவே ரொம்ப ரொம்ப நல்லவர். எனக்கு வலையுலகில் கெடச்ச மிக நல்ல நட்புகளில் இவர் மிக முக்கியமானவர். இவ்ளோ செய்றவர் பேசும்போது அவ்ளோ ஜாலியா பேசறதுதான் இவரோட ப்ளஸ்//

    repeattttttttttttttttt


  5. என்னது அண்ணணே பரிட்சை எழுதப் போறாரா?
    அவரு இருக்க பதவிக்கு எப்படித்தான் நேரம் கிடைக்குதுன்னு தெரியல,
    இதத்தான் மனமிருந்தால் மார்கமுண்டுன்னு சொல்லுவாங்க போல.
    உண்மையிலயே அவரு கூட ரொம்ப நெருக்கமா பழகுறதுல எனக்கு பெருமையா இருக்கு.

    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் எஸ் கே.


  6. சரியான ஆளுக்கு சரியான நேரத்துல மெயில் அனுப்பின உங்களுக்கு நன்றியும் பாராட்டும். அவருக்கா? அட அவரு கிடக்கறாருங்க வேலையில்லாதாவ்ரு..


  7. வாவ்... சூப்பர்....

    பாராட்ட வார்த்தைகளே இல்லே - உங்களையும், அப்துல்லாவையும்....


  8. ஆஹா.. அப்துல்லா.. இன்னும் இன்னும் என் மனதில் ஆழமாக போய்க் கொண்டே இருக்கிறீர்கள். ரொம்ப பெருமையா இருக்கு... :)


  9. அப்துல்லா அண்ணே என்ன சொல்றதுன்னு தெரியல.


  10. Unknown Says:

    அப்துல்லா அவர்களுக்கு , அவர் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். உதவி செய்ய நினைப்பது வேறு, உதவி செய்வது வேறு. சமயம் கிடைத்தால், தங்களை சந்திக்க ஆவல்!


  11. ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள்


  12. anujanya Says:

    அப்துல்லாவை ஓரளவு அறிந்ததால் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், பெருமிதமாக இருக்கிறது. இவர் பதிவுலகில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. உங்களுக்கும் பாராட்டுக்கள் எஸ்.கே.

    அனுஜன்யா


  13. அப்துல்லா வியப்படையவைக்கிறார். இத்தனை நல்லவர்கள் கூட இன்னும் இருக்கிறார்களா?

    பதிவுக்கு மிக்க நன்றி எஸ்.கே.


  14. Thamira Says:

    உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மறுக்காமல் கலந்துகொள்ளவும்.

    நேரமின்மையால் உங்கள் பதிவு குறித்த கருத்துகளை பின்னர் பகிர்கிறேன். நன்றி.!


  15. Arizona penn Says:

    வணக்கம் SK, நீங்க கேள்விப்பட்டது ரொம்ப சரி...வேலை ரொம்ப அதிகமா இருப்பதால் என்னால் தொடர்ந்து பின்னூட்டங்களில் கவனம் செலுத்த முடியலை. ஆனா உங்களை மாதிரி நண்பர்கள் அதை பெரிசா எடுத்துக்காம கருத்துக்கள் பரிமாறுவது ரொம்ப உற்சாகத்தை தருது...நன்றி !!!!
    உண்மையை சொல்லனும்னா நண்பர் அப்துல்லா பரீட்சை எழுத தீர்மானிச்சது எவ்வளவு பெரிய விஷயமோ, அதே மாதிரி சரியான நபருக்கு நீங்க அந்த mail அனுப்பினதும் பாராட்டுக்குறிய விஷயம்....வாழ்த்துக்கள் !!!!


  16. மீண்டும் எழுதினாலும், முதல் பதிவே அசத்திட்டீங்களே.

    புதுகை அண்ணா again U R GREAT


  17. JUST NOW I CALLED Mr. Mathew S.K and ask him to send the exam timetable. He said, he will send the exam timetable to be conducted in next week. Thanks for your useful information and rootcause to help others.


  18. SK Says:

    நன்றி சீனா, ராப், மகேஷ், ஜோசப் பால்ராஜ், கார்க்கி, ச்சின்னப்பையன், சஞ்சய், குடுகுடுப்பை, தஞ்சாவூரான், தாரணிப்ரியா, அனுஜன்யா, கயல்விழி, தாமிரா, செல்வில்கி, அமிர்தவர்ஷிணி அம்மா.

    தாமிரா, ராப் முன்னாடியே என்ன இழுத்துவிட்டுட்டாங்க இந்த விளையாட்டுலே. நானும் எழுத முயற்சி பண்றேன். நன்றி மீண்டும்.

    அமிர்தவர்ஷிணி அம்மா, மிக்க மகிழ்ச்சி நீங்களும் உதவ முன்வந்ததுக்கு. உங்களுக்கு அதை பற்றிய விவரம் வந்தவுடன் தமிழ்மணத்தில் பதிவாக போடமுயற்சி செய்யுங்கள். மேலும் வேறு யாரவது நேரம் இருந்தால் பங்குபெற ஒரு வாய்ப்பாக இருக்குமே. நன்றி.


  19. எனக்கு வந்த மெயில் ஐ அப்படியே என் friends and collegueskku forward பண்ணிட்டேன். MANY OF THEM WILLING TO WRITE THE EXAMS.


    U DONE A GREAT JOB SK.


  20. SK Says:

    ரொம்ப நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா. கொஞ்சம் அதை எனக்கும் கொஞ்சம் அனுப்பறீங்களா.

    அப்துல்லா அண்ணனும் கேட்டுட்டு இருக்காரு.


  21. SK Says:

    I forget to mention my email address above.

    It is friends.sk@gmail.com

    Thanks again.



  22. SK Says:

    மெயில் கிடைச்சது.

    மிக்க நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா.


  23. Anonymous Says:

    வாழ்த்துக்கள் சகோதரர்களே..


  24. SK Says:

    நன்றி தூயா


  25. RAMYA Says:

    Dear SK,

    எல்லாருக்கும் வாழ்த்துக்கள், அப்துல்லா அண்ணனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள், அமிர்தவர்ஷிணி அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்.

    ரம்யா