SK
சனி கிழமை எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததாகவும், அவருக்கு மாற்று கால் பொறுத்த உதவும் படியும் கேட்டுக்கொள்ள பட்டு இருந்தது. நண்பர்கள் நால்வருடன் இதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.

ஜெய்ப்பூர் பூட், 1975'இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும்.

Jaipur Foot

இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை நானும் நமக்கு தெரிந்தவர்களுடன் பரப்பி முடிந்த வரை நாம் அறிந்தவர்களுக்கு உதவ முன்வருவோமா.

அதிகம் வாசிக்க படுகின்ற பதிவர்கள் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவோ, அல்லது ஒரு காட்ஜெட் போன்றவையோ போட்டு இருக்கும் பட்சத்தில் நிறைய நண்பர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதே போல் நமக்கு தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து அவர்கள் ஜெய்ப்பூர் செல்வதற்கு மட்டும் தயார் செய்து கொடுத்தால் அங்கு அனைத்தையும் அவர்களே இலவசமாக செய்கிறார்கள்.

இவர்களுக்கு சென்னையிலும் ஒரு தொடர்பு அலுவலகம் உள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

MR. D. MOHAN JAIN
ADINATH JAIN TRUST (REGD.)
24, SUBBA NAIDU STREET,
CHOOLAI, CHENNAI-600112.
044-26693982.
26692813, 26692539.
Mobile- 09840022536

இந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்ட என்னுடைய சித்தப்பாவிற்கு மற்றும் அவருடைய நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

அன்புடன்,
எஸ். கே.
12 Responses

  1. ஏற்கெனவே இதைப் பற்றி பதிவு படித்திருக்கிறேன்...பூங்கொத்து!


  2. mayil Says:

    முடிந்ததை செய்யலாம், வாழ்த்துக்கள்


  3. பகிர்வுக்கு நன்றி எஸ்.கே.

    பயன்பெறுவோர்களிடம் பகிரலாம்.


  4. தகவலுக்கு நன்றி சகா


  5. பகிர்விற்கு நன்றிகள் நண்பரே.


  6. வழக்கம் போலவே நல்ல பதிவு எஸ்.கே பகிர்வுக்கு நன்றி


  7. செயற்கை கால் = கால் (1/4) பகுதி செயற்கை என்றே பொருள் தரும்.

    செயற்கைக்கால் என்று திருத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


  8. SK Says:

    நன்றி யாசவி, அன்புடன் அருணா, மயில், அமித்து அம்மா, கார்க்கி, ராகவன் நைஜீரியா, தாரணி,

    நன்றி சவுக்கடி, திருத்திவிட்டேன். நன்றி.


  9. Dr.Sintok Says:

    பயனுல்ல தகவல் ... பதிவுக்கு நன்றி.


  10. http://pudugaithendral.blogspot.com/2009/08/blog-post_06.html

    viruthu


  11. SK Says:

    வாங்க Dr. Sintok

    யக்கோவ் நன்றி. :-)