SK
உயர் கல்வி அப்படின்னா.. வெளிநாடு சென்று படிக்கறது மட்டும் இல்லை. பத்தாவது முடிச்சிட்டு மேல படிக்கறதுக்கே நமக்கு தெரிஞ்சது மூணே மூணு பிரிவு. ஒண்ணு முதல் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா எஞ்சினியர் ஆகலாம், இரண்டாவது பையலோஜி படிச்சா டாக்டர் ஆகலாம், அடுத்து காமர்ஸ் அக்கௌண்டன்சி படிச்சா சி. ஏ. படிக்கலாம். இவ்வளவு தான் இருக்கா ? இல்லை இதை தவிர நிறைய பிரிவுகள் இருக்கு. அதை பற்றி நமக்கு தெரிவது இல்லை.

சரி அதை தாண்டி வந்தா, கேக்கற பய புள்ளைங்க எல்லாம் இ. சி. இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், EEE , IT இது தான் படிக்கனும்னு அடம் புடிப்பாங்க. ஏதோ போன போகுதுன்னு மெக்கானிகல் படிப்பாங்க. அப்போ மத்தது, ஏதோ விதி, இது தான் கிடைச்சுது படிக்கறேன் .. இந்த அளவு தான். இன்ஜினியரிங் இதுக்கு இப்படினா அறிவியல், கலை இதை படிக்கறவங்களும் கடைசியா வந்து நிக்கறது வேற வேலைக்கு தான். ஆனா அந்த அந்த படிப்பான மதிப்பு இருந்து கிட்டு தான் இருக்கு. பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க கொஞ்ச நாள் ஆகும்.

இன்னொரு பிரிவு இருக்கு, பேச்சலர்ஸ் அதோட படிப்ப நிறுத்துரவங்க. மேல படிக்க விருப்பம் இருக்கறது இல்லை, வசதி இருக்கறது இல்லை, தெரியறது இல்லை. இது போல பல காரணங்கள் உண்டு.

அதே போல வெளி நாட்டுக்கு சென்று படிப்பதிலும் நிறைய விடயங்கள் தெரியாமலையே இருக்கு. இந்த கதை எல்லாம் இப்போ எதுக்கு. இதை எல்லாம் ஒரு இடத்தில் தொகுக்கலாம் அப்படின்னு ஒரு யோசனை இருக்கு. அதை ஒரு பதிவாக அல்லது என் பதிவுகளில் இடுகைகளாக செய்யலாம் அப்படின்னு எண்ணம்.

இதே போல செய்து கொண்டு இருக்கிற பதிவுகளோ, இணைய தளங்களோ, இல்லை என்னோட படிப்ப பத்தியும், நான் இருக்கற வெளிநாட்டுல அமைகிற படிப்பு பத்தியும் எழுதனும்னு விருப்ப படரவங்க இங்கே தெரிய படுத்தவும். கொஞ்சம் கொஞ்சமா விடயங்கள் சேகரிக்கலாம். கல்வி பற்றிய எந்த விடயமாக இருந்தாலும் இங்கே தெரியப்படுத்தவும்.
செஞ்சு என்ன பண்ண போறோம் ?? அதை பின்னாடி யோசிப்போம். ஆனா ஏதாவது நல்ல விடயமாக செய்வோம்.

உங்கள் எண்ணங்கள், ஆதரவுகள், யோசனைகள் இதை எதிர் நோக்கி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று ஜூலை 16. கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்து ஐந்து வருடம் ஆகிறது. அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு என்னுடைய அஞ்சலிகள். அவர்களை பிரிந்து வாடும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்.

நாமும் இதை வருடா வருடம் பதிவு போடறோம். போன வருடமும் போட்டு இருந்தாங்க. இந்த வருடமும் போட்டு இருக்காங்க. நிலைமை 0.1% மாறிச்சா. விதிகள் மேலும் கடுமை படுத்த பட்டதா ?? :( இல்லை இதை தான் நாம பெருமையா சொல்லிகறோம். இதற்க்கு நம்மால் ஏதும் செய்ய முடியுமா. இல்லை அதே பழைய பல்லவி 'அரசு இயந்திரம் சரி இல்லை' இது தானா ?? :(

வெளிநாட்டில் ஒக்காந்து

வெட்டி கதை மட்டுமே பேசத்தெரிந்த
பல கோடி இந்தியர்களில் ஒருவனான.
எஸ். கே.
14 Responses
  1. nalla muyarchi..enkku therincha engineering atudies pathi naanum elutha try panren:-)


  2. SK Says:

    நன்றி இயற்கை.

    உங்களுடைய இன்ஜினியரிங் கல்வி பற்றிய பதிவை இன்னும் மெருகேற்றி, இன்னும் தேவையான பல விடயங்கள் இணைத்து எழுதினால் உதவியாக இருக்கும். இதை பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் அதை படிக்கிறார் என்ற மனநிலையில் எழுத வேண்டும். இதற்கு உங்களை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம் என்று இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். நன்றி.


  3. இதே போல செய்து கொண்டு இருக்கிற பதிவுகளோ, இணைய தளங்களோ, இல்லை என்னோட படிப்ப பத்தியும், நான் இருக்கற வெளிநாட்டுல அமைகிற படிப்பு பத்தியும் எழுதனும்னு விருப்ப படரவங்க இங்கே தெரிய படுத்தவும் //

    பகிர்ந்துகொள்ளப்படும்.

    நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்


  4. சகா, எனக்கு வெளிநாட்டில் சென்று படிப்பது குறித்து கொஞ்சம் தெரியும். நல்ல முயற்சி செய்வோம்.



  5. ஆனா ஏதாவது நல்ல விடயமாக செய்வோம்.


    super kandipa seyvom


  6. நிச்சயமாக செய்யலாம்.


  7. நிச்சயமாக செய்யலாம்.


  8. RAMYA Says:

    நல்ல முயற்சி உங்கள் யோசனை நல்லா இருக்கு தம்பி!


  9. SK Says:

    நன்றி அமித்து அம்மா.

    சகா, நன்றி. மேலும் நண்பர்கள் குறிப்பாக சிங்கையில் இருப்பவர்கள் மேல் படிப்பு குறித்த இடுகை ஒன்று எழுதி கொடுத்தால் நன்றாக இருக்கும். உங்கள் தோழர்களோ, சக பதிவர்களோ இருந்தால் தெரிய படுத்தவும்.

    நன்றி அப்துல்லா அண்ணே.

    நன்றி புதுகை தென்றல் அக்கா.


  10. SK Says:

    ராகவன் அண்ணா, நன்றி. இன்னும் இந்தியாவுல தான் இருக்கீங்களா. திரும்ப வந்தாச்சா ??

    நன்றி ரம்யா அக்கா.


  11. படிப்ப பத்தி சொல்ற அளவுக்கு நான் படிக்கலைங்க. இருந்தாலும் இந்த நல்ல முயற்சியில என்னால முடிஞ்ச பங்களிப்ப செய்யிறேன்.

    உங்க முயற்சிய தொய்வில்லாம செய்ய வாழ்த்துக்கள்.


  12. பதி Says:

    தகவலுக்கு நன்றி SK..


  13. SK Says:

    நன்றி ஜோசப் பால்ராஜ்.

    நன்றி பதி.

    நன்றி செய்திவலையம்.