SK
நான் இருப்பது பெர்லின். பெர்லின் இந்த ஆண்டு 2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளை கொண்டாடுகிறது . முடிந்தால் இந்த வரலாறை பற்றி பின்னொரு நாளில் எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்.

இந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்தம் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.

மேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.

எந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்?' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர் குமார், இவர் சவுத் இந்தியன்'.

இது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.

'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.

தென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ?? ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.

இப்படி சொல்வதனால் என்ன ? உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.

புனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??


முன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா ??

கற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.

என் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.

அன்புடன்,
எஸ். கே.
23 Responses
 1. //என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.
  //

  :-):-)


 2. Anonymous Says:

  படிக்கறத தவிர எல்லாம் யோசிக்கறேன்னு புரியுது...

  மனசுவர் உடையனும் என்று மக்கள் நினைத்தாலும் அரசியல் விடாது..


 3. SK Says:

  கபீஷ், என்னது இது.. :)

  மயில், லீவ் விட்டாங்கோ .. கொஞ்சம் எச்சா யோசிச்சுட்டேன்.. :) அம்புடுதேன்.. :)


 4. அருமையான பதிவு... நம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு சென்றால் கூட மற்ற மாநில மக்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் உள்ளது.. இந்த மனச்சுவரை எழுப்பியதில் அரசில்வியாதிகளுக்கு பெரும் பங்கு உண்டு நண்பா.. உடைப்பது ரொம்பக் கஷ்டம்தான்..:-(


 5. ஜெர்மன் சுவரைப்பற்றி எனக்கு கேள்வி ஞானம்தான், வேறெதுவும் தெரியாது.
  ஆனால் சவுத் இந்தியன், நார்த் இந்தியன் இந்தப்பழக்கத்தை ஏன் நம்மால் விட்டுவிட முடிவதில்லை என யோசித்திருக்கிறேன். வெளிநாட்டுப் பயணம் என்ற போது ‘இந்தியர்கள் என்றாலே இப்படித்தான்‘ என்று வணிகப்பகுதியில் கூறியதைக் கேட்டு நண்பரொருவர் கோபமாகி விட்டார். ஆனால், அதன் பிறகு எங்களுடன் வந்த சகபயணி சொல்லிக் கொடுத்தது என்னவென்றால், ‘We are from Sri Lanka' இந்த முயற்சி ஓரளவுக்கு பலன் கொடுத்தது என்றே சொல்லலாம்.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்


 6. வனம் Says:

  வணக்கம்

  மனச்சுவர்கள் இடிக்கபடுவதில்லை, இடிக்க விரும்புவதுமில்லை

  கட்டி எழுப்பப்படுகின்றன அரசியல் லாபங்களுக்காக
  இராஜராஜன்


 7. // 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??'

  //

  ஆகுற கதையா ஏதாவது யோசிங்கண்ணே.


 8. மனச்சுவர்களுக்கு அரசியல் ஒரு முக்கிய காரணமானாலும், நம் நாட்டில் சிறு வயதிலிருந்தே தனி மனிதர்களிடம் சொல்லி சொல்லி வளர்க்கப்(பட்ட/படும்) சுவர் அது. உடையவேண்டுமெனில் நம் வீடுகளிலிருந்துதான் தொடங்கவேண்டும்.முடிந்தவரை உடைப்போமே.....


 9. இப்ப தெரியுது ஏன் உங்களுக்கு முடி கொட்டுதுன்னு


 10. //'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??//

  கேட்டவருக்கு கொஞ்சம் காமடி சென்ஸ் அதிகம்னு நினைக்கிறேன்..

  //அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??//

  கரெக்ட்தான்.. இப்படியெல்லாம் நினைக்குறதாலதான், தட்டிக் கேட்ட ஆளில்லாம ஒரு இனபடுகொலையே நடந்துக்கிட்டிருக்கு


 11. SK Says:

  கார்த்திக், அதே. அது தான் ரொம்ப வருத்தமா இருக்கு.

  அகநாழிகை, நன்றி உங்கள் பகிர்வுக்கு.

  ராஜராஜன், அதே தான். உடைக்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் நல்ல இருக்க வாய்ப்பு இருக்கு.

  அப்துல்லா அண்ணே, அவுங்க கிட்டே நான் அதையே தான் சொன்னே.

  கார்க்கி, அதை நிறுத்த முடியாது சகா :)

  உழவன், அவங்க அதை அவளோ எளிதுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. 12. SK Says:

  இப்படி சிரிச்சா என்ன அர்த்தம் எசமான். எதாவது சொல்லுங்க.. :)


 13. sara Says:

  டேய் கொல்லி
  நல்ல எழுதுற
  சில வார்த்தைகள் பிரயோகம் ரொம்ப அற்புதமா இருக்கு.

  இப்போ மட்டேருக்கு வரேன்.

  என்னோடு சின்ன மூளைக்கு எட்டிய எண்ணம்
  மொழி. தமிழ்நட்டுல ஹிந்தி பயில முற்படனும். தக்ஷின் பாரதிய ஹிந்தி பிரசார் சபா மாதிரி, அகில உலக தமிழ் பரப்பும் மைய்யம் ஒன்னு ஆரம்பிக்கணும்
  அப்புறம், ஐட்டம் கிர்ல்ஸ் (ராக்சி சாவன்ட், அல்போன்சா, ஷகீலா ) போன்றவர்கள் மொழி தடை மீறி எல்லா மொழியுளும் கலைப்பணி (ஆமாம்!) செய்யணும்.

  அப்போ தமிழனும் ஹிந்தி கரனும் சேர்ந்து படம் பார்த்து ரசிச்சு நண்பர்கள் அகிடுவனுங்க ;)


 14. SK Says:

  வாய்யா வா..

  உன்னையா மாதிரி நாலு பேரு இருந்தா போதும்.. தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் ஆன பந்தம் நல்லாவே கூடிடும்..


 15. குமார்ங்குற ஒற்றைப் பிரஜை நினச்சா ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லுங்க குமார். அரசியல் சுயநலவாதிகள் இருக்குற நாட்டுல நாம இருக்கோம்பா. அவங்க சந்திச்சா கை குடுத்துப்பாங்க, கட்டித் தழுவிக்குவாங்க. ஆனா, மக்கள் மட்டும் ஒண்ணா இருக்க விட மாட்டாங்க. இது தான் அரசியல்.


 16. SK Says:

  நன்றி விக்னேஷ்வரி, விட இந்திய - தென் இந்திய கருத்தை பற்றி உங்களிடம் இருந்து ஒரு ஆழமான கருத்தை எதிர் பார்த்தேன்.


 17. மனச்சுவர் நம்மைச்சுற்றி நடக்குற நிகழ்வுகளாலேயும் இருக்குற மனிதர்களாலேயும் எழுப்பப்பட்டது

  அவ்வளவு சீக்கிரம் உடையாதுன்னு நினைக்கிறேன். 18. நீங்க‌ கேட்ட‌ தொழிற்ப‌டிப்பு சேர்க்கை தொட‌ர்பான‌ ப‌திவு போட்டிருக்கேங்க‌.. நேர‌ம் கிடைக்கும்போது பாருங‌க‌


 19. SK Says:

  நன்றி அமித்து அம்மா. நீங்க சொல்றது ரொம்ப சரி.

  நன்றி இயற்கை.


 20. ADAM GOD Says:

  very nice. you are a truth teller...!


 21. tamilselvi Says:

  வட இந்திய மற்றும் தென் இந்திய பிரச்சினை தீராது, குமார்... தீர ஒரு வழி இருக்கு... என்னை தெரியுமா... எல்லாரும் ஒரே மொழி பேசணும்.. அப்ப தான் தீரும்... தமிழ் மற்றும் ஹிந்தி ரெண்டுக்கும் முக்கியத்துவம் தரணும்...