SK
வணக்கம் மக்கா

எனக்கு இந்த கதை கவிதை எல்லாம் எழுத தெரியாது. ஒரு அளவுக்கு ரசிக்க தெரியும். அப்படி ஒரு போரம்ல (forum) படிச்சு என்னால மறக்க முடியாத ஒரு கவிதை. என்னை ரொம்ப பாதிச்ச கவிதைன்னு கூட சொல்லலாம்.

கீழே நண்பரோட முழு கவிதையும் தர்றேன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் மலர்முகம் கண்டது
மலர்களின் இயல்பு
கற்கும் போது

காதலுற்றது
உன் புன்னகை தரிசித்த போது

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம் எனக்குள்


பாவம் நீ...
எப்போது கேட்பான்
என்று
எத்தனை காலம் காத்துக் கிடந்தாயோ

எதையாவது சாதிக்க வேண்டும்
என் வெறியை
எப்படி நீ அறிந்திருப்பாய்

சாதித்து வந்த போது
நீ எவனோ ஒருவனின்
சாதனையாய் விட்டிருந்தாய்

வெளிநாட்டு மென்பொருள் அறிஞனுக்கு
வாழ்க்கைப்பட வேண்டுமென்பது
நம் குல மாதரின் விதி போலும்
நீ கொஞ்சம் பொறுத்திருந்தால்
.NET விடுத்து JAVA விற்கு
மாலை இட்டிருக்கலாம்.

என்னையும் ஒருத்தன் காதல் செய்தான்
உன் கணவனிடம்
பெருமை உரைக்க மட்டுமே நான்

என்றாலும்
எப்போதாவது
பூவுதிரும் பொழுதுகளில்
பிலடெல்பியா பூங்காவனங்களில் நீயும்
பரிதிமாளும் வேளைகளில்
தெம்ஸ் நதிக்கரைத் தனிமைகளில் நானும்
நினைப்பதுண்டு
"What if ....."

கவியரசன் சொன்னதுபோல்
*உன்னைப்போல் பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்

என்னைப் போல் ஆண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலிக்குச் சொல்லாமல்
கனவில் மட்டும் வாழ்ந்தவர்கள்

*நன்றி - கவியரசு வைரமுத்து - கவிதைக் கருவிற்கும் நான்கு வரிகளுக்கும்சமர்ப்பணம் - காதலை சொல்ல மறந்த இதயங்களுக்கு

எழுதியது : தினேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி
எஸ். கே.
13 Responses

  1. தேர்ந்தெடுத்துதான் கவிதையப் போட்டிருக்கீங்க.

    நல்லா இருக்கு

    கடைசி வரிகள் அருமை.

    தினேஷுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிவிடவும்.


  2. Unknown Says:

    :))இன்னும் படிக்கல... படிச்சிட்டு கமெண்ட்டுறேன்.. :))


  3. SK Says:

    வாங்க அ. அ.

    நீங்க பொறுமையா ஆசுவாசமா மீ த பர்ஸ்ட் போடலாம் .. இங்கே நோ போட்டி :))

    ஸ்ரீமதி,

    தம்மா தூண்டு பதிவை படிக்க இம்புட்டு நேரமா :))


  4. Unknown Says:

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை... அந்த வைரமுத்து கவிதை 'இலையில் தங்கிய துளிகள்' தானே?? எங்கேயோ படிச்ச ஞாபகம்.. :))))


  5. Arizona penn Says:

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு...ஆனா இன்னொரு காதல் கவிதையா??? அப்படின்னும் தோனுது...காதலை விட்டு விட்டு மத்த விஷயங்களையும் பத்தி கவிதை எழுதுங்கப்பா... எப்போ பாத்தாலும் காதலையே எழுதி ரொம்ப bore அடிக்கிறீங்க...


  6. உங்க ப்திவுல Followers widget போடுங்க சகா. எப்போ பதிவு போடறீங்கனே தெரியல. :)))

    //எப்போ பாத்தாலும் காதலையே எழுதி ரொம்ப bore அடிக்கிறீங்க...//

    காதல் போரடிக்குத்தா? வாழ்க்கையில் உங்கள எதுவுமே திருப்தி பண்ண முடியாதுங்க..


  7. SK Says:

    செல்வில்கி,

    இது நான் எழுதினது இல்லை. நான் சொன்ன போல எனக்கு எழுதவும் வர்றாது + தெரியாது. இது படிச்சதுலையே கொஞ்சம் வித்யாசமா புடிச்சு இருந்ததுனாலே எழுதி வெச்சு இருந்தேன் .. அதை இங்கையும் பதியலாம்னு செஞ்சேன்.


  8. SK Says:

    // உங்க ப்திவுல Followers widget போடுங்க சகா. எப்போ பதிவு போடறீங்கனே தெரியல. :))) //

    சரி சகா


  9. RAMYA Says:

    s.k ரொம்ப நல்லா இருக்கு கவிதை. காதல் என்பது ஒரு அழகான ஓவியம். காதலை அப்படியே அந்த கவிதை வரிகள் உருக்கிவிட்டன் சகோதரா. ரொம்ப நல்ல இருந்தது.

    ரம்யா


  10. RAMYA Says:

    என்னங்க தம்பி S.K. ஆளையே காணோம். ஒரே busy ?. எப்படி இருக்கீங்க? படிப்பு எந்த அளவில் உள்ளது? அம்மா அப்பா நலமா? நீங்க நலமா குமார். சரி பிறகு சிந்திப்போம்.

    ரம்யா


  11. SK Says:

    வாங்க ரம்யா. நான் நல்ல இருக்கேன். வீட்டிலும் அனைவரும் நலம்.

    ரொம்ப நாள் முன்னாடி படிச்ச கவிதை, புடிச்சது அதான் இங்கே எழுதி வெச்சேன்.
    நீங்களும் ரெண்டு பதிவு போட்டு கும்மி எடுத்து இருக்கீங்க போல இருக்கு. நான் தான் கலந்துக்க முடியலை. கொஞ்சம் வேலை அதிகம்.

    வந்து கும்முறேன் திரும்ப கொஞ்ச நாள்ல


  12. RAMYA Says:

    blog எழுதிருக்கிறேன். வந்து உள்ளேன் சொல்லணும் சரியா, நீங்க எல்லாம் சொல்லி தான் நானு எழுத ஆரம்பித்துள்ளேன். என்ன மிரட்டுறேனா? அப்படித்தான்,
    அன்பு தம்பியித்தான் மிரட்ட முடியும். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கங்கோ தம்பி.