SK
இந்த பதிவு கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும். இது எப்பொழுதும் எனக்கும் என் மனதுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். எப்பொழுதும் அது வெளியில் வருவது இல்லை. எனக்குள் நான் எப்போதும் செய்யும் சுய பரிசோதனை பற்றி இங்கே பதிந்து, அதை அடுத்த முறை சரி பார்க்கலாம் என்று ஒரு யோசனை. எவ்வளவு தூரம் சரியாக வருகிறது என பார்க்கலாம்.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.

முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.

11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரனும் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
*************************
இதே பதிவை ஜூன் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே.
17 Responses
  1. எல்லாமே நல்லா நடக்க வாழ்த்துக்கள்



  2. அடிக்கடி பதிவு எழுதனும்.

    ரௌத்திரம் பழகனும்ங்க. இல்லன்னா மிதிச்சிடுவாங்க.

    கீ போர்டா??

    டெம்ப்ளேட் நல்லாருக்கு:))


  3. KATHIR = RAY Says:

    Sarakku adikkaratha nippataratha pathi ithula onnum sollala.


  4. பதி Says:

    //பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது. //

    இப்படி ஒரு முடிவெடுத்தா, அப்புறம் நான் லேப்ல என்ன தான் பண்ணுறது?

    //ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும். //

    ஆஹா.. அந்த ஹிட்லிஸ்டல என் பேரு ஏதாவது இருக்கா???


  5. SK Says:

    வாங்க தா. பி. பாக்கலாம். என்ன நடக்குதுன்னு. :)

    வாங்க கதிர் சார்.

    வித்யா, ஆமாம். கீபோர்ட் தான் கத்துக்கறேன்.
    ரௌத்ரம் பழகனும் திரும்ப.
    நன்றி.

    KATHIR = ரே, பப்ளிக், பப்ளிக் :)

    பதி, அதை மட்டும் செஞ்சுட்டா நான் இன்னும் ஆறு மாசத்துல படிப்பை முடிச்சுடுவேன். :) நீங்க எல்லாம் முடிச்சுடீங்க தலைவா. மற்ற நண்பர்கள் தான்.


  6. ஸ்ருதி

    ஸ்டேடஸ் மெசேஜ் அப்டேட் பண்ணகூடாது
    --மிஸ்ஸிங்க்


  7. Anonymous Says:

    எல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு :))



  8. Musing Gal Says:

    Palarukkum porundhumnu ninaikiren! Romba nalla yosanaigal dhaan!
    Nadakka yen vazhthukkal.


  9. Vidhoosh Says:

    இத்தனை 'உம்"கள் இருக்கு. நீங்களும் இதோடு உம்முன்னு ஆயிடாதீங்க.

    all the best.


  10. SK Says:

    கபீஷ், அது இங்கே அவசியமா .. கிர்ர்ரர்ர்ர்

    மயில், எங்கே கேட்டீங்க.. படிக்க தானே செஞ்சீங்க ?? :)

    கார்க்கி, வாங்க சகா.

    musing gal , பாக்கலாம் எவளோ செய்ய முடியுது சொல்லி.

    விதூஷ், முயற்சி பண்றேன்.


  11. Deepa Says:

    Vaazhthukkal.. Nichiyama nadakkum.Eppo oru vishyatha pathi ezhudhittomo, appove, adhu first step :)

    I am sure you will achieve all of the points in your list, except the talking part.. Trust me, you may not be yourself for a lot of people if you stop talking, the way they know you to.

    Dew


  12. SK Says:

    Thanks Dew. I hope, I will try my best. :)


  13. Priya H Says:

    thirupi padichu pakanmnu solli irukeengala adhan very important. I always buy a beautiful (read: costly)diary and write my goals for the coming months and the year. But unfortunately I get to read it again the next year only. So revisit ur goals as often as u could. Infact you could even take a print out and hang it somewhere where u will see it regularly (if you are that serious in improving)
    -K


  14. மிகவும் அருமை


  15. www.bogy.in Says:

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in