SK
என்னோட பன்னிரெண்டாவது டியூஷன் வாத்தியார் சின்ன சின்ன நகைச்சுவை துணுக்கும், விடயங்களும் சொல்லிக்கொடுப்பார். அந்த டியூஷன் படிக்கும் போது உட்கார இருக்கிற எடத்துக்கு மேல மாணவர்கள் இருப்பாங்க. நெருக்கிகிட்டு தான் ஒக்காந்து இருப்போம். இப்படியே உட்காந்து இருக்கறது கஷ்டமா இருக்கவே, ஒரு நாள் ஒரு பையன் அவர் கிட்டே,

'சார், ஒட்கார எடம் பத்த மாட்டேங்குது. ஒரு பெஞ்ச் அதிகமா இருந்தா நல்லா இருக்கும்'
அப்படின்னு சொன்னான். அதுக்கு ஒடனே அவரு,
'ஒரு வாரம் பொறுத்துக்க தம்பி' அப்படின்னு பதில் சொன்னாரு.
இவன் திரும்பி (திரும்பின்னா திரும்பி இல்லீங்க, மீண்டும் அவரிடம்)
'ஏன் சார், ஒரு வாரத்துல புது பெஞ்ச் வருமா' அப்படின்னான். அவர் சிரிச்சுகிட்டே,
'இல்லை தம்பி, இதுவே உங்களுக்கு பழகிடும்' அப்படின்னு சொன்னாரு?

:-) இது தான் உண்மை. எல்லாமே பழகி போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில விடயங்களை நாம் தினமும் குறிப்பிட்ட காலங்களுக்கு செய்து பழகும் போது, அதுவே பழக்கம் ஆகிவிடுகிறது. இதை பற்றி பல ஆராய்ச்சிகளும் செய்து உள்ளார்கள். முதன் முதலாக ஆராய்ச்சியாக மக்ஸ்வெல் மல்ஸ் என்பவர் இவ்வாறு ஒரு விடயம் பழக்கமாக மாறுவதற்கு இருபத்தி ஒன்று நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். இதை பற்றி பல குறிப்புகளும் உள்ளன. சிலர் 66 நாட்கள் தேவை என்றும் கூறி உள்ளனர். எந்த விடயமும் சில நாட்கள் தொடர்ந்தோ, சில முறை தொடர்ந்து நடக்கும் போது பழகி விடுகிறது. நல்ல விடயம் பழகுவதற்கு அதிக நாட்களும், கெட்ட விடயம் பழகுவதற்கு குறைந்த நாட்களும் தேவை படுகிறது. நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன மாசம் வரைக்கும் இந்த பனிக்காலம் எப்படி இருக்குமோ அப்படின்னு ஒரு பயம் இருந்திச்சு. டிசம்பர் கடைசி வாரம் ஒரு சனி ஞாயிறு -15 போச்சு. அப்போ கொட்ட ஆரம்பிச்ச பனி கொட்டுது கொட்டுது கொட்டிகிட்டே இருக்கு. இப்போ தினமும் -3 , -4 தான். இதுக்கு எல்லாம் இப்போ நாங்க யோசிக்கறது இல்லை. ஏன்னா, பழகிப்போச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன வாரத்துல இருந்து ஒரு செய்தி. ஒரு போலீஸ் அதிகாரிய வெட்டி இருக்காங்க. அதை மினிஸ்டர் எல்லாம் பாத்து இருக்காங்க. உதவி ஏதும் செய்யலை. இன்னும் தமிழ்நாட்டு அரசு கிட்டே இருந்து எந்த வித அறிக்கையோ, வேலை நேரத்தில் உயிர் இழந்த போலீஸ் அதிகாரிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையோ எடுக்கலை. குறிப்பா முதல் அமைச்சர் கிட்டே இருந்து எந்த பதிலும் வரலை.
எனக்கு இதை கேட்ட ஒடனே சிரிப்பு சிரிப்பா இருந்திச்சு. என்னவோ ஜக்குபாய் படம் நெட்ல வந்துட்ட மாதிரியும், 'அப்பாஆஅ' (சித்தி மாதிரி படிக்கவும் ) அப்படின்னு கூப்பிடற ராதிகா அவர்கள் அழுவுற மாதிரியும், இல்லை பயபுள்ளைங்க குதிக்கறாங்க. போனது ஒரு போலீஸ் உசுரு. நீங்க எல்லாம் வேலைக்கு சேரும் போது அதுக்கு தானையா சேந்தீங்க. நாங்க திருட்டு வி. சி. டி. ஒழிக்கரதுல பிசியா இருக்கோம். நீங்க பாட்டுக்கு உசுரு போச்சு, ம... போச்சு அப்படின்னு வந்து சொன்னா. எங்களுக்கு குஷ்புவின் அழகான தமிழில் தொகுத்து வழங்கி நமிதா டான்ஸ் ஆட நடக்கும் கலை விழா பாக்க வேண்டியது வேற பாக்கி இருக்கு. சின்ன புள்ளைத்தனமா கூவிக்கிட்டு.

இதுவும் பழகி போச்சு தலைவா. அடுத்த ரஜினி படம் வந்திட்டா எங்களுக்கு அது போதும். எவன் உசுரு போனா எனக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள் 1 : ருசிகா என்ற மாணவி 19 வருடத்துக்கு முன் ஒரு போலீஸ் அதிகாரியால் மானபங்க படுத்த பட்டு உள்ளார். அதை குறித்த அறிக்கை.
நாள் 2 : ஏன். டி. திவாரி சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக வீடியோ வெளியானது. அதை பற்றிய ஒரு ஆய்வு (??) அறிக்கை.
நாள் 3 : ஹைதராபாத்தில் கலவரம். ஒரு செய்தி சானல் ராஜசேகர் ரெட்டி மரணத்தை குறித்த தவறான செய்தி வெளியிட்டதால் கலவரம்.
நாள் 4 : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் சண்டை.
நாள் 5 : இது போல உணர்ச்சி மிக்க செய்தி இல்லை..

நம்ம பொதுசனம் : என்ன அண்ணே, இன்னைக்கு ஒன்னும் சுவாரஸ்யமா செய்தி இல்லையா. சுவாரஸ்யமா செய்தி படிச்சே பழகி போச்சு அண்ணே.

வாழ்க பொதுசனம்.
வாழ்க பாரதம்.
வாழ்க அரசியல் வாதிகள்.
வாழ்க நமது ஜனநாயகம்.

'நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்'

என்றென்றும் அன்புடன்
எஸ். கே.
10 Responses
 1. பனி மழை பொழியுதுன்னு சொல்லிட்டு இப்படி சூடா இருந்தா எப்படி...

  குமாரு .. கூல் ....:)


 2. விடுங்க எஸ்.கே. எல்லாமே பழகிப்போச்சு. பொலம்பி என்ன ஆகப்போவுது.


 3. ம்ம்.. எனக்கு அது போன்று ஒரு வெட்டு விழும்போது என்னை சுத்தி இருக்கிறவங்க பழகி போச்சுன்னு சொல்றாஙக்ளா பார்ப்போம்.. அந்த வீடியோ.. ச்சே..


 4. ரொம்ப மனவருத்தமா இருக்கு குமார் எல்லாம் பார்த்துப் பழகி. :(


 5. SK Says:

  வாங்க மயில். :-)

  வாங்க நவாசுதீன். இப்படியே தான் பொலம்பி கிட்டு இருக்கோம். ஒண்ணுமே செய்ய முடியலை.

  சகா, நேத்து சி. என். என். இல் இன்னொரு நிகழ்ச்சி இது போல வீடியோ எடுத்தது சரியா தவறா. சொல்லி. கிடைக்குற எடத்துல எல்லாம் காசு பாக்குறாங்க.

  விக்னேஷ்வரி, இது எங்க போய நிக்கும் அப்படின்னு தான் தெரியலை.


 6. தம்பி ஜூடா இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கெல்லாம் பதிவு எழுதாம இருக்கற அளவுக்கு பழகிப்போயிரும்


 7. :) இந்த பழகிப்போச்சு விஷயம் தமிழ்நாட்டுல இருந்தா இன்னும் அதிகமா பழகிப்போய் அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா ங்கற பேமஸ் ஜோக் மாதிரி ஆகிடும்.
  அது கொலையோ, கொள்ளையோ, கற்பழிப்போ இல்லை சுனாமியோ
  :(((


 8. Musing Gal Says:

  Romba unmai... pala vishyangal apadi dhaan pazhagi pochchu.. adhanaleye naam niraya matharadhukku muyarchi panradhillai!
  Aaana.. "Pazhaga Pazhaga Paalum pulikum" nnu solluvaangale... andha naal varum, sila vishayangal pazhagi bore adichu maatha thonum!


 9. SK Says:

  கபீஷ், என்ன பண்றது. சூடாவரதை தவிர வேற எதுவும் செய்ய முடியலையே.

  அமித்து அம்மா, ஒன்னும் சொல்வதற்கு இல்லை. உங்களுக்கு இதன் வலி இன்னும் அதிகம் தெரியும்.

  musing gal , இது மாறுமா தெரியலை. மாறும். ஆன அதுக்கு நடுவுல பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும்னு தோணுது. பாக்கலாம்.


 10. henry J Says:

  Unga blog romba nalla iruku
  (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

  Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

  Download Youtube Videos free Click here

  தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here