நீ ஏன் எப்போ பாத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ நீ மட்டும் ஊரை காப்பத்த இருக்கறா போல எப்போ பாத்தாலும் ஒரு மாதிரி எழுதறே. சினிமா பத்தி, அரசியல் பத்தி எல்லாம் மொக்கை போடலாம்ல அப்படின்னு ஒரு புண்ணியவான் என்னைய பாத்து கேட்டு புட்டான் மக்கா. சும்மா இருப்பனா நான். இதோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.
ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.
கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த
சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது
எவனுக்கு நல்லா
தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(
சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம்
இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(
எவன் எவ்வளவு
லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு
இங்கே.
நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.
அன்புடன்
எஸ். கே.