Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
SK
வணக்கம் மக்கா

எனக்கு இந்த கதை கவிதை எல்லாம் எழுத தெரியாது. ஒரு அளவுக்கு ரசிக்க தெரியும். அப்படி ஒரு போரம்ல (forum) படிச்சு என்னால மறக்க முடியாத ஒரு கவிதை. என்னை ரொம்ப பாதிச்ச கவிதைன்னு கூட சொல்லலாம்.

கீழே நண்பரோட முழு கவிதையும் தர்றேன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் மலர்முகம் கண்டது
மலர்களின் இயல்பு
கற்கும் போது

காதலுற்றது
உன் புன்னகை தரிசித்த போது

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம் எனக்குள்


பாவம் நீ...
எப்போது கேட்பான்
என்று
எத்தனை காலம் காத்துக் கிடந்தாயோ

எதையாவது சாதிக்க வேண்டும்
என் வெறியை
எப்படி நீ அறிந்திருப்பாய்

சாதித்து வந்த போது
நீ எவனோ ஒருவனின்
சாதனையாய் விட்டிருந்தாய்

வெளிநாட்டு மென்பொருள் அறிஞனுக்கு
வாழ்க்கைப்பட வேண்டுமென்பது
நம் குல மாதரின் விதி போலும்
நீ கொஞ்சம் பொறுத்திருந்தால்
.NET விடுத்து JAVA விற்கு
மாலை இட்டிருக்கலாம்.

என்னையும் ஒருத்தன் காதல் செய்தான்
உன் கணவனிடம்
பெருமை உரைக்க மட்டுமே நான்

என்றாலும்
எப்போதாவது
பூவுதிரும் பொழுதுகளில்
பிலடெல்பியா பூங்காவனங்களில் நீயும்
பரிதிமாளும் வேளைகளில்
தெம்ஸ் நதிக்கரைத் தனிமைகளில் நானும்
நினைப்பதுண்டு
"What if ....."

கவியரசன் சொன்னதுபோல்
*உன்னைப்போல் பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்

என்னைப் போல் ஆண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலிக்குச் சொல்லாமல்
கனவில் மட்டும் வாழ்ந்தவர்கள்

*நன்றி - கவியரசு வைரமுத்து - கவிதைக் கருவிற்கும் நான்கு வரிகளுக்கும்சமர்ப்பணம் - காதலை சொல்ல மறந்த இதயங்களுக்கு

எழுதியது : தினேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி
எஸ். கே.