Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
SK
இன்று தனது சிறுகதை தொகுப்பை வெளியிடும் நர்சிம் அவர்களுக்கும், தனது கவிதை தொகுப்புகளை வெளியிடும் பா. ராஜாராம், என். விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், TKB காந்தி அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அகநாழிகை பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.

வெளியீட்டு விழா குறித்த மேலும் விவரங்கள் இங்கே.

தேதிய பாத்தா உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த தேதிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஆம். மகாகவி பாரதியின் பிறந்த நாள். நீ கனவு கண்ட சமுதாயம் அமைக்க முயற்சி செய்வோம்.

அன்புடன்
எஸ். கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிஸ்கி :

மனசாட்சி : ஏன்டா மாமா, இத்தன நாளா இல்லாம எங்கே இருந்து உனக்கு பாரதி பொறந்த நாள் நெனப்பு வந்திச்சு.

நான் : டேய் நான் எல்லாம் ....

மனசாட்சி : போதும் நிறுத்துடா. எனக்கு தெரியாதா. நாளைக்கு தலைவர் பொறந்த நாள். எதாவது பதிவு போட்டா, நேத்து பாரதி பொறந்த நாள் பதிவு போடணும்னு உனக்கு நினைவு இல்லைன்னு நான் கேப்பேன்னு முந்திகிட்டியா :-)

நான் : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
SK
வணக்கம் மக்கா..  

மே பத்து அன்று நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும். இங்கே இருந்து ஒரு மெயில் அனுப்பறதும், தொலை பேசறதும் எளிது. அங்கே இருந்து ஒரு காரியத்தை செய்யறது எவ்வளவு கடினம்னு எனக்கு தெரியும். அதை சாதித்து காட்டிய தோழர்கள் நரசிம், லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன், கார்க்கி, அமித்து அம்மா, ரம்யா.. மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புவோம். தொடரனும். தொடருவோம். தொடரும்.  

மேலும் உடனடியாக விரிவாக பதிவிட்ட நர்சிம், திரு. ராகவன், லக்கிலுக், திருமதி முல்லை, ஆதி, அக்னிபார்வை, படங்களும் இட்ட ஜாக்கி சேகர்... அனைவருக்கும் நன்றி. டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி. நேரம் ஒதுக்கி, பொறுமையாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு. மேலும் இடம் மற்றும் ஏற்பாடுகளுக்கு உதவிய திரு. பத்ரி அவர்களுக்கும் நன்றி.  

சரி நன்றி சொன்னது எல்லாம் போதும். இதை எழுதும் பொது நடிகர் திரு. கமல் அவர்கள், 'சென்னை - 28' படத்தோட நூறாவது நாள் நிகழ்ச்சில பேசினது தான் நினைவுக்கு வந்தது. 'இந்த வெற்றிவிழா கொண்டாட்டும் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க அடுத்த படத்துக்கு வேலை ஆரம்பிங்க. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது. ...' :) அதே தான். நாமும் அடுத்து என்ன அப்படிங்கறதை தான் யோசிக்கணும்.  

சில உதவிகள் :  

1. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் கூறியவற்றையும், கேள்வி பதிலையும் எளிமையாக, அனைவரும் அதாவது உங்க பக்கத்து வீட்டு அம்மா, அப்பா இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி முடிந்தால் எளிமையான உதாரணங்களுடன் இரண்டு அல்லது மூன்று பக்க கோப்பாக தயார் செய்தால் உதவியாக இருக்கும். இதையே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் செய்தால் மிக நல்லது. இதற்கு நேரம், பொறுமை, மற்றும் எண்ணம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். திரு. ராகவன், மற்றும் திரு. அக்னிபார்வை பதிவுகளை படித்து சின்ன சின்ன விடையங்களை நினைவு கூர்ந்து எழுதலாம்.  

2. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்கள். பின்னொரு நேரம் குறிப்பிட்ட அளவு நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யலாம். மேலே நாம் தயார் செய்யும் கோப்பை அவர்கள் படித்து, மேலும் அவர்கள் தங்களுடைய கேள்விகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு. மேலும் டாக்டர் ருத்ரன் அவர்களும், இது போல ஒரு நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியும் மேலும் நடத்தவும் ஊக்கமும் தந்துள்ளார். அதே போல் டாக்டர் ஷாலினி அவர்களும் நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாகவும் மெயில் செய்துள்ளார்.  

3. ஒரு நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் நிறைகளை கூறி பாராட்டுவதை போல நீங்கள் இதை மாற்றி இவ்வாறு செய்து இருக்கலாம் அப்படின்னு உங்களுக்கு எதாவது தோணிச்சுன்னா நண்பர் திரு. லக்கிலுக் கூறியது போல எங்களுக்கு மெயில் அனுப்புங்கள். அது எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்ய உதவியாக இருக்கும். மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com  

4. அடுத்து என்ன ?? : இது தான் ஒரு பெரிய கேள்வி. நண்பர் திரு லக்கிலுக் சொன்னது போல இப்படி செய்யலாம். அப்படின்னு தோன்றதை எங்களுக்கு எழுதுங்க. நாமும் அதை எப்படி செய்யலாம்னு யோசிச்சு இந்த நிகழ்ச்சி போல செய்யறதுக்கு முயற்சி பண்ணலாம். இதை பற்றி எழுத மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com

பரிசல் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  

என்ன எழுதன்னு கேட்டு இருந்தீங்க ? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சி நடக்கறதுக்கு மெயில் அனுப்பும் பொது கேட்டு இருந்தோம். இது பற்றிய செய்தியை எங்க படிச்சீங்கன்னு. 'பரிசல் பதிவுல பாத்தோம் அப்படின்னு' மூணு நாலு பேருக்கு மேல எழுதி இருந்தாங்க. அது தான் உங்க எழுத்தின் வீச்சு. இதுக்கு தான் நீங்க எழுதணும். நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை. கோபம், விரக்தி , வருத்தம், எதுனாலும் .. எழுதுங்க.. எழுதுங்க.. அதுனால செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.  

பதிவு நீண்டு கிட்டே போகுது. அதுனால இத்தோட நிறுத்துக்கறேன். இதே நிகழ்ச்சியை பத்திய இன்னொரு பதிவு வரும் விரைவில். உங்களுடைய பதில் பின்னோட்டம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தெரியபடுத்தவும்.  

அன்புடன்,
எஸ். கே.

பி. கு. : தேர்தல் நாளும் அதுவுமா தைரியமா பதிவு போடறேன். மக்கா ஈ ஆட விட்டுடாதீங்க. சரியாக பதிவர்களிடம் சென்று சேரவில்லை எனில், உங்கள் பதிவில் எழுதியோ, மேலே சொல்லப்பட்ட சில உதவிகள் செய்தால் மிகவும் எளிதாக இருக்கும். 

பி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்கறேன். :) 

பி. கு. 3: மறந்துடாம ஓட்டு போடுங்க மக்கா. இன்னைக்கு தேர்தலாமே.
SK
என்னுடன் கல்லூரியில் சேர்ந்து படித்த சில நண்பர்களும் சரி, பள்ளில சேர்ந்து படித்த சில நண்பர்களும் என்னை விட அதிகம் மதிப்பெண் வாங்கியவர்கள் உண்டு. மேலும் நல்ல திறமைசாலிகள், படிப்பு மட்டும் நில்லாமல் கலை, எழுத்து, நாடகம் அனைத்திலும் கலக்கியவர்கள் உண்டு.

இது போல நல்ல மூளை இருந்தும் மேல் படிப்பு படிக்காதவர்கள் அதிகம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்றவர்கள் தான் அதிகம். அதிலும் சிலர் துறை சார்ந்த வேலை கிடைக்காமல், ஐ டி அல்லது மார்க்கெட்டிங் துறை வேலைக்கு சென்றவர்களும் உண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், மேல் படிப்பு பற்றிய சரியான விவரம் தெரியாமல் இருத்தல் போன்றது சொல்லலாம்.

இங்கு நான் வெளி நாடு என்று சொல்வது ஒரு வாய்ப்பு என்கிற அர்த்தத்தில் எடுத்து கொள்ளவும். வெளி நாடு செல்வது தான் சிறந்தது என்கிற வாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒரு வேலை நான் படிப்பு முடிந்து இந்திய திரும்புகையில், நான் அவர்களை ஒத்து பார்க்கும் போது சம்பளத்தில் அதிகமோ, குறைவோ, அதே அளவோ வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. மீண்டும் நான் இங்கே சம்பளம் என்று சொல்வது ஒரு அளவுகோல் அவ்வளவே.

என்னை ஒத்த தலைமுறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனக்குமே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்றால், என்னையும் என் மூத்த தலைமுறையையும் நான் எப்படி பார்க்க வேண்டும்.

அதாவது என் தந்தை தனது முப்பதாவது வயதில், தமிழ்நாட்டு எல்லையை விட்டே தாண்டியது இல்லை அல்லது இருபது ஆயிரம் சம்பளம் வாங்க வில்லை அல்லது அறுபது வயதானாலும் இப்போதும் இருபது ஆயிரம் தான் சம்பளம் வாங்குகிறார்னு நான் அவரை கேலி செய்தல் முறை ஆகுமா ??

அப்படியும் இல்லை என்னோட பள்ளி ஆசிரியரைவிடவும், கல்லூரி பேராசியரைவிடவும் ஒரு நாள் நான் சம்பளம் அதிகம் வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்காக என்னை அவருடன் கம்பேர் செய்து பேசுதலும் எந்த விதத்தில் சரி ஆகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த முறை, சூழல், சரியான வழிநடத்துதல் இல்லாமை, அவர்கள் வளர்ந்த காலம் இது போல எத்தனையோ காரணங்கள் உண்டு.

இதை எல்லாம் இப்போ எதுக்கு சொல்றே அப்படின்னு யாருப்பா அது கேக்குறது. இளையராஜாவையும் ரஹ்மானையும் கம்பேர் செய்து பேசுறவங்களுக்கு அப்படின்னு நீங்களே நினைச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை மக்கா :)

ஆஸ்கார் புகழ் ரஹ்மானுக்கு என்னுடைய மனாமர்ந்த வாழ்த்துக்கள். ரசூல் குட்டி அவர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும், வலைமாமணி விருது (அதாங்க தமிழ்மண விருது ) பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
எஸ். கே.
SK
உதவி செய்யரதுலையே ரொம்ப பொன்னானது எது. காசு பணம் கொடுக்கறதா?? அது கொடுத்ததை தான் ஒரு மாசம் அதிகமா வேலை பாத சம்பாதிசுடலாமே.

சரி அப்பறம் சோறு போடறதா ?? ஒரு வேலை சோரோ ஒரு மாச சோரோ போட்டு என்ன பெரிய மாற்றம் வர போகுது..

சரி அப்பறம் கடவுளுக்கு கொடுப்பாங்களே முடி, அதுவா ?? ஏங்க, வெட்டுன முடி வளராது சொன்னா எவனாவது அவளோ எளிதா மொட்டை அடிச்சுபாங்களா ??

சரி அப்பறம் என்ன தாண்டா சொல்ல வரேன்னு கேக்குறீங்களா. நேரம். நாம ஒருதங்களுகாக செலவிடுகிற நேரம். என்ன இப்போ விட்ட அப்பறம் புடிக்க முடியாது. போனது போனது தான். உதாரணத்துக்கு கல்யாணம் செஞ்ச அப்பறம் பொண்ணுங்க தான் கணவன் கிட்டே இருந்து எதிர் பாக்கறது, அவ கூட கொஞ்சம் நேரம் செலவிடரானா அப்படின்னு தான்.

சரி கதை எங்கயோ போகுது ?? அது எல்லாம் இருக்கட்டும், இப்போ இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தானே கேக்குறீங்க. மேல படிங்க. அட மேலன்னு உடனே ஆரம்பத்துக்கு போய்டாதீங்க, கீழ எழுதி இருக்கற விவரத்தை படிங்கன்னு சொன்னேன்.

நேத்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதுலே இருந்த விஷயத்தை நான் கீழ கொடுத்துடறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Dear friends,
Some of the visually challenged students at Loyala College, Chennai require SCRIBES, who can write the Exams for them & hence helping them pass thru the academic successfully. Basically the role of a SCRIBE is to just read the question paper for the student and write the answers dictated by the students in the Answer sheet. Please check the attached excel for exam schedule.If you and your friends could spare around 3 hours on any of the days mentioned in the excel, these students would be really thankful.Please do consider this as a direct request from the students

Please contact Mr.Mathew 9444223141 for further communication.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரி ஏதோ நம்பிக்கையா இருக்கேன்னு சொல்லி நம்ம அப்துல்லா அண்ணனுக்கு அதை மாதி அனுப்பினேன்.

ஒரு மணி நேரத்துலே பதில்

'மேத்யூவிடம் பேசி விட்டேன். நாளை நானே பரிச்சை எழுதப் போகிறேன்' அப்படின்னு??


வாய் அடைச்சு போய் நின்னுட்டேன். கலக்கிடீங்க அப்துல்லா அண்ணே.

சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு. பதிவு எழுத வேணாம்னு இருந்தே என்னை எழுத வெச்சுடீங்க.

என்னோட மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.