Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts
SK
மார்ச் மாதம் எழுதின இந்த பதிவை தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சி.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.
முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
- செய்ய முயற்சி செய்து ஒரு மாதம் சரியா போச்சு. அப்பறம் பழைய குருடி கதவை தரடி கதை தான் போகுது. மீண்டும் தொடங்கணும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- ஒண்ணும் பண்ணலை. :( திரும்ப இந்த மாதத்திற்கு எடுத்து செல்ல படுகிறது.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
- நகருது ஆனா நகரமாட்டேங்குது. இன்னும் 12 மாதம் தான்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.
- வெற்றிகரமா பராக் (prag ), அம்ஸ்டேர்டம் (Amsterdam) போயிட்டு வந்தாச்சு. இன்னும் சில பல நாடுகள் வரிசைல இருக்கு. நல்லது. பாக்கலாம்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.
- சிறு கோவத்தினால் வந்த ரகளைய பாத்திட்டு என்ன ஆனாலும் சரி இனி கோவமே கூடாதுன்னு முடிவுபண்ணிட்டேன்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.
- அதிகம் தான் ஆகி இருக்கு. கடந்த ஒரு மாதமா கம்மி பண்ணி இருக்கேன். ஆகிடும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.
- உணர்ச்சிவசப்படாம முடிவு எடுக்க பழகிக்கிட்டு இருக்கேன். நல்ல படியாவே போய் கிட்டு இருக்கு.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.
- பண்ணியாச்சு.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.
- ஒரு அளவுக்கு நல்லபடியா வருது. இன்னும் நிறைய நேரம் ஒதுக்கணும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.
11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.
- இது ரெண்டுத்துக்கும் ஒரே பதில் தான். பாதிக்கு மேல கம்மி பண்ணிட்டேன். அடுத்த இரண்டு மாசத்துல முழுசா கம்மி ஆகிடும். பத்தாவதுல ஒரு மாற்றம். தமிழ் பதிவுகள் வேலை நேரத்துல இல்லை, படிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அது தான் மனசுக்கும், நேரத்துக்கும் நல்லது. அடி ரொம்ப பலம்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.
- 0 % முன்னேற்றம். வெற்றியே இல்லை.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.
- இந்த எண்ணத்தை கை விட்டுட்டேன்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரணம் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)
- இது முடியலை. மீண்டும் அதே முயற்சி இன்றில் இருந்து தொடங்கும்.

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
- ஆரம்பிச்சாச்சு. மெதுவா முன்னேற்றம் இருக்கு.
*************************
இதே பதிவை செப்டம்பர் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே
SK
இந்த பதிவு கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும். இது எப்பொழுதும் எனக்கும் என் மனதுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். எப்பொழுதும் அது வெளியில் வருவது இல்லை. எனக்குள் நான் எப்போதும் செய்யும் சுய பரிசோதனை பற்றி இங்கே பதிந்து, அதை அடுத்த முறை சரி பார்க்கலாம் என்று ஒரு யோசனை. எவ்வளவு தூரம் சரியாக வருகிறது என பார்க்கலாம்.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.

முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.

11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரனும் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
*************************
இதே பதிவை ஜூன் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே.
SK
நேத்து மயில் அவுங்க எழுதி இருந்த புலாவ் ரெசிபி பாத்து ஓவர் சூடு ஆகி போய் நேத்து இரவு டின்னெர் அது அது தான். நன்றி மயில் அக்கோவ் :)

இந்த பதிவு மயில் அவுங்களுக்கு சமர்ப்பணம். அதுக்காக பார்சல் எல்லாம் கேக்க கூடாது ஆமா சொல்லிபுட்டேன் :)

பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், இந்த வெஜ். புலாவுக்கும், வெஜ். பிரியாணிக்கும் என்ன வித்தியாசம் ??

ருசியுடன்,

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போட்டோ புடிச்சு டரியல் ஆக்குவோரை தானே சமைச்சு போட்டோ புடிச்சு போட்டு'கொல்லுவோர்' சங்கம். :)
எஸ். கே.
SK
நான் வெளிநாட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆக போகுது. வந்த புதுசுல யாரோடையோ சேர்ந்து இருக்கணும், சேர்ந்து சமைச்சு சாப்பிடனும் அப்படிங்கற எண்ணம் எல்லாம் போய்டிச்சு. ஏன்னா என்னோட அனுபவம் அப்படி. தனிமை பழகிக்கிட்டேன். இப்போ வேற இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

நான் தங்கி இருக்கற விடுதில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. எல்லாரோடையும் பேசுவேன். ஆனா இந்த சேர்ந்து தங்கறது, சமைக்கறது இதுக்கு எல்லாம் ரொம்பவே அலர்ஜி. என்னோட அலைவரிசல் ஒத்து வராதுன்னு ஒரு எண்ணம். அது தான் உண்மையும் கூட. இதுனால எனக்கு ரொம்ப 'நல்ல' பேரு எல்லார்கிட்டயும் இங்கே. :).எனக்கு ஒருத்தருக்கு சமைக்கறதே பெரும் பாடு. என்னோட டைமிங்கும் ரொம்ப கஷ்டம். அப்படியே பழகியும் போச்சு.

நான் எப்போதும் ஆண்டவன் கிட்டே வேண்டுறது ஒண்ணே ஒண்ணு தான். என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது. நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.
இவரு இந்தியாவுல இருந்து நேரடியா வரலை, ச்விடன்ள ஒன்றரை வருடமா இருந்து இருக்காரு. அதவாது அவருக்கு வெளிநாடு புதுசு கிடையாது. வந்த மொதோ நாளே சேர்ந்து தங்கலாமா அப்படின்னு கேட்டாரு. இல்லை சாரு எனக்கு ஆவாது அப்படினேன். சரி சேர்ந்து சமைக்கலாம் அப்படினாறு. இல்லை அண்ணேன் எனக்கு அது ஒத்து வராது அப்படினேன். இதுலையே பாதி மூஞ்சி தொங்கி போச்சு. ஆனா கூட்டிகிட்டு போய் கடை எல்லாம் சொல்லி கொடுத்தேன், எல்லாம் எங்கே என்ன வாங்கனும்னு எல்லாம் சொல்லிட்டேன்.

இப்போ ஒரு வாரமா என்ன நடக்குதுன்னா அண்ணே, உண்ணாவிரதம் இருக்கற மாதிரி ஒரு பீலிங். ஒண்ணு சாப்டாம தூங்குறாரு, இல்லை வெறும் ஊறுகா சாதம், தயிர் சாதம்னு சாப்பாடு போகுது. இப்படி தான் எப்போதும் சாப்பிடுவாரா இல்லை இங்கே வந்து தான் இப்படியான்னு தெரியலை. எது எப்படியோ எனக்கு இது அனாவசியமான விஷயம்.

என்னால இதை பாத்திட்டு வாய்யான்னு தினம் சமைச்சு போடவும் முடியலை (முடியாது), சரி என்னவோ பண்றாருன்னு விட்டுட்டு என் வேலைய பாக்க மனசு கேக்க மாட்டேங்குது. முடியலை. தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு போகுது. எனக்கு இது எல்லாம் தேவையா. சும்மா சிவனேன்னு இருந்தேன்.. :(

நான் என்ன பண்றது மக்கா ??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னோட போன பதிவை பாத்திட்டு ஒரு நண்பன் கேட்டான். என்னடா பதிவு போட்ட உடனே பத்து பேரு வந்து பாத்து பதில் போட்டு இருக்காங்க அப்படின்னு.

நான் சொன்னேன், (தலைவர் ஸ்டைல்ல படிக்கவும்) 'தம்பி, எல்லாம் தான வந்த பின்னூட்டம் இல்லை, ஈமெயில் பண்ணி வரவெச்ச பின்னோட்டம்' அப்படின்னு :) :) (இதுவும் ஒரு விதத்துல தலைபோட ஒத்து போகுது :) :) :) )
SK
'டேய் வாடா, கிளாஸ்'கு லேட் ஆச்சு'

'இருடா, இட்லி வர்ற இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமாம்., நீ வேணும்னா போ, நான் அப்பறம் வர்றேன்'.

'இந்த இட்லிக்காக கிளாஸ் கட் அடிக்கிறியா'.

இது எனக்கும் இட்லி'கும் ஆன பந்தத்தை பற்றி சொல்லும். இட்லியும் தோசையும் காலை சாப்பாட்டுக்கு இருக்கற அப்போ எல்லாம் முதல் வகுப்புக்கு ஒண்ணு லேட்டா போவேன் இல்லை போகவே மாட்டேன். கல்லு போல இருக்கற ஹாஸ்டல் இட்லியே இப்படின்னா, பூ போல இருக்கற அம்மா செய்யற இட்லி எப்படின்னு நான் சொல்லவே வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளி நாடு வந்த அப்பறம் நாம மொதல்ல மிஸ் பண்றது நம்ம சாப்பாடு தான். என்ன தான் சாதம் சாப்பிட்டாலும் இட்லி தோசைக்கு ஈடு வரவே வராது.

தலைவனை பிரிஞ்சு தலைவி ஏங்குவது போல (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ) நமக்கும் இட்லிக்கும் ஆன அந்த ஒரு பிரிவு ரொம்ப வாட்டிகிட்டே தான் இருக்கும்.

சரி, போய் ஹோட்டல்ல சாப்பிடலாமேன்னு தானே கேக்குறீங்க. அமெரிக்காவுல இருக்கற போல அதிக இந்திய உணவு விடுதிகள் குறிப்பாக நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு வகைகள் இங்கே கிடைக்கறது இல்லை. அதையும் மீறி கிடைச்சாலும், அஞ்சு ஈரோ, பத்து ஈரோ கொடுத்து ரெண்டு இட்லி சாப்பிட மனசு வர்றது இல்லை.

இதுக்கு ஒரே வழி தன் கையே தனக்கு உதவி தான். ரெண்டு வருஷம் முன்னாடி இந்திய வரும் போது மிக்ஸ்சி வாங்கிட்டு வந்து வெச்சிட்டேன். இந்த தடவை இந்திய வரும் போது மறக்காம, மைக்ரோவேவ் இட்லி ப்ளட் வாங்கிட்டு வந்துட்டேன்.
அதோட கடை திறப்புவிழா போன வாரம் தான் நடந்திச்சு. படங்கள் உங்களுக்காக இங்கே. உங்கொப்புரானே மாவுல இருந்து எல்லாம் நானே அரைச்சு இட்லி வரைக்கும் எல்லாம் நானே செஞ்சது. மொதோ மொரையே வெற்றி வெற்றி வெற்றி. 52 இட்லி மூணு பேரு ஒரு வேலை சாப்பாடுக்கு முடிச்சோம். (இட்லி அளவு கொஞ்சம் சின்னது தான், இருந்தாலும்.........).

இன்னைக்கு வேற வித்யா, ஹோட்டல் பத்தி பதிவு எழுதி என்னை கிளப்பி விட்டுடாங்க. என்ன தான் இருந்தாலும் அவன் அவனுக்கு அவன் அவன் சமையல் தான் அமிர்தம் (இப்படி சொல்லி மனசை தேத்திக்க வேண்டியது தான்).

இந்த இட்லி ப்ளேட் பற்றிய மேலதிக விவரம் அறிய இங்கே பார்க்கவும். இது எல்லாம் பெரிய அளவு இட்லிக்கு. சின்ன அளவு தான் நான் செஞ்சது. பெரிய அளவு விலை முப்பது டாலர் போட்டு இருக்கு. நான் திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடைல நூத்தி நாப்பது ரூபாய்க்கு வாங்கினேன். வேற எங்கயும் விசாரிச்சா பெரிய இட்லி ப்ளேட் பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இருக்கு.

யாருப்பா அங்கே இருந்து 'தம்மா தூண்டு இட்லிக்கா இம்புட்டு பெரிய பதிவுன்னு கேக்குறது'. அஞ்சு ரூபா பத்து ரூபா கொடுத்து இட்லி சாப்டா அதோட மதிப்பு மரியாதை தெரியாது மக்கா உங்களுக்கு எல்லாம். :) :)

கடைசியா எல்லாருக்கும் சொல்ல விரும்புவது

நாங்களும் இட்லி சாப்பிடுவோம்ல (அவ்வ்வ்வ்வ்)

அளவில்லா இட்லியுடன்,
எஸ். கே.