பொங்கலுக்கு அம்மாவிடம் போனில் பேசும் போது
'ஹலோ அம்மா, நான் இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். ஆமா ரெண்டு நாள் தான்'
'சரி பத்திரமா போயிட்டு வா. அங்கே என்னடா நல்ல இருக்கும். ஏதாவது நினைவா வாங்கிட்டு வா'
'சரிம்மா. திரும்பி வந்த அப்பறம் பேசறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னுடைய ஜேர்மன் கிளாசில்.
'இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். அங்கே என்னது நல்லா இருக்கும்'
அனைவரும் ஒரு மனதாக சிரித்து கொண்டே, Blonde Girls.
அஆஆஹா அம்மா சரியா தான் சொல்லி இருக்காங்க. நான் வேற அம்மா சொல்லை தட்டாத பிள்ளை ஆச்சே. சரி விடு எப்புடி இருக்குனு போயி பாத்துடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனியினால் உறைந்த ஆறுகள், ஏரிகள். மூன்று தீவுகளை இணைத்து ஒரு நகரம். பழைய கட்டிடடங்கள், அமைதியான சாலைகள், எங்கும் பனி, நெரிசல் இல்லாத நகரம். இன்னும் அப்படியே நினைவில். மீண்டும் செல்ல வேண்டும் என்ற நினைவு எப்போதுமே மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சிரித்த முகத்துடன் அனைவரும், ஒரு தோழமையை கொண்ட பேச்சு. நண்பர்கள் சொன்ன போல புள்ளைங்கள பத்தி சொல்லவே தேவை இல்லை. எனக்கும் பின்னணியில் ஒரு பாட்டு ஓடிகிட்டே இருந்தது, 'கட்டுனா உன்னைய கட்டனுண்டி' அப்படின்னு. ம்ம்ம் என்ன பண்ண. இல்லை இல்லை... எனக்கு இல்லை. சொக்கா. சொக்கா'.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிகவும் புகழ் பெற்ற சிட்டி ஹால் எனப்படும் இடத்திற்கு சென்றோம். அங்கு தான் நோபிள் பரிசு கொடுத்தவுடன், இரவு விருந்தும், அனைத்து விருந்தினர்களும் டான்ஸ் ஆடும் இடமும் உள்ளது. அதாவது அது ஸ்டாக்ஹோம் நகரத்திற்கான பார்லிமென்ட் அப்படின்னு வெச்சுகோங்க. அதை ஒரு டூரிஸ்ட் கைடுடன் சுத்தி பாத்தோம். ஒரு பெரிய நீண்ட அரை. அங்கு சுவரில் அழகான ஓவியம். அதனருகே இரண்டு தூண்கள். ஒன்று மொழக்கட்டினு வழ வழன்னு இருந்தது, இன்னொன்னு எட்டு பக்கங்களை கொண்ட ஒரு தூண். அந்த எடத்துல அவர் விளக்கம் தர்றாரு.
'இங்கே என் இந்த ரூம் புல்லா ரெண்டு தூண் வெச்சு இருக்காங்க தெரியுமா ?'
'தெரியாது' இது நாங்க.
'ஆணையும் பொண்ணையும் போல தான் இந்த ரெண்டு தூணும்'
'ஓஹோ'
'இது எது ஆண் தூண். எது பெண் தூண். சொல்லுங்க. எப்படி கண்டு புடிப்பீங்க'
'தெரியலையே.'
'இங்கே இதோ மொழு மொழுன்னு இருக்கு இல்லையா. அது ஆண் தூண். ஆண் மூளை வேலை செய்யறா போல. ஒன்னே ஒன்னு தான் யோசிக்கும்'
'ஓஹோ'
'இந்த எட்டு பக்கம் வெச்சு இருக்கு இல்லையா. அது பெண் தூண். ஒரு நிமிசத்துல எட்டு விதமா யோசிக்கும். எப்போ என்ன மாறும்னு யாருக்குமே தெரியாது'
'ஆஹா, உங்க ஊரு ஆட்கள் ஞானியா' (இது நான் மனதுக்குள்).
'உங்க ஊருலயும் இப்படி தானா.' நான் அவரிடம்.
'அது யுனிவர்சல் கண்ணு' பின்னாடி இருந்து ஒரு அனுபவஸ்தர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோபல் முசீயம் போய இருந்தோம். அண்ணன் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு செய்தி. 'அண்ணே. அங்கே உங்களை இந்தியன்னு போட்டு இருக்கு. அது என்னனு கொஞ்சம் கவனிங்க. பயபுள்ளைங்க மேல ஒரு கேஸ் போடுங்க சொல்றேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாக்ஹோமில் இருந்து ஹெல்சிங்கி வரை, 18 மணி நேரம் செல்லும் கப்பல் பயணம் செல்ல முடியவில்லை. இதுக்காகவும், அப்பறம் முன்னமே சொன்ன அம்மணிகளை திரும்ப பாக்கறதுக்காகவும் இன்னொரு முறை ஸ்டாக்ஹோம் போயே தீரணும்னு இருக்கேன். ஹி ஹி ஹி.
அன்புடன்
எஸ். கே.

குமாரு... நடத்து.. :))
Rajalakshmi pakkirisamy, இந்த புன்னகை என்ன விலை. .:)
மயில், என்னத்த நடத்தறது. அதான் சொக்கன் இல்லைன்னு சொல்லிட்டானே.. :)
சகா. எனக்கும் ஒரு.....
எஞ்சாயோ எஞ்சாய் தான் போல
'அண்ணே. அங்கே உங்களை இந்தியன்னு போட்டு இருக்கு. அது என்னனு கொஞ்சம் கவனிங்க. பயபுள்ளைங்க மேல ஒரு கேஸ் போடுங்க சொல்றேன்.
//
:))))))
தூண் மேட்டர் சூப்பர்.
வெ. ராமகிருஷ்ணன் - :))))
sk..sk..ungala nenacha sirippu sirippa varuthu:-))))))))))
சகா, ஒன்னு போதுமா ?? :)
தென்றல் யக்காவ், எதோ என்னால முடிஞ்சது :)
அண்ணே, பாக்கியம் ஆனேன். இங்கே எல்லாம் தரிசனம் தர்றீங்க.. :)
நவாஸ், நன்றி.
இயற்கை, Why சிரிப்பு யுவர் ஆனார்.
படங்கள் எதுவும் இணைக்கவில்லையா SK??
பிறகு, "ஸ்டாக்ஹோம்"க்கேவா??? தேவதைகள் விளையும் தேசத்துக்கு வந்த என்ன சொல்லுவீங்க???
:-))
Nalla kurippu :) enna dhaan amavukku vangineenga kadaisiya? ;)
நடத்துங்க சார் ;))))))))
அடுத்தமுறை போகும்போது உங்கம்மா மனசுக்கு பிடிச்சா மாதிரி வாங்கிட்டு வந்துடுங்க :))))))))))
பதி, என்ன தான் சொன்னாலும் ஸ்டாக்ஹோம் புள்ளைங்க ஒரு மார்கமா தான் இருந்தாங்க :-) உங்க ஊரு புள்ளைங்க அதிகம் சிரிக்காதுங்க :-)
Musinggal, ammavukku showcasela vaikara pOla oru sweden kodi potta oru bommai + oru chinna shaal maadhiri vaanginen.
அமித்து அம்மா, வாங்கிட வேண்டியது தான். நான் அம்மா சொல்லை தட்டாத புள்ளைங்க.. :)
ஹென்றி, ரொம்ப நன்றிங்க.
//நோபல் முசீயம் போய இருந்தோம். அண்ணன் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு செய்தி. 'அண்ணே. அங்கே உங்களை இந்தியன்னு போட்டு இருக்கு. அது என்னனு கொஞ்சம் கவனிங்க. பயபுள்ளைங்க மேல ஒரு கேஸ் போடுங்க சொல்றேன்.//
கட்டுரையில் மிகவும் ரசித்த பகுதி :-)
Srini
//உங்க ஊரு புள்ளைங்க அதிகம் சிரிக்காதுங்க :-) //
என்னது சிரிக்காதுங்களா?? யாரு சொன்னா??
Bonjour சொல்லி கன்னத்துல ஒரு பிஸு (கிஸ் இல்ல !!!!) கொடுக்குறத பாக்குறதுக்கே கோடி கண்ணு வேணும் ராசா !!!!
:-)
என்னமோ போங்க....
ஸ்ரீ, :) அது தான் தலை விதி :)
பதி, ஒரு வேல நான் தான் பச்சை புள்ளைய இருந்துட்டனோ.. இதுக்கே உங்க ஊருக்கு வர்றேன் மீண்டும் ஒரு முறை
நீங்க Helsinki லியா இருக்கீங்க?
Mithra kutty, இல்லை . நான் இருப்பது ஜெர்மனியில் :) ஊரு சுத்தி பாக்க வரணும்னு சொல்லிட்டு இருந்தேன்.. அந்த பக்கம்.
ஏதோ நாமே ஸ்வீடன் போனாற்போல் இருந்தது!!