SK
இந்த இரண்டு விடயங்களும் ரொம்ப நாளாவே இப்படி தான் இருக்கா இல்லை இப்போ சமீபமா அதிகம் ஆகி இருக்கான்னு தெரியலை. நான் சமீபமா ரொம்ப கவனிக்கறேன்.

அ. கேள்விக்கு பதில் கேள்வியாக ??

எனக்கு தெரிஞ்சு இப்போ எல்லாம் ஒரு கேள்விக்கு பதில் பதிலா வருதுன்னா, அது ஒன்னு தான் 'நீ எப்படி இருக்கே??', 'ம்ம் ஏதோ இருக்கேன்', 'நல்ல இருக்கேன்' இவ்வளவு தான்.

இதைத்தவிர வேற எந்த கேள்வி கேட்டாலும், அதுக்கு பதில் திரும்ப ஒரு கேள்வியாத்தான் வருது.

எங்க அக்கா கிட்டே, 'ஏங்கா, போன் நம்பர் மாத்தினியே எனக்கு தரணும்னு தோணிச்சா?? அப்படின்னு கேட்டேன் ??'

இதுக்கு என்ன பதில் தரணும் எசமான். 'மறந்துட்டேன்', 'இல்லை தரலை', 'இந்த நம்பர் இப்போ தர்றேன் வெச்சுக்கோ', இதுமாதிரி எது சொன்னாலும் சரி.

ஆனா, வர்ற பதில் என்ன தெரியுமா, 'நீ தந்தியா நம்பர் மாத்தின அப்போ??'.

சரி நம்ம வீட்டுல தான் இந்த பிரச்சனைன்னு பாத்தா, சின்ன விடயத்துல இருந்து, பெரிய பெரிய விடயம் வரைக்கும் இப்படித்தான் இருக்கு. 'ஏன்டா உங்க ஆளு மூணு பேரை கொன்னுட்டாங்களே, அதுக்கு தண்டனையும் இல்லை ஒன்னும் இல்லை, இது நியாயமாடா' அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் என்ன தெரியுமா 'உங்காளுகளும் தான் எட்டு பேரை சாகிடிச்சாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்' அப்படின்னு பதில் வருது. ஆகா மொத்தம் இதுக்கு பதிலே கிடையாது, செத்தவும் உசுருக்கும் மதிப்பு கிடையாது.

நாம முடிஞ்சா வரைக்கும் நம்ம கிட்டே கேக்கபடற கேள்விக்கு பதில் நேரடியா சொல்லி பழகுனா, அது பல விடயங்களுக்கு ரொம்ப நல்லது. பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. இந்த விடயத்தை நான் கொஞ்ச நாளா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இப்போ தேர்தல் நேரம் இது ரொம்ப நல்லா பயன்படும். அவன் என்ன செஞ்சான், இவன் என்ன செஞ்சான் அப்படின்னு கேள்வி மட்டும் தான் கேப்பாங்க. நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை.

ஆ. இரு கோடுகள் :

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டா ஒரு கேள்வி கேப்பாங்க. ஒரே அளவுல ரெண்டு கோடு வரைஞ்சு, ஒன்னை இன்னொன்றை விட பெருசாக்கி காட்ட சொல்லுவாங்க. எல்லாருமே அதுக்கு ஒரு கோடை பெருசாக்குவாங்க. மாத்தி யோசி மக்கான்னு சொல்லி, ஒரு கோடை அழிச்சு சின்னாதாக்கி இப்பவும் இது பெருசாகிடிச்சுன்னு சொன்ன ஆட்களும் உண்டு.

இந்த தத்துவத்தை நம்ம மக்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சு இருகாங்க. இது அடித்தள மக்கள் கிட்டே இருந்து அரசன் ஆளுறவன் வரைக்கும் இருக்கு.

திரைப்படம் ஒலி நாடா வெளியீட்டு விழா நடக்குது, ஒரு இயக்குனரை கூப்பிட்டு இசை அமைப்பாளரை பாராட்டி பேச சொல்லி கூப்பிடறாங்க. நம்ம ஆள் என்ன பண்றாரு, இவருக்கு போட்டியாகவோ இல்லை இன்னொரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரை சூசகமா சொல்லி, இவரு அதை போல எல்லாம் இல்லை அப்படின்னு பேசுறாரு. நம்ம மக்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தனை புகழ்ந்து பேசறதுன்னா இன்னொருத்தனை திட்டி பேசறது அப்படிங்கற முடிவுல இருக்காங்க.

இந்த பாட்டு எப்படி இருக்கு, அந்த பாட்டை விட நல்லா இருக்கு. ஏன் உங்களுக்கு அந்த பாட்டுல இருக்கற நல்ல விடயம் தெரியலையா, இல்லை இப்படி சொன்னாத்தான் கை தட்டுராங்களா.

இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா நாம தான். ஆமாங்க ஒரு படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கறாங்க அதை அப்படியே கிண்டல் பண்ணி அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ 'லொள்ளு சபா' அப்படிங்கறதுக்கு தானே அமோக ஆதரவு தர்றோம். கேட்டா காமடியாம்.

ஏன் நம்ம பதிவுலகத்துலையே எதிர் பதிவுக்கு தானே மவுசு கூட. :)

இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? செஞ்சா நல்லது தான்.

அன்புடன்,
எஸ். கே.
18 Responses
  1. இந்த பதிவு ஏன் போட்ட? எதுக்குன்னு எனக்குப் புரியல:)


  2. கொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிச்சு இருக்கீங்க.. :-)


  3. //இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? செஞ்சா நல்லது தான்.//

    ரொம்ப தெளிவா யோசனைப் பண்ணி எழுதியிருக்கீங்க.

    நீங்க சொல்வது மிக நல்ல விசயம்தான். கடைபிடிக்க நானும் முயற்சி செய்கின்றேன்


  4. Anonymous Says:

    எனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. அதானே?

    கொமாரு, இதெல்லாம் அரசியல்ல சகஜம், கண்டுக்காதே.


  5. SK Says:

    வித்யா, என்னையே திரும்ப கவுக்கறீங்களே :)

    கார்த்திக், இந்த விடயத்தை நான் கொஞ்ச நாலா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதான்.

    ராகவன் அண்ணா, முயற்சி பண்ணி எதாவது வித்யாசம் தெரிஞ்சா சொல்லுங்க.

    மயில், எம்புட்டு நாளு இப்படியே சொல்லிட்டு இருக்கறது ?? :)


  6. RAMYA Says:

    பொலம்பல்கள் என்று தலைப்பை வைத்துக் கொண்டு அருமையான
    பதிவு S.K.

    நல்லா சிந்திச்சு இருக்கீங்க. அலசி ஆராய்ந்து ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க.

    உறவில் ஆரம்பித்து, திரைப்பட ஒலி நாடாவில் புகுந்து, பதிவின் எதிர் பதிவு வரை அலசி இருக்கீங்க.

    நீங்கள் கூறி இருப்பது போல் நேர்மறையான பதில்கள் நன்றாக இருக்கும். நான் எப்பவுமே அப்படி எல்லாரும் பேசினா என்னான்னு தோணும்.

    எனது சிந்தனை உங்களின் இந்த பதிவுகளில் பல வரிகளில் ஒத்துப் போகின்றது.

    ஒரே மாதிரி யோசிக்கும் ஒற்றுமையை நினைத்து எனக்கே என் மீது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எனது சிந்தனை தவறு இல்லை என்று.

    வாழ்த்துக்கள் குமார்!!


  7. Unknown Says:

    ரொம்ப யோசிக்கிறீங்க போல?? ;))


  8. சகா .பார்த்து..

    முடி கொட்டிட போது


  9. SK Says:

    ரம்யா, நன்றி விலாவாரியான பதிவுக்கு. நீங்களும் இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்கன்னு நினைச்சு ரொம்ப சந்தோசம். (நான் தனி மரம் இல்லைன்னு தெளிய வெச்சுடீங்க. :) )

    ஸ்ரீமதி, ஹி ஹி ஹி .. வாட் டு டூ .. :) (என்ன புது பழக்கம் இது :) :) :) )

    கார்க்கி, அது முன்னாடியே கொட்டிகிட்டு தான் சகா இருக்கு.


  10. வித்தியாசாமாத்தான் யோசிச்சிறிக்கீங்கப்பு!!!


  11. இப்படி கேள்விக்கு எதிர்க் கேள்வி கேக்குறது மதுரக்காரைங்கதேன். அவிங்க கிட்ட இருந்து எல்லா பயபுள்ளைகளும் சொல்ல ஆரம்பிச்சுருச்சுக.

    நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை. //

    ரொம்ப நல்லா சொன்னீங்க.

    இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? //

    ஏன் அதை நீங்க செஞ்சீங்களா? ;)


  12. //கார்க்கி, அது முன்னாடியே கொட்டிகிட்டு தான் சகா இருக்கு.//

    அது அழகாத்தான்(ஹிஹி..எனக்கு சொன்னேன்) அப்புறம் நடுவுல கொட்டிட போது..(ஹிஹி இது உங்களுக்குத்தான் சொன்னேன்)


  13. SK Says:

    விக்னேஷ்வரி,

    நான் முடிஞ்சா வரைக்கும் அதை கடைபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

    கார்க்கி, ஹி ஹி ஹி :)


  14. SK - நல்லா இருக்கு பதிவு. ஜெர்மனில எங்க இருக்கீங்க SK ?


  15. SK Says:

    வாங்க மணிகண்டன்.

    பெர்லின்ல இருக்கேன்.


  16. நேரம் அதிகம் கிடைச்சு ரொம்ப யோசிச்சிருக்கறாப்ல இருக்கு.

    நிஜமாகவே நல்லாயிருந்துச்சு


  17. எல்லாம் சரிதான்!!!இப்போ அதுக்கு என்னவாம்???இப்டியுமா கடிக்கிறது?

    நம்ம இவ்ளோ லேட் ஆ வந்து படிக்கிறோமேன்னு கவலையோட படிச்சா.....செம பொலம்பலா இல்ல இருக்குது!!!


  18. SK Says:

    புதுகை தென்றல்,

    நன்றி. நீங்க யாருகிட்டயாவது பேசும் பொது இதை கவனிச்சு பாருங்க. :)

    சசிரேகா,

    அட உண்மையாதாங்க. நீங்களே கவனிச்சு பாத்திட்டு சொல்லுங்க.
    உங்க நாட்டுல தாங்க இருக்கேன். :)