ஊருக்கு போயிட்டு வந்தா கட்டுரை எழுதணுமாமே. நாங்களும் எழுதுவோம்ல.
இரண்டு வருடம் கழித்து இந்தியா போயிட்டு வந்தாச்சு. அதே இந்தியா ஆனால் பல நல்ல மாற்றங்கள். ஒட்டுமொத்தமாக நல்ல படியா அமைந்தாலும், ரெண்டு விஷயம் என்னை ரொம்பவே சங்கட படுத்திச்சு.
ஒண்ணு, என்னோட உடல்நிலை. அப்போ அப்போ சரி இல்லாம போய் ரொம்ப படித்திடிச்சு.
ரெண்டாவது, நேரம் தவறுதல். ஒரு நண்பரை பார்க்க ஏழு மணிக்கு வர்றேன்னு
சொன்னா சொன்ன நேரத்துக்கு போக முடியலை. இத்தனை மணிக்கு தொ(ல்)லை பேசுறேன்னு சொன்னா அப்படி சரியா சொன்ன நேரத்துக்கு செய்ய முடியலை. இது மாதிரியே தொடர்ந்து நடந்தது. இந்தியாவில் என்னை பிளான் பண்ணிக்கொள்கிற விதம் சரி இல்லைன்னு மட்டும் புரிஞ்சது.
சரி விடயத்துக்கு வருவோம். இங்கே பயணத்துல நடந்த சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை எழுதலாம்னு இருக்கேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சி டு நாகர்கோயில்
போய் சேந்த அன்னைக்கே நாகர்கோயில்'ல ஒரு நண்பன் கல்யாணத்துக்கு போறதா பிளான். இரவு ஒன்பது மணிக்கு திருச்சில இருந்து பேருந்து. பேருந்து கெளம்பி சரியா போய்கிட்டு இருந்தது. பத்தரை பதினோரு மணி சுமாருக்கு பின்னால இருந்து ஒரு சலசலப்பு.
கொஞ்ச நேரத்துல சத்தம் அதிகம் ஆச்சு.
பஸ்'ல வந்தவரு யாரோடையோ தொலைபேசுராறு,
'மாப்ளை, முன்னாடி இருக்கறவன் ஜன்னலை மூடுன்னா மூட மாட்டேன்குறான். ஒரே பிரச்சனையா இருக்கு. பன்னிரண்டு மணி போல பஸ் மதுரை வரும். நீ நம்ம ஆளை எல்லாம் கூடியாந்திடு. அங்கே பாத்துக்கலாம்'.
தம்மாதுண்டு சன்ன கதவு மூடாத விஷயத்துக்கு எதுக்கு .. அப்பறம் நடத்துனர் வந்து பஞ்சாயத்து பண்ணி வெச்சிட்டு போனாரு. நானும் அரண்டு போய் இருந்தேன்.
அப்படியே, மறுநாள் அதே போல ஒரு பேருந்துல நாகர்கோயில் டு திருச்சி பயணம். கொஞ்சம் காய்ச்சல் வர போல இருந்தது. எனக்கு பின்னாடி இருக்கைல இருக்கறவரு எங்க இருக்கைல இருக்கற கதவை திறந்து தான் வைப்பேன்னு அடம் புடிக்கராறு. அப்போ தான் அவருக்கு காத்து சரியா வருதாமாம்.
'அண்ணே, ரொம்ப பனியா இருக்கு. ஒடம்பும் சரி இல்லாதது போல இருக்கு. கொஞ்சம் சன்ன கதவை மூடிகிட்டா நல்ல இருக்கும்னு சொன்னேன்'
'ஒரே புழுக்கமா இருக்கு தம்பி, அது எல்லாம் முடியாது அப்படின்னு சொன்னாரு'.
போகும் போது நடந்த நிகழ்ச்சி அப்படியே கண்ணுக்கு முன்னாடி வந்திச்சி. எனக்கு அதுக்கு மேல பேச 'தில்' இல்லை. சரிண்ணே அப்படின்னு சொல்லிட்டு பின்னாடி கடைசில ஒரு இருக்கை காலியா இருந்திச்சு, அங்கே போய் ஒக்காந்துட்டேன். வேற என்ன பண்ண :(
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னைக்கு ரெண்டு நாள் தான் போக முடிஞ்சது, அதுவும் நண்பனுக்கு ஒரு அவசர வேலையா.
நானும் அந்த பிரபல பதிவரும் ஒரு உணவகுத்துல ஒக்காந்து இருந்தோம். எல்லாம் பேசி முடிச்சிட்டு சரி பில் கொடுக்கலாம்னு பேரரை அவரு கூப்பிடறாரு.
'தம்பி'
நோ ரெஸ்பான்ஸ்.
'தம்பி'
நோ வே. நோ ரெஸ்பான்ஸ்.
'அண்ணே'
பேரர் திரும்பி, 'என்ன சார்'
நான் அண்ணனிடம், 'இப்போ தெரியுதுண்ணே, நீங்க ஏன் எல்லாரையும் அண்ணன்னு கூப்பிடரீங்கன்னு. அதையே தொடருங்க. நீங்க தம்பின்னு கூப்பிட்டாலும் யாரும் திரும்பி பாக்க போறது இல்லை', அப்படின்னு சொன்னேன்.
வேற யாருங்க அந்த பதிவரு, 'அண்ணே' புகழ் அண்ணன் அப்துல்லா தான். :) :) :) :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்து ஒரு பிரபல பதிவரை பாக்கலாம்னு போனேன். போகும் போதே ஒரு மணி நேரம் லேட். அதுலையே அவுங்க சரி கடுப்புல இருந்து இருப்பாங்கன்னு நினைக்குறேன்.
போயிட்டு அவுங்க கிட்டே பேசிட்டு (??) ( நோட் பண்ணுங்க இந்த கேள்விக்குறியை) இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு நான் அவுங்க கிட்டே கேட்டேன்,
'விஜய் டிவி பாப்பீங்களா'
'பாப்பேன், ஏன்'
'விஜய் டிவில பேசி, கார்னியர் பிருக்டிஸ் கிட்டே சொல்லி ஒரு ஸ்பான்செர் வாங்கலாம்னு இருக்கேன்'
(அவுங்க இவனுக்கு என்ன லூசா, திடீர்னு என்ன என்னவோ சொல்றான்னு யோசிச்சுகிட்டே) ஏன்??
'இல்லை, இந்த பேட்டிய ஒளிபரப்பத்தான்' அப்படின்னு சொன்னேன். :) :) :)
அப்படி தாங்க இருந்திச்சு. அம்புட்டு அமைதி அவுங்க. நான் பாட்டுக்கு ஏதோ பேசிகிட்டே இருக்க. அவுங்க, அளந்து அழகா பதில் சொல்லிகிட்டே இருந்தாங்க.
ஹலோ, யாருங்க அது அங்கே இருந்து யாரு அந்த பதிவர்னு கேக்குறது, அது எல்லாம் பெரிய ரகசியம்கோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில பல பதிவர்கள் கிட்டே, தொலை பேசில தொல்லை பண்ணினது சந்தோஷமா இருந்தது எனக்கு. அவுங்களுக்கு அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது. நான் என்னத்தை சொல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேபள் ஷங்கர் இங்கே சொல்லி இருந்த தஞ்சாவூர் மெஸ் போய் ஒரு மதிய சாப்பாடு சாப்பிட்டு வந்தது ஒரு சந்தோசம். ரொம்ப நாள் கழிச்சு போனாலும், எல்லாரும் நெனப்பு வெச்சு இருந்தாங்க. அண்ணே, உங்க கிட்டே தான் பேச முடியலை, அடுத்த தடவை முயற்சி பண்றேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரும்பி கெளம்ப பொட்டி கட்டிக்கிட்டு இருந்தேன். பாட்டி பக்கத்துல இருந்து பேசிகிட்டு இருந்தாங்க.
'ஏன்டா, அந்த ஆல்பம் எல்லாம் எடுத்துகிட்டு போறியா'
'இல்லை பாட்டி, அது வெயிட் அதிகம் இருக்கும். அதுனால எடுத்துகிட்டு போகலை'
'அப்பறம் அந்த லேப்டாப் வெச்சுகிட்டு என்னடா நோண்டிகிட்டு இருக்கே'
'அந்த போட்டோஸ் எல்லாம் இதுல காப்பி பண்ணி எடுத்துகிட்டு போறேன் பாட்டி'
'அப்போ மட்டும் வெயிட் ஏறாதா ??'
'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ' லாஜிக்கல் பாயிண்ட்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரும்பி வரும் போது கொழும்பு வழியா வந்தேன். கொழும்பு விமான நிலையத்துல எழுபது வயது ஜெர்மன் ஒருத்தரோட சில நிகழ்வுகளை பத்தி பேசிட்டு இருந்தேன். முடிஞ்சா தனி பதிவா போடுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானத்துல பக்கத்து இருக்கைல ஒரு பாட்டி. (எனக்கு கொடுப்பனை அவ்வளவே.. ம்ம்... ). எப்போதும் இல்லாதது போல இருக்கைல முதுகு பக்கம் தடிமனா இருந்தா போல இருந்தது. நான் கூட இருக்கைகள் எல்லாம் மாத்தி இருக்காங்கன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அதே மாதிரி தான் பக்கத்துல இருந்த பாட்டிக்கும் இருந்தது போல. திட்டிகிட்டே ஒக்காந்து இருந்தாங்க. மூணு மணி நேரம் கழிச்சு அவுங்க எந்திரிச்சு போன அப்போ பாத்தேன் அங்கே ரெண்டு பொத்தான் இருந்தது. அதுல ஒண்ணை அழுத்தி இதை மாத்திக்கலாம்னு இருந்தது. அதை அந்த பாட்டி வந்த உடனே சொன்னேன்.
எல்லாரும் அதுக்கு பதில் என்ன சொல்லுவாங்க மகாஜனங்களே. நல்ல யோசிங்க.
அந்த பாட்டி, உரிமையா ' அடுத்த தடவை முன்னாடியே சொல்லு' அப்படின்னு சொல்லிச்சு. இது எனக்கு தேவையா மகாஜனங்களே. :(
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரும்ப வந்து சேந்தாச்சு. பொலம்பலையும் ஆரம்பிச்சாச்சு.
அன்புடன்
எஸ். கே.

'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

me the first?? :):)
நல்ல பதிவு :))
ஸ்ரீமதி, :) :)
அதென்ன உங்களுக்கு அப்படி ஒரு பாட்டி ராசி ?!
ஊருக்கு போயிட்டு வந்தா கட்டுரை எழுதணுமாமே. //
அப்படியா, பதிவு போட மேட்டர் கெடைக்கலன்னு சொல்லுங்க
கொஞ்சம் காய்ச்சல் வர போல இருந்தது.//
ஏன் அரண்டு போனதிலா
// அதென்ன உங்களுக்கு அப்படி ஒரு பாட்டி ராசி ?! //
என்னத்த சொல்ல :( :(
// அப்படியா, பதிவு போட மேட்டர் கெடைக்கலன்னு சொல்லுங்க //
ஹி ஹி ஹி கண்டு புடிச்சுடீங்களா
// ஏன் அரண்டு போனதிலா //
அப்படியும் சொல்லலாம் :) :)
SK
ஊருக்கு நல்லபடியா போய் சேர்ந்தாச்சு. அப்புறம் சோத்துக்கு பில் யாரு கட்டினா? அப்துல்லா அண்ணனா? நான் கூட அவர பார்க்கனும்னு நினைச்ச்சிக்கிட்டிருக்கேன்.
வித்யா,
நல்ல படியா வந்துட்டேன். அப்பறம் நாங்க எல்லாம் விருந்தாளி அல்லோ :) :)
ஊருக்கு வந்ததால நீங்க செஞ்ச ஒரு நல்ல விஷ்யம் ,பதிவு போட்டதுதான்..
அந்த அண்ணன் ரொம்ப நல்லாவ்ருங்க
அப்போ இது வரைக்கும் எதுவுமே நல்லது பண்ணலைன்னு சொல்லுறீங்களா சகா :( :(
// இரண்டு வருடம் கழித்து இந்தியா போயிட்டு வந்தாச்சு. அதே இந்தியா ஆனால் பல நல்ல மாற்றங்கள். //
அப்படிங்களா...
பல நல்ல மாற்றங்கள். கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..
// ஒண்ணு, என்னோட உடல்நிலை. அப்போ அப்போ சரி இல்லாம போய் ரொம்ப படித்திடிச்சு. //
எப்போதுமே அப்படிதானுங்க...
இரண்டு வருஷம் வேற சூழ்நிலைக்கு உடம்பு பழகிடுச்சு இல்லீங்களா..
அதனாலத்தான். எப்போதுமே ஊருக்கு போனால், இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு சுத்த ஆரம்பிக்கணும். அப்பத்தான் உடம்பு படுத்தாமல் இருக்கும்.
// ரெண்டாவது, நேரம் தவறுதல். ஒரு நண்பரை பார்க்க ஏழு மணிக்கு வர்றேன்னு
சொன்னா சொன்ன நேரத்துக்கு போக முடியலை. //
அதுசரிங்க... நம்ம ஊருக்கு போயிட்டு, நேரம் தவறாமல் இருக்கணும் நினைச்சா எப்படிங்க
// அதனாலத்தான். எப்போதுமே ஊருக்கு போனால், இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு சுத்த ஆரம்பிக்கணும். அப்பத்தான் உடம்பு படுத்தாமல் இருக்கும். //
இந்த தப்பை நான் இந்த தடவை செஞ்சுட்டேன் :( :(
வருகைக்கு நன்றி அண்ணா,
//SK said...
அப்போ இது வரைக்கும் எதுவுமே நல்லது பண்ணலைன்னு சொல்லுறீங்களா சகா :( :(//
சகா ஒரு நல்ல விஷயம்னுதான் சொல்லியிருக்கேன். ஒரே ஒரு நல்ல விஷயம்னு சொல்லலையே :)))))
test
சகா நல்ல சமாளிக்கறீங்க :)
ஸ்ரீமதி, என்னதுங்க டெஸ்ட் :)))))))
hi,
thanks for remembering through your blog. you would have contacted me at anytime. i will mail my cell no. good blogging.
பொலம்பல்கள்னு பிளாக் பேருஇருக்கறாதல இது மெஹா புலம்பல்னு லேபில் வெச்சிருக்கலாம்.
சூப்பர் அனுபவங்கள்
:) அடிக்கடி புலம்புங்க எஸ்.கே. இப்படி எப்பவாதுதான் புலம்புவேன் சொன்னா எப்படி?
நன்றி ஷங்கர். (??)
நன்றி தென்றல் அக்கா. நான் இந்த லேபில்னு ஒண்ணு இருக்கறதையே கவனிக்கலை. வருகைக்கு நன்றி.
பிரியா நன்றி. முடிந்த வரை முயற்சி பண்றேன் எழுத. எனக்கு பொறுமை ரொம்ப கம்மி அது தான் பிரச்சனையே.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
அண்ணே தாமதமா வர்றதுக்கு முதல்ல என்னைய மன்னிச்சுருங்க. அப்புறம் ஊரில் உங்களப் பார்த்தலில் மிக்க மகிழ்ச்சி. அப்புறம் அந்த ஹோட்டல் மேட்டரைப் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி அச்சாக கண்ணில் விரிந்தது.கரெக்ட்டா கன்வே செய்து இருக்கீங்க :)))