SK
வணக்கம் மக்களே,

இதை எழுதலாமா வேற எதாவது எழுதலாமா. இப்படி எழுதின அவுங்க வருத்த படுவாங்கலோ அப்படி இப்படின்னு பயங்கர குழப்பத்துக்கு அப்பறம் சரி இதை எழுதலாம்னு முடிவு.

இனி என்னோட புலம்பல்

போன வாரம் ஒரு நண்பன் கிட்டே பேசிட்டு இருந்தேன். பேச்சு அப்படி இப்படி எப்படி எல்லாமோ போய் ஒரு இடத்துலே 'எனக்கு தனிமைனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான்'. அப்படியா செல்லம், அப்படி தனிமைனா என்ன அப்பு செய்வேன்னு கேட்டேன்.

காரையோ, வண்டியோ (அட வண்டின்னா மாட்டு வண்டி இல்லீங்க, டூ வீலர்), கைபேசியும் எடுத்திகிட்டு யாரும் இல்லாத இடமா போய் ஒக்காந்து, கைபேசியும் அணைச்சிட்டு இயற்கைய ரசிப்பாராம். இது பேரு தான் தனிமை.

இதே மாதிரி நிறைய ஆசாமிங்க இருக்காங்க, வெளில அம்மா சீரியல் பாத்துகிட்டு இருக்கும் போது தனியா தன்னோட அறைக்குள்ள போய் ஒக்காந்து பல்லு குத்தினா தனிமையாம்.

ஏன்பா இதுவா தனிமை.. அறுபது மணி நேரம் தனிய ஒரு அறைக்குள்ள மட்டும் சாப்பாடு தண்ணி இல்லாம கூபிட்டா ஏன்னு கேக்க ஆள் இல்லாம கைபெசில சார்ஜ் போய் யாரு கிட்டயும் பேசவே முடியாம இருக்கறது பேரு என்னங்க அப்படின்னா.

இது ஒரு விதம். இன்னொரு விதம் இருக்கு. மொழி தெரியாத ஊரு. உன்னை புரிஞ்சுகாத மனுஷங்க. உன்னால புரிஞ்சுக்க முடியாத கலாச்சாரம். பழக்கமே இல்லாத சாப்பாடு. இதுக்கு மேல என்னன்னு கேக்க ஆள் கிடையாது. அப்போ தான் சினிமா வசனம் எல்லாம் நெனப்பு வரும், 'அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய' அப்படின்னு எல்லாம். இது மாதிரி ஒரு சூழல்ல ஒரு கடினமான நேரம், எது செஞ்சாலும் தப்பா போகும். என்ன பேசினாலும் தப்பா புரியப்படும்.

கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.

அழுகை மட்டுமே ஆறுதலாய் இருக்கும்...


இனிமே யாராவது ரூமுக்கு உள்ளே போய் எனக்கு தனிமை புடிக்கும்னு சொல்லுங்க அப்பறம் பேசிக்கறேன்.

போன நவம்பெர்ல தனிமைல இருதப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்த இரு நண்பர்கள் நினைவாக ...

அன்புடன்
எஸ். கே.