SK
நீ ஏன் எப்போ பாத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ நீ மட்டும் ஊரை காப்பத்த இருக்கறா போல எப்போ பாத்தாலும் ஒரு மாதிரி எழுதறே. சினிமா பத்தி, அரசியல் பத்தி எல்லாம் மொக்கை போடலாம்ல அப்படின்னு ஒரு புண்ணியவான் என்னைய பாத்து கேட்டு புட்டான் மக்கா. சும்மா இருப்பனா நான். இதோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.

ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.

கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது

எவனுக்கு நல்லா தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(

சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம் இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(

எவன் எவ்வளவு லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இங்கே.

நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.

அன்புடன்
எஸ். கே.
13 Responses
  1. Anonymous Says:

    குமாரு, நல்ல வேளை, ஒரு மார்க்கமாவே இருக்கியே என்னாச்சோன்னு நெனச்சேன். பரவாயில்ல.

    கந்தசாமி பாக்காம நம்ம பதிவுலக மக்கள் என்னை காப்பத்திட்டாங்க :)

    காங்கிரஸ் பத்தி பேசி நம்ம சஞ்சய் அண்ணன் கிட்ட அடிவாங்கதே. ::))

    மத்தபடி கொஞ்சம் படி அப்பு, போன வேலையை கொஞ்சமாவது பாரு..


  2. பதி Says:

    //விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள். //

    இதில் எந்த உள்குத்தும் இல்லையென நம்புகின்றேன்... !!!!!!!!


  3. IKrishs Says:

    //நேத்து சினி செய்திகள் பத்தி மேஞ்சுகிட்டு இருக்கும் பொது ஒரு செய்தி படிச்சேன். 'Gowthami’s daughter proud of dad Kamal’s achievement'. இது யாருக்காவது புரிஞ்சா விளக்குங்க மக்கா. புரியாதவங்களுக்கு நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.

    Kamale oru thadava sonna madhiri "avanga veetu jannalai neengha yen yetti paakureengha?"

    //இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா.

    yenakkum idhu thonuchu...Kamal dhan yenna logic nu sollanum...Krish


  4. எஸ் கே

    கமல் 63ல் இருந்து 72 வரை சினிமாவில் நடிக்க இல்லையென்றாலும் நடன உதவி இயக்குநர் போன்ற வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தார். (தங்கப்பன் மாஸ்டரிடம்).


    கருணாநிதி இடையில் வசனம் எழுதாமல், திரைத்துறையில் பங்களிக்காமல் இருந்தாலும் கூட 50 ஆண்டுவிழா எடுத்தார்கள்.

    அமிதாப் பச்சன் மிருத்யுதாதா படத்துக்கு முன் சில ஆண்டுகள் இடைவெளி விட்டு இருந்தார். ஆனாலும் அதைக் கணக்கிடாமல் தான்
    40 ஆண்டுக் கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

    உங்கள் கணக்குப்படிக்கூட 2022 ல் கூட ஒரு பொன்விழாவைக் கொண்டாடிக் கொள்கிறோம். எங்கள் தலை அப்போதும் திரைத்துறையில் ஏதாவது வேலையை செய்து கொண்டிருப்பார்.


  5. முரளிகண்ணனுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு:)


  6. SK Says:

    யக்கோவ், என் நினைக்க மாட்டீங்க. அடி வாங்க போற மாதிரி தான் எனக்கும் தோணுது. :-) படிப்பு.. ஹி ஹி ஹி ..

    பத்தி, நோ உள்குத்து. நான் ரொம்ப நல்லவங்க.

    உம, அதுவும் சரி தான். உங்களுக்கும் தோனிச்சா.. அப்போ நான் தனி ஆள் இல்லை. தோப்பு தான்.

    முரளி சார், வாங்க. நீங்க வருவீங்கன்னு தெரியாம எழுதிட்டேன். இப்படி எல்லாம் சொன்னா நான் அழுதுடுவேன் :-) உங்களுக்கு ஒரு ஈமெயில் செஞ்சேன் லாங் லாங் எகோ சோ லாங் எகோ. வேணும்னா திரும்ப அனுப்பறேன். கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார்.

    வித்யா, யு டூ. வாங்க நல்லா இருக்கீங்களா.


  7. முரளி அண்ணா(என்னது? அவர் முரளிகண்ணா வா?)

    இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படி? நான் கூடத்தான் 25 வருஷமா படம் பார்க்கிறேன். அப்ப திரையுலகில் வெள்ளி விழா எடுக்கலாமா எனக்கு?

    ஹிஹிஹிஹி


  8. இதுலயும் கொஞ்சம் நல்ல தகவல்கள் இருக்கே. மொக்கை போட நீ இன்னும் வளரணும் ராசா :)


  9. SK Says:

    கார்க்கி என் இந்த மர்டெர் வெறி :-)

    தா. பி., அடுத்த மொக்கை பதிவாவது நல்ல வருதா பாக்கறேன்.. இப்போ தானே ஆரம்ப கட்டத்துல இருக்கேன். போக போக கத்துக்கறேன்.:-)


  10. கலக்கல். இந்த மாதிரி நிறைய்ய எழுதுங்க


  11. Sowmya Gopal Says:

    for Kamal's 50 yrs: andha onbadhu varusham break paatu, bharathanatyam, nadippu ellam ozhunga kathukka !! Of all the people in the cinema world (starting from hollywood to kollywood and any other wood), kamal is the only one who can sing, dance (classical and all other forms), speak multiple languages and dialects, do writing/screenplay, direction, production, use technology (right from makeup to graphics), change his body/fitness according to the movie and the list is endless...I say only one because he can do ALL of these and well...it should be obvious I am a fan but this opinion is based not just on my preference but also on facts :)


  12. SK Says:

    யக்கா, இது போலவே நிறைய எழுதவா. என்ன ஒரு வில்லத்தனமான வாழ்த்து :-)

    SG, :-) ஓகே.


  13. Sowmya Gopal Says:
    This comment has been removed by the author.