SK
வணக்கம் மக்கா..  

மே பத்து அன்று நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும். இங்கே இருந்து ஒரு மெயில் அனுப்பறதும், தொலை பேசறதும் எளிது. அங்கே இருந்து ஒரு காரியத்தை செய்யறது எவ்வளவு கடினம்னு எனக்கு தெரியும். அதை சாதித்து காட்டிய தோழர்கள் நரசிம், லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன், கார்க்கி, அமித்து அம்மா, ரம்யா.. மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புவோம். தொடரனும். தொடருவோம். தொடரும்.  

மேலும் உடனடியாக விரிவாக பதிவிட்ட நர்சிம், திரு. ராகவன், லக்கிலுக், திருமதி முல்லை, ஆதி, அக்னிபார்வை, படங்களும் இட்ட ஜாக்கி சேகர்... அனைவருக்கும் நன்றி. டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி. நேரம் ஒதுக்கி, பொறுமையாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தமைக்கு. மேலும் இடம் மற்றும் ஏற்பாடுகளுக்கு உதவிய திரு. பத்ரி அவர்களுக்கும் நன்றி.  

சரி நன்றி சொன்னது எல்லாம் போதும். இதை எழுதும் பொது நடிகர் திரு. கமல் அவர்கள், 'சென்னை - 28' படத்தோட நூறாவது நாள் நிகழ்ச்சில பேசினது தான் நினைவுக்கு வந்தது. 'இந்த வெற்றிவிழா கொண்டாட்டும் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க அடுத்த படத்துக்கு வேலை ஆரம்பிங்க. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது. ...' :) அதே தான். நாமும் அடுத்து என்ன அப்படிங்கறதை தான் யோசிக்கணும்.  

சில உதவிகள் :  

1. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஷாலினி மற்றும் டாக்டர் ருத்ரன் கூறியவற்றையும், கேள்வி பதிலையும் எளிமையாக, அனைவரும் அதாவது உங்க பக்கத்து வீட்டு அம்மா, அப்பா இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி முடிந்தால் எளிமையான உதாரணங்களுடன் இரண்டு அல்லது மூன்று பக்க கோப்பாக தயார் செய்தால் உதவியாக இருக்கும். இதையே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் செய்தால் மிக நல்லது. இதற்கு நேரம், பொறுமை, மற்றும் எண்ணம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். திரு. ராகவன், மற்றும் திரு. அக்னிபார்வை பதிவுகளை படித்து சின்ன சின்ன விடையங்களை நினைவு கூர்ந்து எழுதலாம்.  

2. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்கள். பின்னொரு நேரம் குறிப்பிட்ட அளவு நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்யலாம். மேலே நாம் தயார் செய்யும் கோப்பை அவர்கள் படித்து, மேலும் அவர்கள் தங்களுடைய கேள்விகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கு. மேலும் டாக்டர் ருத்ரன் அவர்களும், இது போல ஒரு நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியும் மேலும் நடத்தவும் ஊக்கமும் தந்துள்ளார். அதே போல் டாக்டர் ஷாலினி அவர்களும் நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாகவும் மெயில் செய்துள்ளார்.  

3. ஒரு நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் நிறைகளை கூறி பாராட்டுவதை போல நீங்கள் இதை மாற்றி இவ்வாறு செய்து இருக்கலாம் அப்படின்னு உங்களுக்கு எதாவது தோணிச்சுன்னா நண்பர் திரு. லக்கிலுக் கூறியது போல எங்களுக்கு மெயில் அனுப்புங்கள். அது எதிர் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்ய உதவியாக இருக்கும். மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com  

4. அடுத்து என்ன ?? : இது தான் ஒரு பெரிய கேள்வி. நண்பர் திரு லக்கிலுக் சொன்னது போல இப்படி செய்யலாம். அப்படின்னு தோன்றதை எங்களுக்கு எழுதுங்க. நாமும் அதை எப்படி செய்யலாம்னு யோசிச்சு இந்த நிகழ்ச்சி போல செய்யறதுக்கு முயற்சி பண்ணலாம். இதை பற்றி எழுத மெயில் முகவரி : weshoulddosomething@gmail.com

பரிசல் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  

என்ன எழுதன்னு கேட்டு இருந்தீங்க ? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். இந்த நிகழ்ச்சி நடக்கறதுக்கு மெயில் அனுப்பும் பொது கேட்டு இருந்தோம். இது பற்றிய செய்தியை எங்க படிச்சீங்கன்னு. 'பரிசல் பதிவுல பாத்தோம் அப்படின்னு' மூணு நாலு பேருக்கு மேல எழுதி இருந்தாங்க. அது தான் உங்க எழுத்தின் வீச்சு. இதுக்கு தான் நீங்க எழுதணும். நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை. கோபம், விரக்தி , வருத்தம், எதுனாலும் .. எழுதுங்க.. எழுதுங்க.. அதுனால செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.  

பதிவு நீண்டு கிட்டே போகுது. அதுனால இத்தோட நிறுத்துக்கறேன். இதே நிகழ்ச்சியை பத்திய இன்னொரு பதிவு வரும் விரைவில். உங்களுடைய பதில் பின்னோட்டம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தெரியபடுத்தவும்.  

அன்புடன்,
எஸ். கே.

பி. கு. : தேர்தல் நாளும் அதுவுமா தைரியமா பதிவு போடறேன். மக்கா ஈ ஆட விட்டுடாதீங்க. சரியாக பதிவர்களிடம் சென்று சேரவில்லை எனில், உங்கள் பதிவில் எழுதியோ, மேலே சொல்லப்பட்ட சில உதவிகள் செய்தால் மிகவும் எளிதாக இருக்கும். 

பி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்கறேன். :) 

பி. கு. 3: மறந்துடாம ஓட்டு போடுங்க மக்கா. இன்னைக்கு தேர்தலாமே.
18 Responses
  1. SK Says:

    இது எனக்காக. :-)


  2. //பி. கு. 2: பரிசல், உங்க பேரு போட்டாலாவது தேர்தல் நாளும் அதுவுமா போனி ஆகுதான்னு பாக்கறேன். :) //
    :-)))


  3. இன்னைக்கு தமிழகத்தில் லீவு.. அதனால் கூட்டம் கம்மியாத்தான் இருக்கும் சகா..

    துவக்கபுள்ளி நீங்கதான்.. வாழ்த்துகள்


  4. Anonymous Says:

    sk...எங்க ஊர்லயும் இது மாதிரி எதாவது பண்ணுங்க...


  5. // நான் எல்லாம் எழுதினா என்னாலையே ரெண்டு நாள் கழிச்சு திரும்ப படிச்ச சகிச்சுக்க முடியலை//


    நாமளே நம்மல தாழ்த்திக்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது :)

    பை தி பை வாழ்த்துக்கள் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு, முக்கிய பங்கு வகித்ததாக பல பதிவுகளும் காணப்பெற்றேன் !


  6. வாழ்த்துக்கள் எஸ்.கே. நல்லதொரு நிகழ்வுக்கு விதை விதைத்தவர் நீங்கள்தான் நன்றி + வாழ்த்துக்கள்


  7. \\இது எனக்காக. :-)\\

    இது உங்களுக்காக :-))))


    சுவையாக பொலம்புகிறீர்கள்


  8. வாழ்த்துக்கள் அண்ணே...


  9. நான் வந்துட்டேன்.


  10. இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் தோழிகள் மற்றும் தோழர்கள் இடத்தில் பீதி அடையாமல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுங்க

    இதை என் அலுவலகத்தில் நான் செய்தேன் எஸ்.கே
    மேலும் இதைப்பற்றி என் கணவரின் நண்பர்களின் மனைவிகளிடமும் சொல்லலாம் என்றுமிருக்கிறேன்


  11. SK Says:

    பாலராஜன் கீதா, என்ன புன்னகைங்க இது :)

    கார்க்கி, எதிர் பார்த்தது தான் சகா :)

    மயில், சக கோவை பதிவர்களிடம் பேசி செய்யலாம் :)

    நன்றி ஆயில்யன். முக்கிய பங்கு ஈமெயில் எழுத முடிஞ்சது, போன் பேச மட்டுமே முடிஞ்சதுன்னு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. அனால் நண்பர்கள் பங்கு மிக அதிகம்.

    தா. பி., நன்றி.

    முரளிகண்ணன், நன்றிங்க.

    தமிழன் கறுப்பி, நன்றிண்ணே.

    புதுகை தென்றல், வாங்க வாங்க. :)


  12. Athisha Says:

    வணக்கம்ண்ணே எம்பேரையும்ல இங்கிட்டு போட்டுக்கீங்க.. ரொம்ப நன்றிண்ணே


  13. SK Says:

    இருங்க நான் கில்லி பாத்துகறேன். அதிஷா என் பதிவுல பதிலா..

    அண்ணே, நீங்களே சொல்லுங்க பரிசல் பேரு பாத்து தானே உள்ள வந்தீங்க :) :)


  14. Deepa Says:

    நிகழ்ச்சி நடக்க இருந்த சில நாட்களுக்கு முன் இணையத் தொடர்பற்றுப் போயிருந்தேன். அதனால் இந்நிகழ்ச்சிக்குப் பின்புலத்தில் இருந்து பணியாற்றிய உங்களைத் தெரிந்து கொள்ளாமலே போய் விட்டேன். மன்னிக்கவும்.
    நன்றிகள் பல.


  15. குமார்... இந்த நிகழ்ச்சில உங்க பங்கும் இருக்குன்னு தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது.. நம்ம மக்களுக்கு ஏதாவது செய்யனும்னு நினைக்கிறீங்க.. எதிர்காலத் திட்டங்கள்ல என்னையும் சேர்த்துக்கோங்க.. என்னால ஆனதை செய்யுறேன்..;-)


  16. SK Says:

    தீபா,

    ஒண்ணும் பிரச்சனை இல்லை. இது ஒரு ஆரம்பமே. அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் பூந்து விளையாடலாம்.

    நீங்க ஆங்கிலத்திலும் ப்ளாக் எழுதறீங்க. நான் என் பதிவில் குறிப்பிட்ட முதல் இரண்டு உதவிகள் கொஞ்சம் உங்கள் தோழிகளுடன் இணைந்து செய்ய முடியுமா ??

    கார்த்திக்,

    நிச்சயமாக. நான் மேல சொன்னது போல இது ஒரு ஆரம்பம். நிகழ்ச்சிகள் தொடர முயற்சி செய்யலாம்.


  17. உக்காந்து எல்லாரும் பாராட்டி பேசிகிட்டு இருந்தா அடுத்த வேலை நடக்காது //

    நம்மாளு எப்போவும் கரெக்ட்டா தான் சொல்லுவாரு.

    SK, சந்தன முல்லையோட பதிவு பார்த்தீங்களா.... அழகான பாயின்ட்சா எழுதியிருக்காங்க.
    http://sandanamullai.blogspot.com/2009/05/blog-post_11.html

    இந்த நிகழ்ச்சி நடக்க காரணமா இருந்த அனைவருக்கும் நன்றிகள் பல.


  18. SK Says:

    படித்தேன் விக்னேஷ்வரி.. :) அங்கே பதிலும் போட்டு இருக்கேன்.