SK
நேத்து மயில் அவுங்க எழுதி இருந்த புலாவ் ரெசிபி பாத்து ஓவர் சூடு ஆகி போய் நேத்து இரவு டின்னெர் அது அது தான். நன்றி மயில் அக்கோவ் :)




இந்த பதிவு மயில் அவுங்களுக்கு சமர்ப்பணம். அதுக்காக பார்சல் எல்லாம் கேக்க கூடாது ஆமா சொல்லிபுட்டேன் :)

பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், இந்த வெஜ். புலாவுக்கும், வெஜ். பிரியாணிக்கும் என்ன வித்தியாசம் ??

ருசியுடன்,

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போட்டோ புடிச்சு டரியல் ஆக்குவோரை தானே சமைச்சு போட்டோ புடிச்சு போட்டு'கொல்லுவோர்' சங்கம். :)
எஸ். கே.
37 Responses
  1. என்னை தாக்க்குறீயா நீ. பார்த்துகிட்டே இரு கல்யாணத்துக்கப்புறம் முழுநேர சமையல்காரனா ஆகப்போற:)


  2. வெஜ். புலாவு

    எந்த மாநிலத்து உணவு?

    ஏனெனில் தமிழகத்தில் இந்த பெயரை நான் கேட்டதில்லை!

    கர்நாடகவில் பணிபுரிந்தபோது எல்லா உணவங்களில் புலாவு கிடைக்கும்


  3. SK Says:

    வித்யா அம்மணி, இப்படி எல்லாமா வாழ்த்துறது. :( போன பதிவுல ராகவன் அண்ணனுக்கு போட்ட பதிலை பார்க்கவும்.

    பாண்டித்துரை, எந்த மாநிலம்'நு எல்லாம பாத்து சாப்பிடறோம். பசிக்கு ஒரு சாப்பாடு அம்புடுதேன். :)


  4. Anonymous Says:

    பாக்க நல்லா இருக்கு, சாப்பிட்டு பாத்தவங்க தான் சொல்லணும் ருசி எப்படின்னு :)


  5. நீங்க சமைச்சது நல்லாத்தான் இருக்குங்கறது, இன்னைக்கு நீங்க உயிரோட பதிவு போட்டதுல இருந்தே தெரியுது நண்பா.. ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. :-)


  6. கவலைப் படக்கூடாது.

    சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போது, முதலில் அடிபடும், அப்புறம் நல்லா ஓட்ட வரும் அது மாதிரிதான்.

    சமைக்க கத்துக் கொள்வது ரொம்ப நல்லது. அதுவும் உங்கள மாதிரி வெரைட்டி செய்ய கத்துக்கிறது ரொம்ப நல்லது.

    எப்போதுமே மனைவி சமைத்து சாப்பிட்டு போர் அடிக்கும் போது, நாம சமையலைறக்குள் போல் கொஞ்சமா ரகளை விட இது உதவும்.

    பெஸ்ட் ஆப் லக்.


  7. Anonymous Says:

    நெஜமாவே நீதானா? நம்ப முடியலை? சரி நான் சொன்ன பார்முலா சரியாய் இருந்துதா? இதபோலவே தொடரட்டுமா?

    நீ கவலையே படாதே, உன்னை சகல கலா சமையல் காரன் ஆக்குவது என் பொறுப்பு. சமையல் தெரியும் என்பது கல்யாண மார்க்கெட்டில் எக்ஸ்ட்ரா advantage.


  8. Anonymous Says:

    how do you know the pulav, potato chips and curd with onion, cucumber raitha is the best combination.


  9. SK Says:

    மயில், சத்தியமா நான் தாங்க. உங்க பார்முலா தான்.. :)

    நல்ல வந்தது .. அதுனால தான் பதிவா வந்தது.. இல்லைனா என்ன வந்து இருக்கும்னு உங்களுக்கே தெரியும் :) :) :)

    நீங்க அடிச்சு ஆடுங்க.



    // சமையல் தெரியும் என்பது கல்யாண மார்க்கெட்டில் எக்ஸ்ட்ரா advantage. //


    இது தான் கொஞ்சம் டெரரா இருக்கு :
    (

    இந்த பதிவு உங்களுக்கான சமர்ப்பணம் தான் :) :)


  10. SK Says:

    I had only chips. I dont eat curd.. so thats the only choice :) :)


  11. SK Says:

    சின்ன அம்மணி,

    என்ன இப்படி சொல்லிபுட்டீங்க.. கீழ கார்த்திக் சொன்ன போல உயிரோட வந்து பதிவு போட்டு இருக்கேன் :) :) :)

    கார்த்திக்,

    வாட் டு டூ.. வாட் எவெர் ஹப்பென்ஸ்.. லைப் ஹாஸ் டு கோ ஆன். :) :) :)


  12. SK Says:

    ராகவன் அண்ணா,

    நீங்க ரொம்ப பயமுறுத்துறீங்க. :) போன பதிவுல சொன்ன பதில் தான் கல்யாணம்'நு பேச்சு வந்தாலே.. சமையலுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு சூடத்தை அணைச்சு சத்தியம் பண்ணிடுவேன்.

    இது எல்லாம் இப்போ வாழ்க்கை ஓட்டுறதுக்கு :)


  13. பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், இந்த வெஜ். புலாவுக்கும், வெஜ். பிரியாணிக்கும் என்ன வித்தியாசம் ?? //

    புலாவ்ல மசாலா அதிகம் சேர்க்க மாட்டோம். ஆனா, நம்ம ஊர் பிரியாணில மசாலா வாசனை தூக்கும். இது தான் வித்தியாசம்னு நினைக்கிறேன்.

    ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போட்டோ புடிச்சு டரியல் ஆக்குவோரை தானே சமைச்சு போட்டோ புடிச்சு போட்டு'கொல்லுவோர்' சங்கம். :) //

    :)))))))))))))))

    என்னை தாக்க்குறீயா நீ. பார்த்துகிட்டே இரு கல்யாணத்துக்கப்புறம் முழுநேர சமையல்காரனா ஆகப்போற:) //

    நல்வாக்கு.



  14. ஒரு நளசக்கரவர்த்தி உதயமாகிறார் போல.

    பாராட்டுக்கள்.

    (நான் பார்சல் கேக்கலை!!)


  15. Anonymous Says:

    வேற என்ன item வேண்டும் என்று சொன்னால் உடனே receipe சொல்லப்படும். தமிழ் நாடு, கேரளா, செட்டிநாடு, நார்த் இந்தியன், சைனீஸ், ரொம்ப பட்டிகாட்டு சாப்பாட்டு, கோயம்புத்தூர் ஸ்பெஷல் எல்லாம் சொல்லித்தரப்படும்

    ஒரு விளம்பரம்தான்.......


  16. SK Says:

    விக்னேஷ்வரி,

    நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் யோசிக்கறேன். ஒரு வேலை வாடா இந்தியாவுல.. புலாவ் அப்படின்னும், நம்ம ஊரு பக்கம் பிரியாணி அப்படின்னும் சொல்லி இருப்பாங்களோ. :) :) இதுக்கு ஒரு ஆராய்ச்சி வேறையா.. :)

    அது நல்வாக்கு எல்லாம் இல்லை.. டரியல் வாக்கு :)

    தூயா,

    :) நீங்களும் ஸ்ரீமதி கூட சேர்ந்துட்டீங்களா ?? :(

    புதுகை தென்றல்,

    இப்படி சொல்லி சொல்லி தான் ரணகள படுத்து இங்கே. :(

    மயில்,

    உங்களுக்கு நேரம் இருக்கும் போது எதாவது ஸ்பெஷல் தோணிச்சுன்னா எழுதுங்க.. நானும் முயற்சி பண்ணி பாக்குறேன்.


  17. // SK said...

    ராகவன் அண்ணா,

    நீங்க ரொம்ப பயமுறுத்துறீங்க. :) போன பதிவுல சொன்ன பதில் தான் கல்யாணம்'நு பேச்சு வந்தாலே.. சமையலுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு சூடத்தை அணைச்சு சத்தியம் பண்ணிடுவேன்.

    இது எல்லாம் இப்போ வாழ்க்கை ஓட்டுறதுக்கு :)
    April 21, 2009 12:10 PM //

    உங்க கல்யாணத்துக்கு, உங்களுடைய இந்த பதிவுகளையெல்லாம், ப்ரிண்ட் எடுத்து, அழகா தொகுத்து, பைண்ட் பண்ணி பிரசண்ட் பண்ணலாம் என்று இருக்கின்றேன்.

    எழுதினவன் கை எப்படி சும்மா இருக்க்காதோ, அது போல சமைச்சவன் கையும் சும்மா இருக்காது. கை சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது. இதுல உப்பு கம்மி, அதுல புளி கம்மி.. இப்படி பண்ணனும் அப்படின்னு எதாவது டிப்ஸ் தரேன்னு சொல்லி மாட்டிகிவீங்க..


  18. Anonymous Says:

    //கீழ கார்த்திக் சொன்ன போல உயிரோட வந்து பதிவு போட்டு இருக்கேன் :) :) :)
    //

    நல்லவேளை கார்த்திக் எனக்கு அப்பறம் பின்னூட்டம் போட்டார். இல்லாட்டி 'மேல' கார்த்திக் சொன்னதுன்னு ஏடாகூடமா இல்ல சொல்லீருப்பீங்க :)


  19. SK Says:

    ராகவன் அண்ணா, ஏன் உங்களுக்கு இந்த கொல வெறி.. :)

    ஆனா அனுபவங்கள் தெரியுது உங்க வார்த்தைல :) :)

    சின்ன அம்மணி,

    எடக்கு மடக்க யோசிக்கரீங்களே :) :) கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்


  20. என்னாதிது?உப்புமா மாதிரில்ல இருக்கு....


  21. சரி....taste ஆ இருந்ததா?


  22. SK Says:

    சசி, இப்படி சாச்சு புட்டீங்களே.. :) :)

    பரவா இல்லாம வந்திச்சு :)


  23. நான் வெஜ் புலாவ், வெஜ் பிரியாணி கேள்விப்பட்டு, சாப்பிட்டும் இருக்கேன்

    ஆமா, இது என்ன

    போட்டோ, வெஜ் உப்புமா மாதிரியே இருக்கே

    டரியல் ஆனது நீங்கதான் போல...


  24. அட.. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கே. இன்னைக்கு நானும் முயற்சி பண்ணிடறேன். :))

    உங்க மெயில் ஐடி குடுங்க. கைவசம் ஏகப் பட்ட சாதம் வெரைட்டிகள் ரெசிபி இருக்கு. எல்லாம் ரொம்ப சுலபமானது தான். :)


  25. SK Says:

    அமித்து அம்மா, நீங்களுமா. :(

    இதுக்காகவே தாஜ் லெவலுக்கு ஒரு நாள் செஞ்சு படம் புடிச்சு போடறேன் பாருங்க. :) :)

    வாங்க சஞ்சய்,

    ஈமெயில் friends.sk@gmail.com


  26. அண்ணே கொஞ்ச நாளா இங்கிட்டு வராமப் போய்ட்டேன்.கோவிக்காதீங்க. இனிமே மீ த ரிப்பீட்டு இங்க. ஒ.கே.

    நல்லா சாப்புட்டு உடம்பத் தேத்திக்கங்க

    :))


  27. SK Says:

    அண்ணே .. நீங்க பிசின்னு தெரியும்னே .. பிரச்சனை இல்லை.. :)


  28. Unknown Says:

    சமையல் எல்லாம் செய்ய ஆரம்பிச்சாச்சா?? வாழ்த்துகள்.. :))
    ஆனா, ஏன் இவ்ளோ லேட்டா?? :))



  29. SK Says:

    என்னது அம்மணி லேட் ??


  30. Unknown Says:

    // SK said...
    என்னது அம்மணி லேட் ??//

    ஜேர்மன் போயி அஞ்சு வருஷம் ஆச்சில்ல?? இப்போ தான் கொஞ்சமா சமைக்க கத்துக்கிறீங்கலான்னு கேட்கறேன்... :))


  31. SK Says:

    வெஜ். புலாவ் செஞ்சது இதான் மொதோ தடவை :)

    கஷ்டம்னு நினைச்சு முயற்சி செஞ்சது இல்லை :)


  32. Unknown Says:

    ஓஓ அப்போ ஓகே :))


  33. Deepa Says:

    வெஜ் பொங்கல், சாரி புலாவ் ”பார்க்க” அழகா இருக்கு!


  34. SK Says:

    இது என்னடா உன் சமையலுக்கு வந்த சோதனை.. ஒருத்தங்க உப்புமா சொல்றாங்க.. ஒருந்தங்க பொங்கல்கறாங்க .. வெயிட் அண்ட் சி... இதுக்காகவே பொல பொலன்னு புலாவு பண்ணலை.. :)

    இதுல பார்க்க அப்படின்னு அழுத்தி வேற சொல்றீங்க..


  35. மிகவும் அருமை