SK
நான் வெளிநாட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆக போகுது. வந்த புதுசுல யாரோடையோ சேர்ந்து இருக்கணும், சேர்ந்து சமைச்சு சாப்பிடனும் அப்படிங்கற எண்ணம் எல்லாம் போய்டிச்சு. ஏன்னா என்னோட அனுபவம் அப்படி. தனிமை பழகிக்கிட்டேன். இப்போ வேற இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

நான் தங்கி இருக்கற விடுதில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. எல்லாரோடையும் பேசுவேன். ஆனா இந்த சேர்ந்து தங்கறது, சமைக்கறது இதுக்கு எல்லாம் ரொம்பவே அலர்ஜி. என்னோட அலைவரிசல் ஒத்து வராதுன்னு ஒரு எண்ணம். அது தான் உண்மையும் கூட. இதுனால எனக்கு ரொம்ப 'நல்ல' பேரு எல்லார்கிட்டயும் இங்கே. :).எனக்கு ஒருத்தருக்கு சமைக்கறதே பெரும் பாடு. என்னோட டைமிங்கும் ரொம்ப கஷ்டம். அப்படியே பழகியும் போச்சு.

நான் எப்போதும் ஆண்டவன் கிட்டே வேண்டுறது ஒண்ணே ஒண்ணு தான். என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது. நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.
இவரு இந்தியாவுல இருந்து நேரடியா வரலை, ச்விடன்ள ஒன்றரை வருடமா இருந்து இருக்காரு. அதவாது அவருக்கு வெளிநாடு புதுசு கிடையாது. வந்த மொதோ நாளே சேர்ந்து தங்கலாமா அப்படின்னு கேட்டாரு. இல்லை சாரு எனக்கு ஆவாது அப்படினேன். சரி சேர்ந்து சமைக்கலாம் அப்படினாறு. இல்லை அண்ணேன் எனக்கு அது ஒத்து வராது அப்படினேன். இதுலையே பாதி மூஞ்சி தொங்கி போச்சு. ஆனா கூட்டிகிட்டு போய் கடை எல்லாம் சொல்லி கொடுத்தேன், எல்லாம் எங்கே என்ன வாங்கனும்னு எல்லாம் சொல்லிட்டேன்.


இப்போ ஒரு வாரமா என்ன நடக்குதுன்னா அண்ணே, உண்ணாவிரதம் இருக்கற மாதிரி ஒரு பீலிங். ஒண்ணு சாப்டாம தூங்குறாரு, இல்லை வெறும் ஊறுகா சாதம், தயிர் சாதம்னு சாப்பாடு போகுது. இப்படி தான் எப்போதும் சாப்பிடுவாரா இல்லை இங்கே வந்து தான் இப்படியான்னு தெரியலை. எது எப்படியோ எனக்கு இது அனாவசியமான விஷயம்.

என்னால இதை பாத்திட்டு வாய்யான்னு தினம் சமைச்சு போடவும் முடியலை (முடியாது), சரி என்னவோ பண்றாருன்னு விட்டுட்டு என் வேலைய பாக்க மனசு கேக்க மாட்டேங்குது. முடியலை. தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு போகுது. எனக்கு இது எல்லாம் தேவையா. சும்மா சிவனேன்னு இருந்தேன்.. :(

நான் என்ன பண்றது மக்கா ??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னோட போன பதிவை பாத்திட்டு ஒரு நண்பன் கேட்டான். என்னடா பதிவு போட்ட உடனே பத்து பேரு வந்து பாத்து பதில் போட்டு இருக்காங்க அப்படின்னு.

நான் சொன்னேன், (தலைவர் ஸ்டைல்ல படிக்கவும்) 'தம்பி, எல்லாம் தான வந்த பின்னூட்டம் இல்லை, ஈமெயில் பண்ணி வரவெச்ச பின்னோட்டம்' அப்படின்னு :) :) (இதுவும் ஒரு விதத்துல தலைபோட ஒத்து போகுது :) :) :) )
24 Responses
  1. Anonymous Says:

    SK, என்ன ரொம்ப பொலம்பறே??


  2. Anonymous Says:

    இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

    கண்ணா, கல்யாண ஆசை வந்துடுச்சு போல இருக்கு??

    வைகாசி பொறக்கட்டும் வெயிட் பண்ணு.


  3. அப்பப்ப சமைச்சு போடு SK. ஏதாவது உதவி தேவைப்பட்டா உபயோகமா இருக்கும்:)


  4. SK Says:

    மயில், வாங்க. என்ன பதிவே காணும்.

    கல்யாண ஆசையா ஏங்க.. காமெடி பண்றீங்க. :) நான் இன்னும் சின்ன கொழந்தைங்க. :)

    வித்யா, நம்ம மக்களை பத்தி உங்களுக்கு தெரியாதா. நான் அப்போ அப்போ சேர்ந்து சாப்பிடறதுக்கு எல்லாம் ஓகே தான்.. :). போன வாரம் சனி கிழமை எல்லாம் வாங்க வெச்சிட்டு, சரிப்பா பாத்துக்கோ நான் கெளம்புறேன் அப்படின்னேன்.., 'எங்க போறேன்னு கேட்டவன்.. ', 'யுனிவெர்சிட்டி' அப்படின்னா ஒடனே 'நானும் வர்றேங்கராறு'. 'என்னோட வேலைக்கு இவர கூட்டிட்டு போய் நான் என்ன பண்றது'. பாக்கலாம் இன்னும் என்ன எல்லாம் வர போகுதுன்னு


  5. Anonymous Says:

    உணர்ச்சிவசப்பட்டு மூணு பதிவு போட்டமில்ல. வந்து பாருங்க.


  6. SK Says:

    அதை தான் படிச்சிட்டு இருக்கேன் :)


  7. RAMYA Says:

    S.K. ஏம்பா ரொம்ப கஷ்டபடரீங்களா
    சீக்கிரம் இந்திய வந்திடுங்க.

    //
    கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன்
    //

    அதுசரி இந்து கொஞ்சம் அம்மாகிட்டே சொல்லி யோசிக்க வைக்கணும்
    S.K. :))


  8. RAMYA Says:

    //
    கல்யாண ஆசையா ஏங்க.. காமெடி பண்றீங்க. :) நான் இன்னும் சின்ன கொழந்தைங்க. :)
    //

    என்னாது சின்ன குழந்தையா??

    அப்போ பல்லை தட்டிட்டு தொட்டிலே போட்டு
    குழந்தையை தூங்க வைக்கலாமா??

    இதையும் அம்மாகிட்டேதான் சொல்லணும் :-)


  9. RAMYA Says:

    சீக்கிரம் படிச்சுட்டு வந்தாதான் கல்யாணம் எல்லாம் பண்ண முடியும்
    அதுக்காக இப்படி எல்லாம்........

    ஆனாலும் அந்த எதிர் வீட்டுக்காரரை பார்த்தல் கொஞ்சம் பாவமா இருக்கு S.K. அப்பப்ப ஏதாவது கொஞ்சம் கொடுக்கலாம் இல்லையா :))

    அதெ சாப்பிட்டு அவருக்கு ஏதாவது ஆகிப் போய்டப் போகுது

    இதுக்குதான் சொல்லறேன், நாங்க "என் சமயலறையில்" ப்லாக் எழுதறோம் இல்லையா??

    அதெ அந்த நண்பரை படிக்கச்சொல்லுங்கள். அதிலிருந்து ஏதாவது தேறுதான்னு பாக்கச் சொல்லுங்கள்.

    விளம்பரம் அய்யய்யோ இல்லேப்பா:) ஒரு உதவிதான்........


  10. SK Says:

    ஐயயோ அம்மா கிட்டே சொல்லிடுவேன் சொல்லியே பயமுறுத்துறீங்களே :( :(

    நான் சின்ன கொழந்தைதாங்க. எங்க அம்மா கூட அப்படி தான் சொல்லுவாங்க :) :)

    அவருக்கு தமிழ் படிக்க தெரியாதுங்கோ. நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து வந்து இருக்காரு :) :)


  11. //நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.//

    ஆஹா...ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே.அப்டீன்னா ஒவ்வொரு ஆப்பையும் ஒவ்வொரு பதிவுல போடுங்க.நாங்க படிக்கிறோம்.எங்களுக்கும் பொழுது போகுமில்ல...


  12. SK Says:

    உங்களுக்கு பொழுது போக நான் வாங்குற ஆப்பா ??

    எழுதிடலாம் :(


  13. நடக்கட்டும்.

    நல்லா சமைக்க கத்துகுங்க. அப்படியே காய்கறி நறுக்குவது எப்படி, துணி துவைப்பது எப்படி, பாத்திரங்கள் கழுவி, சரியாக அடுக்கி வைப்பது எப்படி என்று கத்துகிடுங்க.

    என்னதான் இப்ப சின்னப் பையனா இருந்தாலும், வளர்ந்துதானே ஆகணும். அப்ப கல்யாணம் நடக்கும் இல்லையா? அப்ப இதெல்லாம் ரொம்ப வசதியா இருக்கும்.


  14. SK Says:

    ராகவன் அண்ணே, எனக்கு சமையல் கட்டே தெரியாதுன்னு சொல்லி தான் எதுவுமே செய்யப்படும். :) நீங்க வேற பெரிய பெரிய லிஸ்ட் சொல்லி பயமுறுத்துறீங்க :)


  15. :) தர்மசங்கடங்கறதே தர்மம் ஞாயமெல்லாம் பாக்கறதால தானே...மனசக் கல்லாக்கிங்க....


  16. நானும் உங்கள் கட்சி தான் எஸ்கே. எனக்கும் தனிமை தான் ரொம்ப பிடிக்கும். அப்டிதான் இருக்கேன். :)


  17. SK Says:

    வாங்க மு. க. , அதுக்கு தான் முயற்சி பண்றேன். :) பாக்கலாம்.

    வாங்க சஞ்சய், தனிமை புடிக்கும்னு கூட சொல்லலை.. நம்ம மக்கள் நம்மை ரொம்ப கஷ்டபடுத்திடறாங்க.


  18. Unknown Says:

    ஐயோ பாவம்.. :(( அவருக்கும் சமைச்சு போட்டா குறைஞ்சா போயிடுவீங்க?? ;)) நீங்க மட்டும் வெஜ் புலாவ் செஞ்சு சாப்ட்றீங்க?? அத பதிவா வேற போடறீங்க?? ;)))


  19. SK Says:

    ஒரு நாள் சரி அதுக்குன்னு தினம் சமைச்சு போட முடியுமா ?? கிண்டலா பண்றீங்க.. :)


  20. Unknown Says:

    வெஜ் புலாவ் தந்தீங்களா அவருக்கு?? ;)) Me the 20 :):)


  21. //என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது//

    அவரும் அதையேதான் வேண்டினாராம். ;-)


  22. SK Says:

    அமரபாரதி

    அவரும் அப்படியே நினைச்சு என்னை விட்ட ரொம்ப சந்தோஷ படுவேன் :) வருகைக்கு நன்றி.

    ஸ்ரீமதி, வெஜ் புலாவ் எல்லாம் தரலை. என் ரூம்க்கு முன்னாடி வந்துட்டார்னு அவருக்கு தண்டனை எல்லாம் தர முடியாது இல்லை. :)


  23. ம்ம்ம்...தனிமை பிடித்தவங்களுக்கு தர்மசங்கடம்தான்....
    அன்புடன் அருணா


  24. SK Says:

    வாங்க அருணா. தனிமை புடிச்சு இருக்குன்னு சொல்ல மாட்டேன். அப்படி என்னையே பழக்கி வெச்சு இருக்கேன். வாங்கின அடி அப்படி :) :)