SK
என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.

இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.

2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.

கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.

1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)

அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

2. Sexual abuse.

அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

3. Emotional abuse and Girl child neglect

அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.

இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.

நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.

பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.
19 Responses
  1. முழு அறிக்கையும் படிக்கிறேன்.


  2. தேவையான பதிவு எஸ்கே..

    நம்பிக்கையுடன்


  3. SK Says:

    நன்றி வித்யா. நேரம் இருக்கும் போது படிங்க. அதில் பல விடயங்கள் பகிர்ந்து கொள்ள பட்டு உள்ளன.

    நன்றி நர்சிம். நம்பிக்கை நிச்சயம் உண்டு.


  4. download செஞ்சிட்டேன்.. படிச்சிட்டு வரேன் சகா


  5. RAMYA Says:

    இப்போ அவசரமா உள்ளேன் முழுவதும் படிச்சுட்டு சொல்லறேன்!!


  6. Unknown Says:

    படிச்சிட்டு சொல்றேன்...

    //narsim said...
    தேவையான பதிவு எஸ்கே..

    நம்பிக்கையுடன்//

    வழிமொழிகிறேன்...


  7. பயம் தேவை இல்லை எஸ்.கே ...கவனம் கலந்த நம்பிக்கை மட்டுமே மிகத்தேவை .குழந்தைகள் மீது அக்கறை ...பெற்றோரின் தனிமை கெடுகிறதென்ற எண்ணத்தை விட்டு விட்டு கூடுதல் கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு இதைப் போன்ற விரும்பத் தகாத விடயங்களை தவிர்க்கலாம்.


  8. ? Says:

    படிச்சிட்டு தமிழ்மணம்-ஓட்டும் போடுங்க சாமியோவ்! மத்தவங்களும் படிக்கட்டும் சாமியோவ்!!


  9. மிகமிக அவசியமான பதிவு .

    இதை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா???

    உங்களின்பதிலுக்காக காத்திருக்கிறேன்.


  10. SK Says:

    புதுகை தென்றல், அந்த அளவுக்கு இந்த பதிவு தகுதி என்றால் நிச்சயமாக.


  11. SK Says:

    கார்க்கி, நேரம் இருக்கும் போது படிங்க. ஆனா அது 207 பக்கம் படிப்பது உங்களை பொறுத்து.

    ரம்யா, நேரம் இருக்கும் போது படியுங்கள்.

    ஸ்ரீமதி, நீங்க பதிவை முழுசா படிச்சாலே போதும் அம்மணி. :)

    மிசர்ஸ். தேவ், இதை குறித்த விழுப்புணர்வு நமது பெற்றோர்கள் இடத்தில் அறவே இல்லை என்பது தான் என் பயமே. சில சமயம் நமக்கு தெரியாமலேயே கண்டிப்பு என்கிற பெயரில் இதில் ஏதேனும் ஒன்றை செய்வோமோ என்ற எண்ணம் என்னில் இருக்கிறது. வருகைக்கு நன்றி.

    நந்தவனத்தான், நன்றி.


  12. ஓஓஓவ்! அதிர்ச்சியளிக்கிறது எஸ்கே...

    முழு அறிக்கையையும் நாளை படிக்கிறேன்.

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.


  13. எஸ். கே.

    மிகவும் தேவையான ஒரு பதிவு.

    ஆய்வறிக்கையின் ஒரு சாரம்சத்தை படிக்கும் போது மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது.

    விழிப்புணர்வு கண்டிப்பாக பெற்றோர்களுக்கு தேவை....

    ஆய்வறிக்கையை படிக்கிறேன்.

    நன்றி எஸ்.கே.


  14. SK Says:

    பரிசால், நன்றி வருகைக்கு. நேரம் இருக்கும் பொது பொறுமையா படிங்க.

    அமித்து அம்மா, நன்றி. :)


  15. RAMYA Says:

    இந்தப்பதிவு மிகவும் தேவையானது, அவசியமான ஒன்று.

    படித்து விட்டு மிகவும் வேதனை அடைந்தேன் S.K.

    குழந்தைகளின் மீது அன்பு மட்டும் இருந்தால் போதாது.

    அக்கறையும் தேவை. என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை
    மனது கனக்கின்றது.


  16. இத நான் ஏற்கனவே படிச்சிட்டேன்.ஆனா கமெண்ட் தான் போடாம விட்டுட்டேன்.


  17. எல்லா பெற்றோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது!!!இது போன்ற விஷயங்களை படித்தாலே மனதுக்குள் ஏதோ ஒரு திக் திக்!!!குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்கப் போகிறோமென்று ஒரு பயம் வந்து தானாக ஒட்டிக் கொள்கிறது...


  18. SK Says:

    சசிரேகா ராமசந்திரன், இந்த பதிவு தெரிந்து கொள்ள வேண்டியது அப்படி என்பதை விட, இது போன்ற விடயங்களை கையாள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் ஏன் கருத்து.

    ரம்யா, மேலே சொன்னது தான் என்னோட எண்ணம் இந்த பதிவு எழுதும் போது.


  19. nila Says:

    அவசியமான பதிவு SK... முதலில் படித்தவர்களிடையே விழிப்புணர்வு தேவை