SK
'டேய் வாடா, கிளாஸ்'கு லேட் ஆச்சு'

'இருடா, இட்லி வர்ற இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமாம்., நீ வேணும்னா போ, நான் அப்பறம் வர்றேன்'.

'இந்த இட்லிக்காக கிளாஸ் கட் அடிக்கிறியா'.

இது எனக்கும் இட்லி'கும் ஆன பந்தத்தை பற்றி சொல்லும். இட்லியும் தோசையும் காலை சாப்பாட்டுக்கு இருக்கற அப்போ எல்லாம் முதல் வகுப்புக்கு ஒண்ணு லேட்டா போவேன் இல்லை போகவே மாட்டேன். கல்லு போல இருக்கற ஹாஸ்டல் இட்லியே இப்படின்னா, பூ போல இருக்கற அம்மா செய்யற இட்லி எப்படின்னு நான் சொல்லவே வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளி நாடு வந்த அப்பறம் நாம மொதல்ல மிஸ் பண்றது நம்ம சாப்பாடு தான். என்ன தான் சாதம் சாப்பிட்டாலும் இட்லி தோசைக்கு ஈடு வரவே வராது.

தலைவனை பிரிஞ்சு தலைவி ஏங்குவது போல (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ) நமக்கும் இட்லிக்கும் ஆன அந்த ஒரு பிரிவு ரொம்ப வாட்டிகிட்டே தான் இருக்கும்.

சரி, போய் ஹோட்டல்ல சாப்பிடலாமேன்னு தானே கேக்குறீங்க. அமெரிக்காவுல இருக்கற போல அதிக இந்திய உணவு விடுதிகள் குறிப்பாக நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு வகைகள் இங்கே கிடைக்கறது இல்லை. அதையும் மீறி கிடைச்சாலும், அஞ்சு ஈரோ, பத்து ஈரோ கொடுத்து ரெண்டு இட்லி சாப்பிட மனசு வர்றது இல்லை.

இதுக்கு ஒரே வழி தன் கையே தனக்கு உதவி தான். ரெண்டு வருஷம் முன்னாடி இந்திய வரும் போது மிக்ஸ்சி வாங்கிட்டு வந்து வெச்சிட்டேன். இந்த தடவை இந்திய வரும் போது மறக்காம, மைக்ரோவேவ் இட்லி ப்ளட் வாங்கிட்டு வந்துட்டேன்.
அதோட கடை திறப்புவிழா போன வாரம் தான் நடந்திச்சு. படங்கள் உங்களுக்காக இங்கே. உங்கொப்புரானே மாவுல இருந்து எல்லாம் நானே அரைச்சு இட்லி வரைக்கும் எல்லாம் நானே செஞ்சது. மொதோ மொரையே வெற்றி வெற்றி வெற்றி. 52 இட்லி மூணு பேரு ஒரு வேலை சாப்பாடுக்கு முடிச்சோம். (இட்லி அளவு கொஞ்சம் சின்னது தான், இருந்தாலும்.........).








இன்னைக்கு வேற வித்யா, ஹோட்டல் பத்தி பதிவு எழுதி என்னை கிளப்பி விட்டுடாங்க. என்ன தான் இருந்தாலும் அவன் அவனுக்கு அவன் அவன் சமையல் தான் அமிர்தம் (இப்படி சொல்லி மனசை தேத்திக்க வேண்டியது தான்).

இந்த இட்லி ப்ளேட் பற்றிய மேலதிக விவரம் அறிய இங்கே பார்க்கவும். இது எல்லாம் பெரிய அளவு இட்லிக்கு. சின்ன அளவு தான் நான் செஞ்சது. பெரிய அளவு விலை முப்பது டாலர் போட்டு இருக்கு. நான் திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடைல நூத்தி நாப்பது ரூபாய்க்கு வாங்கினேன். வேற எங்கயும் விசாரிச்சா பெரிய இட்லி ப்ளேட் பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இருக்கு.

யாருப்பா அங்கே இருந்து 'தம்மா தூண்டு இட்லிக்கா இம்புட்டு பெரிய பதிவுன்னு கேக்குறது'. அஞ்சு ரூபா பத்து ரூபா கொடுத்து இட்லி சாப்டா அதோட மதிப்பு மரியாதை தெரியாது மக்கா உங்களுக்கு எல்லாம். :) :)

கடைசியா எல்லாருக்கும் சொல்ல விரும்புவது

நாங்களும் இட்லி சாப்பிடுவோம்ல (அவ்வ்வ்வ்வ்)

அளவில்லா இட்லியுடன்,
எஸ். கே.
23 Responses
  1. hee

    me the first

    தலைவனை பிரிஞ்சு தலைவி ஏங்குவது போல (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )
    ஓஹ்
    இப்படியெல்லாம் வேற ஏங்க ஆரம்பிச்சிச்சாச்சா.

    அடுத்தது உங்களுக்கு ஸ்டார்ட் செய்ய வேண்டியதுதான்.

    மொதோ மொரையே வெற்றி வெற்றி வெற்றி.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    அளவில்லா சாம்பாருடன்


  2. நீயே செஞ்சு சாப்பிட்டு இவ்ளோ நேரம் ஒன்னும் ஆகலையா. ரைட்டு. மிஷன் சக்சஸ்ன்னு காலர தூக்கிவிட்டுக்கோ:)


  3. //ரைட்டு. மிஷன் சக்சஸ்ன்னு காலர தூக்கிவிட்டுக்கோ:)//

    சமைக்கும் போது அவர் சட்டை போட மாட்டாருங்க..


    எப்படி இருக்கிங்க சகா? இட்லிய பார்த்த லைட்டா டவுட் வருதே


  4. Anonymous Says:

    முதலில் நன்றி என் பதிவுக்கு பின்னுட்டம் இட்டதுக்கு.

    கார்க்கி சொன்ன பொண்ணு பாக்கற பதிவர் நீங்களா?

    முக்கியமான விஷயம், சுலபமா சமையல் சொல்லிதரட்டுமா? தனி புக் போடலாம்னு இருக்கேன். பாச்சுலர் கிச்சன் ... தலைப்பு நல்ல இருக்கா?


  5. SK Says:

    அமித்து அம்மா,

    அப்படியே இங்கே சாம்பார் கொஞ்சம் பார்சல் பண்ணிடுங்க :)

    வித்யா,

    இருங்க. இந்த ஈஸ்டர் வீக் எண்டு மசால் தோசை செய்யலாம்னு இருக்கேன். :) உங்களுக்கு என் சமையல் நக்கலா போச்சு.

    கார்க்கி,

    நல்ல இருக்கேன். இட்லி சாப்பிட்டு சேதாரம் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதான் ரெண்டு வாரம் கழிச்சு பதிவு போடறேன்.

    மயில்,
    அய்யயோ அவரு பிரபல பதிவர்னு சொல்லி இருப்பாரு. நான் பதிவர் கணக்குலையே வர்றது இல்லீங்க.

    எழுதுங்க. அப்போ அப்போ அதையும் முயற்சி பண்ணி பாத்துடறேன். :)


  6. இட்லிக்கு ஒரு பதிவு போட்டிருக்கீங்க.பதிவு நல்லா இருக்கு.

    எனக்கும் இட்லிக்கும் ஒத்தே வராது.
    அம்மா டீவி பாக்கணும், பாட்டிக்கு சீக்கிரம் டிபன் ஆகணும்னு தினமும் அடுக்கு தீபாராதனையில் இட்லி ஏத்திடுவாங்க. :((

    தினம் தினம் இட்லி என்பதால் எனக்கு அதன் மேல் ஒரு வெறுப்பே வந்திடிச்சு.

    மொறு மொறுன்னு தோசை போட்டு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். அம்மா அதிசயமா தோசை செய்யும் நாட்களில் மேடைக்கு பக்கத்திலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு சுடச்சுட தோசை சாப்பிடுவேன். :))


  7. பாச்சுலர் கிச்சன் ... தலைப்பு நல்ல இருக்கா?//

    தலைப்பு சூப்பருங்கோ.


  8. ம் சூடா இட்லி+தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேசன்

    இன்னும் நிறைய சமைக்க வாழ்த்துக்கள் :)


    இந்த பதிவுல இப்படிதான் வாழ்த்த முடியும்.


  9. SK Says:

    தென்றல்,

    எனக்கு தோசை இட்லி ரெண்டும் எதுனாலும் சரி. அடுத்த வாரம் மசால் தோசை தான் பிளான். :)

    தா. பி.

    ஏங்கோ, நல்ல சாப்பிட வாழ்துகிறேன்னு கூட சொல்லலாமே :) அதுக்கு எல்லாம் தோனாதே :)


  10. சாம்பாரும் + சட்னியும்

    இட்லி தலையில கொட்டி அப்படியே அடிச்சா

    ஆஹா! என்ன டேஸ்ட்டு ...


  11. kanagu Says:

    super post nga na..

    idli enoda favorite illa.. enaku eppavume dosai than..
    ennavo America la athu kedaikum ithu kedaikum paanga.. aana paarunga idli kedaika maatenguthu.. :P


  12. இட்லி சூப்பர் SK. நீங்க எங்க இருக்கீங்க ஐரோப்பால ? இட்லி சூப்பர். நீங்க எங்க இருக்கீங்க ஐரோப்பால ?


  13. ச்சே பாவம்ங்க நீங்க. இன்னும் நிறைய சமைச்சு, சாப்பிட்டு வயித்துக்கு ஒத்துக்காம போக வாழ்த்துக்கள். ;)
    சீக்கிரமே நானும் சாப்பாடு பத்தின பதிவு போடுறேன்.


  14. SK Says:

    ஜமால், நீங்க வேற அதை எல்லாம் சொல்லி நினைவு படுத்தாதீங்க. வருகைக்கு நன்றி.

    கனகு, அமெரிக்க பரவா இல்லை. ஐரோப்பா ரொம்ப மோசம் :(
    வருகைக்கு நன்றி.

    மணிகண்டன், டாங்க்சுங்கோ. ஜெர்மனி தலை.

    விக்னேஷ்வரி, எங்க உங்களுக்கு இந்த கொலை வெறி. கொஞ்ச நஞ்சம் இருக்கறதையும் கெடுத்துடுவீங்க போல. போடுங்க சீக்கரம், உங்க வீட்டுக்கார அய்யா எப்படி எல்லாம் கஷ்ட படுறாரு சொல்லி நாங்களும் தெரிஞ்சுக்கிறோம் :)


  15. Thamira Says:

    கலக்கல் பதிவு எஸ்கே.! (உங்களை கேட்காமலே தெரிஞ்சே உங்க பதிவோட தலைப்பை சுட்டுட்டேன் பாஸ்..)


  16. SK Says:

    வாங்க ஆதி அண்ணே, (எதை சொல்றீங்க புரியலை ??? )


  17. Thamira Says:

    பொலம்பல்களை புலம்பல்கள் ஆக்கிட்டேன்ல அதச்சொன்னேன்.!


  18. Truth Says:

    //தலைவனை பிரிஞ்சு தலைவி ஏங்குவது போல (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ) நமக்கும் இட்லிக்கும் ஆன அந்த ஒரு பிரிவு ரொம்ப வாட்டிகிட்டே தான் இருக்கும்.

    நாம எல்லாம் ஒரே கட்சி தான் பாஸ்

    //யாருப்பா அங்கே இருந்து 'தம்மா தூண்டு இட்லிக்கா இம்புட்டு பெரிய பதிவுன்னு கேக்குறது'. அஞ்சு ரூபா பத்து ரூபா கொடுத்து இட்லி சாப்டா அதோட மதிப்பு மரியாதை தெரியாது மக்கா உங்களுக்கு எல்லாம். :) :)

    ரொம்பச் சரி ரொம்பச் சரி :)

    இது நம்ம கதை. கதை எல்லாம் ஒன்னு தான். ப்ளாட் (இது டூஊஊ மச் தான்) தான் வேர :-)


  19. SK Says:

    ஆதி, அதை சொன்னீங்களா. சரி.

    Truth, படிக்கறேன். பதிவு ரொம்ப பெருசா இருக்கு. :) வருகைக்கு நன்றி.


  20. இட்லி செய்து சாதனை செய்த உங்களுக்கு,அதை விட நீங்களே சாப்பிட்டு உயிருடன் இருப்பதற்கு,


  21. Anonymous Says:

    நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு


  22. வெளி நாடு வந்த அப்பறம் நாம மொதல்ல மிஸ் பண்றது நம்ம சாப்பாடு தான். என்ன தான் சாதம் சாப்பிட்டாலும் இட்லி தோசைக்கு ஈடு வரவே வராது.

    கஷ்ட்டப்பட்டு இட்லி செய்து
    இஷ்ட்டப்பட்டு இனிமையாய் சாப்பிட்டிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..


  23. SK Says:

    Raja Rajeshwari, Nichayama. athuvum south indian varieties kidaikarathu romba kashtam. :) Thanks for your comment.