SK
என்னுடன் கல்லூரியில் சேர்ந்து படித்த சில நண்பர்களும் சரி, பள்ளில சேர்ந்து படித்த சில நண்பர்களும் என்னை விட அதிகம் மதிப்பெண் வாங்கியவர்கள் உண்டு. மேலும் நல்ல திறமைசாலிகள், படிப்பு மட்டும் நில்லாமல் கலை, எழுத்து, நாடகம் அனைத்திலும் கலக்கியவர்கள் உண்டு.

இது போல நல்ல மூளை இருந்தும் மேல் படிப்பு படிக்காதவர்கள் அதிகம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்றவர்கள் தான் அதிகம். அதிலும் சிலர் துறை சார்ந்த வேலை கிடைக்காமல், ஐ டி அல்லது மார்க்கெட்டிங் துறை வேலைக்கு சென்றவர்களும் உண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், மேல் படிப்பு பற்றிய சரியான விவரம் தெரியாமல் இருத்தல் போன்றது சொல்லலாம்.

இங்கு நான் வெளி நாடு என்று சொல்வது ஒரு வாய்ப்பு என்கிற அர்த்தத்தில் எடுத்து கொள்ளவும். வெளி நாடு செல்வது தான் சிறந்தது என்கிற வாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒரு வேலை நான் படிப்பு முடிந்து இந்திய திரும்புகையில், நான் அவர்களை ஒத்து பார்க்கும் போது சம்பளத்தில் அதிகமோ, குறைவோ, அதே அளவோ வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. மீண்டும் நான் இங்கே சம்பளம் என்று சொல்வது ஒரு அளவுகோல் அவ்வளவே.

என்னை ஒத்த தலைமுறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனக்குமே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்றால், என்னையும் என் மூத்த தலைமுறையையும் நான் எப்படி பார்க்க வேண்டும்.

அதாவது என் தந்தை தனது முப்பதாவது வயதில், தமிழ்நாட்டு எல்லையை விட்டே தாண்டியது இல்லை அல்லது இருபது ஆயிரம் சம்பளம் வாங்க வில்லை அல்லது அறுபது வயதானாலும் இப்போதும் இருபது ஆயிரம் தான் சம்பளம் வாங்குகிறார்னு நான் அவரை கேலி செய்தல் முறை ஆகுமா ??

அப்படியும் இல்லை என்னோட பள்ளி ஆசிரியரைவிடவும், கல்லூரி பேராசியரைவிடவும் ஒரு நாள் நான் சம்பளம் அதிகம் வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்காக என்னை அவருடன் கம்பேர் செய்து பேசுதலும் எந்த விதத்தில் சரி ஆகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த முறை, சூழல், சரியான வழிநடத்துதல் இல்லாமை, அவர்கள் வளர்ந்த காலம் இது போல எத்தனையோ காரணங்கள் உண்டு.

இதை எல்லாம் இப்போ எதுக்கு சொல்றே அப்படின்னு யாருப்பா அது கேக்குறது. இளையராஜாவையும் ரஹ்மானையும் கம்பேர் செய்து பேசுறவங்களுக்கு அப்படின்னு நீங்களே நினைச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை மக்கா :)

ஆஸ்கார் புகழ் ரஹ்மானுக்கு என்னுடைய மனாமர்ந்த வாழ்த்துக்கள். ரசூல் குட்டி அவர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும், வலைமாமணி விருது (அதாங்க தமிழ்மண விருது ) பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
எஸ். கே.
11 Responses



  1. சரியான சமயத்தில் வந்த சரியான பதிவு.

    சிம்ப்ளி சூப்பர்...

    //என்னை ஒத்த தலைமுறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனக்குமே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்றால், என்னையும் என் மூத்த தலைமுறையையும் நான் எப்படி பார்க்க வேண்டும். //

    நிச்சயமாக யாரையும் யாருடனும் கம்பேர் செய்து பார்க்க கூடாது.


  2. //ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த முறை, சூழல், சரியான வழிநடத்துதல் இல்லாமை, அவர்கள் வளர்ந்த காலம் இது போல எத்தனையோ காரணங்கள் உண்டு.//

    சரியா சொ,ல்லி இருக்கிங்க எஸ்.கே. நல்ல பதிவு :)


  3. நல்ல பதிவு.

    அருமையான ஒப்புமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்


  4. ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சு சொல்ல வந்ததை நச்சு ந்னு சொல்லிட்டீங்க.

    நெறைய எழுதுங்க, எங்க மனசு நிறைய எழுதுங்க.


  5. SK Says:

    வித்யா வாங்க வாங்க :) இங்கே எல்லாம் போட்டியே இல்லை :)

    சகா, நிச்சயம் முயற்சி பண்றேன் :)

    ராகவன் அண்ணா, நன்றி வருகைக்கு, ஒப்பீடு நிறைய விதத்துல நம்மோட வேகத்தை கம்மி பண்ணுது அப்படிங்கறது என்னோட எண்ணம் ..

    தாரணி பிரியா, நன்றி வருகைக்கு :)

    தென்றல் அக்கா, நன்றிகோவ்வ்


  6. SK Says:

    அமித்து அம்மா,

    நன்றி மற்றும் கருத்துக்கு :)


  7. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க SK.


  8. SK Says:

    நன்றி மணிகண்டன். :)