SK
சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த பல விடயங்கள், இப்போது நடக்கும் பல விடயங்கள் கண்டு என்னோட மனச்சாட்சி என்னை பார்த்து கேட்ட கேள்விகள்ல டாப் டென் கொஸ்டின்ஸ் :) :) ( நாங்களும் எழுதுவோம்ல :) :) :) )

1. 2008la இந்தியாவுல எட்டு தடவைக்கு மேல குண்டு வெடிச்சது?? சி என் என் ல செய்தி பாத்தியே, ப்ளாக்ல பக்கம் பக்கமா எழுதினியே ?? அதுக்கு என்ன செய்யலாம், அடுத்த தலைமுறையாவது இது இல்லாம எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு ஏதாவது செஞ்சியா ?? 

2. சட்டக்கல்லூரி மாணவர்கள் அடிச்சுகிட்டாங்கன்னு அழுது பொலம்புற நீ, இதோட ஆரம்பம் எங்கே, அதுக்காக நீ என்ன செய்யலாம்னு ஏன் யோசிக்கலை ?? 

3. இப்போ வக்கீல்களும், போலீசும் அடிச்சுகறாங்க, இப்போ பொலம்பற நீ.. இத்தன வருஷமா இது உள்ளேயே இருந்து இருக்கே. அப்போ கவனிக்கலையே. ஏன் ?? 

4.  நான் கடவுள் படம் பாத்து பிச்சைக்காரங்க மேல 'உச்சு' கொட்டுற நீ, உங்க வீட்டுக்கு பக்கமே ஆயிரம் பிச்சை காரங்க இருக்கும் போது, அவுங்களுக்கு ஒண்ணுமே செய்ய தோணலையே ஏன் ?? 

5. அபியும் நானும், வாரணம் ஆயிரம் படம் பாத்து பொண்ணு மேலையும், அப்பா மேலையும் பாசம் பொங்குற உனக்கு, அவுங்க வாழ்க்கை முழுக்க பக்கத்துல இருக்கும் போது அவுங்க அருமை தெரியலையே ஏன் ?? அவ்ளோ சினிமாவும், தொலைக்காட்சியும் உன் மூளைய மழுங்க அடிச்சுடிச்சா ?? 

6. மானாட மயிலாட பாத்து நேரம் கழிக்கற நீ, உன் வீட்டு குப்பைய குப்பைதொட்டில கொட்ட நேரம் இருக்க மாடேங்குதே ஏன் ?? 

7. அடுத்த ஆட்சி கலைஞரா, அம்மாவான்னு ரொம்ப ஆராய்ச்சி பண்ற நீ, அடுத்த வருஷம் உன் வாழ்க்கைல இதை சாதிச்சு இருக்கணும்னு ஒரு குறிக்கோள் இல்லாம இருக்கோமே அது ஏன் ?? 

8. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி, கனிமொழிக்கு எம். பி. பதிவு, கயல்விழிக்கு எம். பி. பதிவி அப்படின்னு, அவரோட குடும்பத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கற நீ, உன்  வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன தேவை ( அப்பா அம்மாவுக்கு என்ன தேவை, பொண்டாட்டிக்கு என்ன வேணும், உன் பொண்ணோ/புள்ளையோ என்ன படிக்குது, எப்பட படிக்குதுன்னு   தெரிஞ்சுக்க மாட்டேங்குறியே ஏன் ??  

9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ? 

10. குசேலனும் நான் கடவுளும் மொதோ நாள் அதிக பணம் கொடுத்து படம் பாத்திட்டு விமர்சனம் எழுதனும்னு துடிக்கற நாம,  ஒண்ணாவது படிக்க கூட கஷ்டபடுற பணம் இல்லாம இருக்கற குழந்தைகளை பத்தி யோசிக்காதது ஏன் ??

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-

அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது மொக்கை மக்களுக்கு தெரியுமா?

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ்சியே, அதை இன்னைக்கு நல்ல படியா சமைக்கவாவது செலவு செஞ்சு இருக்கலாமே :) :) 

அன்புடன், 
எஸ். கே.  

பி. கு. : ரொம்ப ரொம்ப நன்றி பரிசல் :) 
21 Responses
  1. அருமையான (உருப்படியான) கேள்விகள்!


  2. உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி!

    அனானி/அதர் ஆப்ஷன் ஓப்பன் செய்யாமல் வைத்திருப்பது ஏன்?


  3. SK Says:

    புரியலை ??

    அனானி ஆப்ஷன் இல்லையா ?? நான் கவனிக்கலை ??


  4. // SK said...

    புரியலை ??

    அனானி ஆப்ஷன் இல்லையா ?? நான் கவனிக்கலை ?? //

    கவனிச்சாலும் போட வேண்டாம்.

    நாங்க எல்லாம் நொந்தது போதும்.

    யாரா இருந்தாலும் பேருடன் பின்னூட்டம் போடட்டும்.


  5. // 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ? //

    உண்மயாக சொன்னீங்களா? உங்க மனசாட்சி அப்படி கேட்டுச்சுங்களா?

    விலையை குறைத்தால், எல்லோரும் வாங்க இயலும் என்பது என் எண்ணம்.


  6. SK Says:

    வாங்க ராகவன் அண்ணா.

    அவங்களும் நாம வாங்க ஆரம்பிச்சா தானே வேலை கம்மி பண்ண முடியும் ?? :)


  7. கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும்? எனக்கு பதில் சொல்ல தெரியாதுங்கோ:))


  8. 1.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    2.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    3.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    4.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    5.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    6.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    7.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    8.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    9.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
    10.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?


  9. ithu ellaam ungkalukaana kelvi illai sagaa. engkalaukkaana kelkikal.

    comedyaa illai, seriousa thonuthu


  10. SK Says:

    வித்யா, சிவா.. வாங்க வாங்க :)

    கார்க்கி, தோணினா சரி சகா. :)


  11. narsim Says:

    no words.. good questions.. hummmmmmm


  12. இது நம்ம எல்லாருக்குமான கேள்விகள் நண்பா.. கண்டிப்பா யோசிப்போம்..


  13. நீங்க எங்களை பாத்து கேள்வி கேட்டு இருக்கிங்க எஸ்.கே


  14. உங்களோட மனசாட்சி மட்டுமில்ல எங்க மனசாட்சியும் இப்படிதான் கேக்குது
    ஆனா பதில் சொல்ல தெரிஞ்சும்

    ..............................


  15. RAMYA Says:

    ரொம்ப லேட் தாமதத்திற்கு மன்னிக்கவும் வந்தவுடனே ஒரு பதிவு, அதை படிக்க நான் இல்லே, மறுபடியும் ஒரு பதிவு
    இதுதான் உங்களோட ப்லாக் தலைப்பிலே இருக்கு சூப்பர் பொலம்பல்ஸ், என்ன புலம்பி என்ன
    ம்ம்ம் நடப்பதுதான் நடக்கும்,
    நலமா தம்பி????


  16. RAMYA Says:

    // 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ?
    //

    இது சரியான கேள்வி,
    கேக்கும் கேள்வியை பார்த்தால்
    நீங்க முதல்வர் ஆகும் வாய்ப்பு
    அதிகம் இருக்கு.

    தம்பி முதல்வரா வராதான்னு ஒரு பேராசைதான்.


  17. SK Says:

    வாங்க நரசிம்.

    கார்த்திகைப் பாண்டியன், யோசிச்சா ரொம்ப நல்லது :) நன்றி வருகைக்கு,

    தாரணி பிரியா, :) :) வருகைக்கு நன்றி.

    அமித்து அம்மா, என்னது சொல்ல தெரிஞ்சும்னு சொல்லிட்டு இப்படி இழுத்துடீங்க. சொல்லுங்க, நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவேன் இல்லே :)

    அக்கா, உங்களுக்கு தம்பி மேல ரொம்ப பாசம். அதுக்குன்னு இப்படி எல்லாம் சொல்ல கூடாது :)


  18. நல்ல கேள்விகள். கலக்கல் !!!! உருப்படியா எழுதறீங்க. இப்படியே இருப்பீங்கன்னு நம்பறேன் :-):-)


  19. SK Says:

    நன்றி கபீஷ். :) முடிஞ்சா வரைக்கும் தொடர முயற்சி பண்றேன்.


  20. இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ்சியே, அதை இன்னைக்கு நல்ல படியா சமைக்கவாவது செலவு செஞ்சு இருக்கலாமே :) :) ///

    இது சரியான கேள்வி. ;)


  21. SK Says:

    விக்னேஷ்வரி,

    எவ்வளவு கேள்வி கேட்டு இருக்கேன். அதை எல்லாம் விட்டுபுட்டு, சொ. செ. சூ. சரியா புடிச்சுடீங்க ??