SK
எல்லாருக்கும் வணக்கம்பா,

என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு எழுத கூப்பிட்ட ராப் அக்கா, தாமிரா, கயல்விழி, வருண் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஒரு சின்ன செய்தி. எனக்கு தெரிஞ்சு நான் இது வரைக்கும் அரங்குலே போய் பாத்த படம் அம்பதை விட அதிகமா இருக்க வாய்ப்பு இல்லை. ஆனா வெளிநாடு வந்த அப்பறம் இண்டர்நெட்ல எல்லாம் படமும் பாத்து இருக்கேன். இப்போ அதையும் நிறுத்தி வெச்சு இருக்கேன்.

பதில் எல்லாம் எல்லாரும் எழுதற மாதிரி ரொம்ப இன்டரஸ்டிங்கா எல்லாம் இருக்காது. ஏதோ என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ எழுத முயற்சி பண்ணி இருக்கேன்.

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியான வயது நினைவில் இல்லை. ஆனா முதல் வகுப்போ ரெண்டாம் வகுப்போ படிக்கும் போதுன்னு தோணுது.

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அரங்கத்துலே பாத்த படம் ராஜாதி ராஜா இல்லை என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. சரியா நினைவு இல்லை.

அதிகம் அரங்கத்துக்கு போய் பழக்கம் இல்லை. அப்போ எங்கே வீட்டுலே தொலைக்காட்சி பொட்டியும் கெடையாது. பக்கத்து வீட்டுலே பாப்பி அக்கான்னு அவுங்க வீட்டுலே டெக் எடுத்து போடுவாங்க. அங்கே போய் பாப்பேன். அங்கே பாத்த படம் எனக்கு நினைவு இருக்கறது 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்'. விஜயகாந்த் படம்னு நினைக்குறேன்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

குசேலன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இப்போ ரொம்ப நாள் கழிச்சு துரைன்னு நம்ம அர்ஜுன் அண்ணே படம் இண்டர்நெட்ல பாத்தேன்.

என்ன உணர்ந்தேனா ஏன்டா பாத்தேன்னு உணர்ந்தேன்.

நடுல ஒரு நாலு அஞ்சு மாசமா இண்டர்நெட்ல படம் பாக்க கூடாதுன்னு இருந்தேன். அதுனால தசாவதாரம், குசேலன் அப்பறம் எந்த படமும் பாக்கல.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

ரமணா ரொம்ப புடிச்சு ஒரு ரெண்டு நாளைக்கு அது பண்ண போறேன், இவனை போய் பாத்து இது பத்தி பேச போறேன், அது பத்தி பேச போறேன்னு எல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்பறம் சாதரணமா வாய மூடிகிட்டு உன் வேலைய பாருன்னு சொல்லி தலைல ரெண்டு தத்து தட்டி அடுத்த படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

இப்படி எல்லாம் படம் பாத்திட்டு ரொம்ப பீல் பண்ண கூடாதுங்கறதால பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற படம் எல்லாம் பாக்கவே இல்லை. மக்கள் எல்லாம் பாத்திட்டு ரொம்ப அழுவாச்சியா இருக்கு, அருமையா இருக்குன்னு சொன்ன அப்படியா சாமி நீயே வெச்சுக்கோ ரொம்ப சந்தோசம்னு விட்டுட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

எனக்கு தெரிஞ்சு பாட்சா வெற்றி விழால இருந்து இன்னைக்கு வரைக்கும் ரஜினி விடயம் ரொம்ப கஷ்டமா இருக்கு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

சமீபத்துலே வந்ததுலே தசாவதாரம் ரொம்ப புடிச்சு இருந்தது. ஆங்கில படம் மாதிரி நிறைய வேகமான கட்சிகள் எல்லாம் எடுத்து இருந்தது ரொம்ப புடிச்சு இருந்தது. ஒரு வேலை நான் அதிகமா ஆங்கில படம் பாக்க மாட்டேன்கரதால எனக்கு அது மாதிரி இருந்தததான்னு தெரியலை.

தொழில் நுட்பம்ல கதை அமைஞ்ச விதம்னு எடுத்துகிட்டா ஆயுத எழுத்து. மூணு கதைய அழகா மணி சார் சொல்லி இருப்பாரு. இது எதாவது ஆங்கில படத்துலே வந்து இருக்கான்னு எனக்கு தெரியலை.

அது மாதிரி 12B எடுத்த விதமும் நல்லா இருக்கும். அதுவும் அந்த ஏழாவது நிமிஷம் பார்த்திபன் பேசறது நல்லா இருக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாசிப்பேன். இன்டர்நெட் மற்றும் கிசு கிசு அவ்ளோ தான். இப்போ இவங்க எல்லாம் செய்யற அரசியல். படிச்சு வருத்தம் மட்டும் பட்டுப்பேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?

சினிமா இசை ரொம்ப சாதரணமா கேட்டுகிட்டு இருந்தேன். அப்பறம் ஒரு தோழி அறிமுக படுத்தி பாடல்கள் ரொம்ப விரும்பி மற்றும் அனுபவிச்சு கேக்க ஆரம்பிச்சேன். அதை எல்லாம் ஒரு தனி ப்ளாகா போடனும்னு ஆசை. 'டேய், இருக்கர ஒரு ப்ளாக மொதல்ல ஒழுங்கா எழுதி பழகு, அப்பறம் மத்ததை பாத்துக்கலாம்னு ' உள்ளே இருந்து நம்ம அண்ணே சொன்னாரு. சரின்னு விட்டுட்டேன்.

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

என்னோட ஒரு நண்பர்கள் கூட ஒரு ரெண்டு ஹிந்தி படம் போய் இருக்கேன். அப்பறம் இங்கே வெளிநாட்டுக்கு வந்த அப்பறம் சில ஆங்கில படம் பாத்து இருக்கேன்.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

'The Beautiful Mind' படத்துலே இந்த காட்சி ரெண்டு தடவை வரும். படத்தோட ஹீரோ வாத்தியார் கூட பேசிட்டு போய்கிட்டு இருப்பாரு அப்போ ஒரு பேராசியருக்கு எல்லாரும் மரியாதை செலுத்திகிட்டு இருப்பாங்க. ஒரு தடவை வாத்தியார் ஹீரோவுக்கு அதை காட்டுவார். அதே விஷயம் ஹீரோவுக்கு படத்துலே கடைசில நடக்கும். அப்படியே புல் அரிச்சு போச்சு எனக்கு.

இதுவும் எதோ நம்ம ஊர் செண்டிமெண்ட் மாதிரி தான் இருந்தாலும் அந்த காட்சி இன்னும் அப்படியே கண்ணுலையே இருக்கு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லவே இல்லை. சோ அப்பீட்டு. அட ‘Cho’ இல்லீங்க ‘So’

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர் காலம் நல்லா இருந்து ஹிந்தி சினிமாவை விட நம்ம தமிழ் சினிமா உலகம் முழுக்க பேசபடனும்னு ஆசை.

ஆனா அவுங்களும் என்ன பண்ணுவாங்க யோசிச்சு பாருங்க. மாறுதலா வேணும், மாறுதலா வேணும்னா. எவளோ மாறுதல் தான் பண்ண முடியும். ஒரு வெஜ் சாப்பிடரவங்களை எடுத்துகோங்க, சாம்பார், புலி கொழம்பு, ரசம் வேணும்னா இதுலே மாத்தி காய்கறி போட்டு சமைக்கலாம். இல்லையா உப்புமா, கிச்சடி, பொங்கல்னு எதாவது கொஞ்சம் மாறுதலா பண்ணலாம். கடைசியா சுத்தி சுத்தி அதே சாம்பாருக்கு ஒரு நாள் வந்து தான் ஆகணும். ரொம்ப அசிங்கமாவும், தவறான கருத்துகளையும் சொல்லமா இருந்தாலே போதும்.

ஏற்கனவே தமிழ் சினிமா காதல், கல்லூரி வாழ்க்கை, பெண் இதை பத்தி எல்லாம் எவ்ளோ தவறா எடுக்க முடியுமோ எடுத்துட்டாங்க. கொஞ்சம் மனிதாபிமானத்தோட படம் எடுத்தாலே போதும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நிம்மதியா இருக்கும். ஆனா அதை நம்பி இருக்கற நிறையா பேரு வேலை வாய்ப்பு இல்லாம போய்டுவாங்கலோன்னு தோணுது. அதோட மெகா சீரியலும், ரியாலிட்டி ஷோவும் இன்னும் பாடா படுத்திடும்னு தோணுது.

இதுக்கு மேல நான் எழுத கூப்பிட யாருமே இல்லை. என்ன எல்லாரும் எழுதிட்டாங்க எனக்கு தெரிஞ்சு. அப்படி எழுதாம இந்த பதிவை படிக்கற ஆத்மா எதாவது இருந்தா நீங்களும் எழுதுங்க ப்ளீஸ்.

எழுதாத ஆத்மா

1. அவியல் செல்வி நம்ம ராப் அக்காவோட அக்கா.

2. சுந்தர் இன்னும் எழுதலை, ஆனா யாரோ முன்னாடியே உங்களை கூப்பிட்டு இருந்தாங்க.

3. ரம்யா


எச்சரிக்கை :

இன்னும் எழுதாமல் இருக்கும் அப்துல்லா அண்ணனை வன்மையாக கண்டிக்கிறேன். :) நாங்க எழுதிட்டோம் அது எப்படி உங்களை விடுவோம் :) :)


குறிப்பு :

ரொம்ப சீக்கரமா எழுதினதுக்கு என்னை மன்னிச்சுகோங்க :)
28 Responses
  1. அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன்

    அப்பயே ஆரம்பிச்சாச்சா


  2. SK Says:

    அதுக்கு தானே போறது :) :)


  3. rapp Says:

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எவ்ளோ நாள் கழிச்சு எழுதறீங்க?


  4. rapp Says:

    அப்டி என்ன அந்த த பியூட்டிபுல் மைண்ட்ல இருக்குன்னு நெறயப் பேருக்கு அது பிடிக்குது?:):):)


  5. rapp Says:

    //'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்'.//

    நான் போனதரம் சென்னை வந்தப்போ நாப்பது ரூபா சிடியில் ஒண்ணா இதையும் வாங்கிட்டு வந்தேன்:):):)


  6. rapp Says:

    எனக்கும் தசாவதாரம் பிடிச்சிருந்தது:):):)// அதை எல்லாம் ஒரு தனி ப்ளாகா போடனும்னு ஆசை.//
    கண்டிப்பா செய்ங்க, ரொம்ப இன்டிரெஸ்டிங்கா இருக்கும். பாடல்கள் வெச்சு எத்துனை பிளாக் ஆரம்பிச்சாலும் போரடிக்காது. அவ்ளோ, சூப்பரா இருக்கும்:):):)


  7. SK Says:

    அந்த படம் மொதோ தடவை பக்கும் போது ஒரு மாதிரி இருந்தது ஆனா மனசுலே நச்சுனு நின்ன சீன் இது தான் :) :)


  8. /சரியான வயது நினைவில் இல்லை. ஆனா முதல் வகுப்போ ரெண்டாம் வகுப்போ படிக்கும் போதுன்னு தோணுது.//

    அப்போ 10 வயசுலனு சொல்லுங்க..

    //
    இப்போ ரொம்ப நாள் கழிச்சு துரைன்னு நம்ம அர்ஜுன் அண்ணே படம் இண்டர்நெட்ல பாத்தேன்.//

    கிர்ர்ர்ர்ர்...டாக்டர் என்ன சொன்னாரு? சரியாயிடுச்சா?

    //ஆயுத எழுத்து. மூணு கதைய அழகா மணி சார் சொல்லி இருப்பாரு. இது எதாவது ஆங்கில படத்துலே வந்து இருக்கான்னு எனக்கு தெரியலை//

    Amores Perros

    //அது மாதிரி 12B எடுத்த விதமும் நல்லா இருக்கும். அதுவும் அந்த ஏழாவது நிமிஷம் பார்த்திபன் பேசறது நல்லா இருக்கும்.//

    இது run lola run என்ற படத்தின் தழுவல்..(கதையல்ல,அந்த ஐடியா)


  9. SK Says:

    எல்லாமே காப்பி தானா

    அட கொக்க மக்கா


  10. SK Says:

    Ameros Perros

    அப்படிங்கறது ஆங்கில படமா, ஸ்பானிஷ் படமா


  11. எஸ் கே!!!

    இப்போத்தான் பார்த்தேன்! :) நன்றி. நான் திரும்பவும் வந்து உங்களை நாலு கேள்வி கேக்கிறேன் :)


  12. ****- இ. என்ன உணர்ந்தீர்கள்?

    அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன் ****

    That is hilarious, SK! LOL!!!


  13. ***கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

    குசேலன்.***

    நீங்களும் என்னோட சேர்ந்த தமிழின துரோகியா?! :) :) :)


  14. ****3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    இப்போ ரொம்ப நாள் கழிச்சு துரைன்னு நம்ம அர்ஜுன் அண்ணே படம் இண்டர்நெட்ல பாத்தேன்.

    என்ன உணர்ந்தேனா ஏன்டா பாத்தேன்னு உணர்ந்தேன்.****

    பயங்கரமா சிரிரிப்பு வருது எஸ் கே! :) :)


  15. ****11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

    நிம்மதியா இருக்கும். ஆனா அதை நம்பி இருக்கற நிறையா பேரு வேலை வாய்ப்பு இல்லாம போய்டுவாங்கலோன்னு தோணுது. அதோட மெகா சீரியலும், ரியாலிட்டி ஷோவும் இன்னும் பாடா படுத்திடும்னு தோணுது.****

    எஸ் கே!!

    I just LOVED your answers! You are very funny and sensible as well!


  16. ரமணா ரொம்ப புடிச்சு ஒரு ரெண்டு நாளைக்கு அது பண்ண போறேன், இவனை போய் பாத்து இது பத்தி பேச போறேன், அது பத்தி பேச போறேன்னு எல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்பறம் சாதரணமா வாய மூடிகிட்டு உன் வேலைய பாருன்னு சொல்லி தலைல ரெண்டு தத்து தட்டி அடுத்த படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

    நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..


  17. //அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன்//
    LOL!
    ரொம்ப வெளிப்படையா இருக்கு. அப்பப்போ எழுதுங்க!

    என்னையும் ஞாபகம் வச்சி கூப்டதுக்கு நன்றி. இந்த வாரக்கடைசியில் எழுதறேன்.


  18. SK Says:

    ரொம்ப நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா, ராப் அக்கா :-), கார்க்கி, வருண், ஸ்ரீதர்கண்ணன், சுந்தர்

    ராப் அக்கா, உங்க அக்கா கிட்டே சொன்னீங்களா. :-)

    சுந்தர், நன்றி. எழுதுங்க. அதுக்காக காத்து இருக்கேன்.

    ஸ்ரீதர்கண்ணன், முதல் வருகைக்கு நன்றி.


  19. Arizona penn Says:

    ஆஹா !!! மாட்டி விட்டுட்டாய்ங்கப்பா....மாட்டி விட்டுட்டாய்ங்க....ஏன் SK ???? ஏன்???
    இந்த சங்கிலி தொடரிலிரிந்து நான் மட்டும் தப்பிச்சிட்டேன்னு சந்தோஷப்படும் போதே ஆப்பு வெச்சிட்டீங்களே??? ம்......ஏதோ எனக்கு தெரிஞ்ச பதில்களை நானும் எழுதறேன்....கொஞ்சம் டைம் குடுங்க....


  20. Arizona penn Says:

    ஆஹா !!! மாட்டி விட்டுட்டாய்ங்கப்பா....மாட்டி விட்டுட்டாய்ங்க....ஏன் SK ???? ஏன்???
    இந்த சங்கிலி தொடரிலிரிந்து நான் மட்டும் தப்பிச்சிட்டேன்னு சந்தோஷப்படும் போதே ஆப்பு வெச்சிட்டீங்களே??? ம்......ஏதோ எனக்கு தெரிஞ்ச பதில்களை நானும் எழுதறேன்....கொஞ்சம் டைம் குடுங்க....


  21. RAMYA Says:

    "அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன்"

    அது மட்டுமா முட்டைபூச்சி கடி மறந்து விட்டீங்களே SK. விசில் அடிக்கலாம் அதை மறந்துட்டிங்களே SK. மற்றபடி அருமை, நல்லா எழுதி இருக்கீங்க. தொடரவும்.

    ரம்யா


  22. SK Says:

    செல்வில்கி,

    அது எப்படி அவளோ சுலபமா விடுவோமா ?? :-) :-)

    ரம்யா,

    உங்களை தான் எழுத கூப்பிட்டு இருக்கேன். நேரம் இருக்கும் போது எழுதுங்க .-)



  23. நானும் எழுதிட்டேன்!


  24. பதிவு நல்லா இருக்கு ...


  25. SK Says:

    ராப் :-)

    சுந்தர், இந்தா வர்றேன் :)

    நன்றி உ. அ.


  26. Thamira Says:

    ஒற்றன் வாதகோடாரியை பார்த்து புலிகேசி : புளிச்சு மாமங்கமான செய்தியை கொண்டு வந்துவிட்டு .. பேச்சைப்பாரு? இவ்ளோ நாளா எங்கே போனே..?

    வாதகோடாரி : மச்சான் வீட்ல விருந்தை உண்டு சிறப்பித்துவிட்டு வந்தேன் மன்னா..


  27. SK Says:

    தாமிரா அண்ணே,

    எழுதலைனா எழுதலைன்னு திட்டுரீங்க
    எழுதினா புளிச்சு போன சேதின்னு சொல்லுறீங்க..

    அவ்வ்வ்வ்